சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
மச்சமானது
* உள்ளங் காலின் வலது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் நூறு வயது உடையவனாக இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் பாவமுள்ளவனாயிருப்பான்.
* புறங்காலின் வலது பக்கத்தின் நடுவில் இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாயிருப்பான்.
* கணைக்காலின் வலது பக்கத்தல் இருக்கப் பெற்றவன் அழகுள்ளவனாயிருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்காலில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாயிருப்பான். இடது முழங்காலில் இருக்கப் பெற்றவன் அலைச்சல் உள்ளவனாயிருப்பான்.
* வலது துடையில் இருக்கப் பெற்றவன் நன்மை உள்ளவனாயிருப்பான். இடது துடையில் உள்ளவன் தீமை உள்ளவனாய் இருப்பான்
* வலது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பரதார நோக்கமுள்ளவனாயிருப்பான் (இங்கே பரதார – பல தார என்று இருப்பதாக தோன்றுகிறது). இடது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பெண் ஆசை இல்லாதவனும், ஞானியாகவும் இருப்பான்.
* முதுகின் நடிவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான், வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக செல்வம் உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான்.
* இடது விலாவில் இருக்கப் பெற்றவன் போகமற்றவனாய் இருப்பான், வலது விலாவில் இருக்கப் பெற்றவன் போகம் அற்றவனாகவே இருப்பான்.
* நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வெற்றியுள்ளவனாய் இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சுகமற்றவனாக இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
* வயிற்றின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வியாதி உள்ளவனாய் இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் கபடு உள்ளவனாய் இருப்பான்.
* மார்பின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் பெற்றவனாகவும் இருப்பான். வலது முலையில் இருக்கப் பெற்றவன் தன் மனைவியோடு அதிக ஒருமை உள்ளவனாக இருப்பான். இடது முலையில் இருக்கப் பெற்றவன் சுக போசனமுள்ளவனாய் இருப்பான்.
* வலது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், வெற்றியும் உள்ளவனாக இருப்பான். இடது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், பயமும் உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் வசீகரமுள்ளவனாக இருப்பான். இடது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் பகை உள்ளவனாய் இருப்பான். வலது முன் கையில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாய் இருப்பான். இடது முன் கையில் இருக்கப் பெற்றவன் வலிமை உள்ளவனாய் இருப்பான். வலது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் விதரணம்(ஈகை) உள்ளவனாய் இருப்பான், இடது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது:- பெருவிரல் – ஞானம், சுட்டு விரல் – அறிவுள்ளவன், நடுவிரல் – தீர்க்காயுள், அணிவிரல் (மோதிர விரல்) – பூஷனமுள்ளவன், சிறு விரல் – நன்மை.
* இடது:- பெருவிரல் – பாவி, சுட்டு விரல் – மந்த குணம், நடுவிரல் – அற்ப ஆயுள், அணிவிரல் – வறுமை, சிறு விரல் – மலடு.
* வலது புறங்கையில் இருக்கப் பெற்றவன் பெருமை உள்ளவனாக இருப்பான், இடது புறங்கையில் இருக்கப் பெற்றவன் கிலேச முள்ளவனாக (ஆலோசகர்) இருப்பான்.
* வலது அக்குளில் இருக்கப் பெற்றவன் விதரணம் உள்ளவனாகவும், இடது அக்குளில் இருக்கப் பெற்றவன் வெகு கபடதாரயாய் இருப்பான்.
* வலது கழுத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் உள்ளவனாகவும், இடது கழுத்தில் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாகவும் இருப்பான்.
* வலது கன்னம்: செல்வமும், அலைச்சலும் உள்ளவனாக இருப்பான், இடது கன்னம்: வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது தாடையில் இருக்கப் பெற்றவன் போகமுடையவனாக இருப்பான், இடது தாடையில் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக (ஆலோசகர்) இருப்பான். நடுத்தாடையில் இருக்கப் பெற்றவன் ஆயுள் உள்ளவனாக இருப்பான். கீழ் தாடையில் இருக்கப் பெற்றவன் போஜனப் பிரியன் (சாப்பாட்டு ராமண்).
* வலது மேல் காதில் இருக்கப் பெற்றவன் சொற்ப செலவு உடையவனாக இருப்பான், இடது மேல் காதில் இருக்கப் பெற்றவன் தூஷனை (அவதூறு பேசுபவன்) சொல்பவனாக இருப்பான். காதில் நடுவில் இருக்கப் பெற்றவன் சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பான்.
* மூக்கின் வலது பக்கம் – செல்வந்தன், இடது பக்கம் – வறுமையில் வாடுவான். மூக்கின் நடுவில் – சொற்ப செல்வம் பெற்றவனாக இருப்பான்.
* வலது கண்ணில் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் நல்ல புத்தி உடையவன், இடது கண்ணின் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் வெகு காமம் உள்ளவனாக இருப்பான்.
* வலது புருவத்தில் இருக்கப் பெற்றவன் நல்ல உருவங்களை காணத்தக்க குணமுடையவன். இடது புருவத்தில் இருக்கப் பெற்றவன் விகார உருவங்களை காணத்தக்க குணமுடையவனாக இருப்பான்.
* நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான். நடு நெற்றி – தீர்க்காயுள்.
* வலது செவியில் இருக்கப் பெற்றவன் சதா காலமும் ஞான விருப்பம் உள்ளவனாக இருப்பான். இடது செவியில் இருக்கப் பெற்றவன் பழி சொல்லையும், பொல்வார்த்தையையும் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பான்.
நூல்: சுப்ரமணிய சுவாமி அகத்திய முனிவருக்கு அருளிய “புருட சாமுத்ரிகா லக்ஷணம்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக