இராவணன் யார்?
இராவணன் யார்? என்ற கேள்வியுடன் இந்த பதிவை எழுதுகிறேன். இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து பலரின் தேடலுக்கும் வித்திடவேண்டும் என்பதே நோக்கம்.
தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந்தியர்களின் தலமையில் பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வந்திருக்கிறது. எல்லாவழிகளிலும் உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தியாக தமிழினம் இருந்ததனால் அதை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பங்களில் இருந்து நடந்திருக்கின்றன என்பதை வரலாற்று சிதைப்புகளில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன்.
இராவணன் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன.
இராவணனைப் பற்றி தமிழில் இணையத்தில் தேடினால் வருவது எல்லாம் சினிமா சம்மந்தப்பட்ட தகவல்களும் தேவையற்ற பல தகவல்களும்தான். இதனில் இருந்து இராவணனை பற்றி எந்த அளவு தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இராவணனைப்பற்றி எத்தனை பேர் தேடியிருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.
இராவணனின் அடுத்த பிறப்புதான் "புத்தர்" என சொல்லும் சிங்கள சமூகம் சிங்களவர்களை காக்கத் தான் இராவணன் புத்தராக பிறப்பெடுத்ததாக சொல்கிறது. இராவணனை சிங்கள மன்னன் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலர் இன்னமும் சொல்லிவருவதோடு அந்த தகவல் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுவருகிறது. இராவணனை கொன்றதை (சிங்கள மன்னனை) தமிழ் மக்கள் கொண்டாடுவதாகவும் அதைதான் தீபாவளி என்கிறார்கள் என்றும் சிங்கள தலைமுறைகளுக்கு வரலாறு திரிபுபடுத்தப்படுகிறது.
இராவணனை சிங்களவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கான அரசியலை பிறிதொரு பத்தியில் பேசுவோம்.
இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.
சிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று இருக்கும் "சிகிரியா" இராவணனின் காலத்தில் ராவணனின் "புட்பக விமானம்" இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். இராவணன் பாவித்த புட்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் "பபிலோனா பூந்தோட்டம்" அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் "லங்காபுர" என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் "ஈழத்தில்" இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு. இது குறித்து யாரிடனமாவது தரவுகள் இருப்பின் மறக்காமல் இங்கு பதிவு செய்யவும்.
முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அது போக இராவணன் இராமனால் கொல்லப்படவில்லை என்றும் கோமா நிலையில் இருக்க கூடிய இராவணனின் உடல் சிவனொளிபாதமலையை அண்டிய அடந்த காட்டுப்பகுதியில் இருக்கலாம் என்பது சிங்களவர்களின் நம்பிக்கை.
இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.
இருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.
இங்கு சில இணைப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தரம் படித்து பாருங்கள். உங்கள் கருத்துகளை பகிருங்கள். இந்த இணைப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரலாறுகளை தேடும் ஆர்வலர்களை இங்கு கொண்டுவாருங்கள். நாங்கள் அறியத் தவறிய வரலாறுகளை இனியாவது தேடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக