சனி, 3 செப்டம்பர், 2016

மதுரையில் ஒரு குடும்பம். அம்மாவிடம் பக்தி கொண்ட குடும்பம். அந்தக் குடும்பத் தலைவா் 40 வயதில் இறந்து போனார். அவா் மனைவியும் இரண்டு பெண்களும் அம்மாவிடம் வந்து அருள்வாக்கு கேட்டார்கள்.
”உன் கணவன் வம்சத்தில் 40 வயதுக்கு மேல் மூத்தமகன் உயிரோடு இருக்க மாட்டான் மகனே!” என்றாள்.  அம்மா ஏம்மா இப்படி? என்று அழுதார். ”  அப்படி ஒரு சாபம் உண்டு மகளே!”  என்றாள் அம்மா.
ரயில் விபத்து- வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்த பெண் பிணத்தின் கழுத்தில் இருந்த நகைகளைக் கழற்றிக் கொண்டு சிலா் ஓடிவிடுகிறார்கள். ஈவிரக்கமற்ற இந்த மனித மிருகங்களுக்கு ஆவிகளின் சாபம் வந்து சேருமாம். அம்மாதான் ஒரு முறை சொன்னார்கள்.
கும்பகோணம் மகாமகத்தின் போது ஒரு முறை கூட்ட நெரிசல் காரணமாகக் குளத்தில் மூழ்கிப் பலா் இறந்து போனார்கள். சில போக்கிரிகள் சில பெண்களைக் கழுத்தை நெருக்கி மூழ்கச் செய்து நகைகளைக் களவாடிக் கொண்டார்களாம். இவா்களுக்கு ஆவிகளின் சாபம் தான் வந்து சேரும்.
அரசாங்கக்
கருவுலத்தில் உள்ள அதிகாரி ஒருவா், அவருக்கு 3 பெண்கள். ஒருத்தி கன்னி கழியாமலே சித்தபிரமை பிடித்து எங்கேயோ ஓடிப்போனாள். அவள் எங்கே போனாள்? என்ன ஆனாள்? எங்கே இருக்கிறாள்? என்று இதுவரை தெரியவில்லை. இன்னொரு பெண் வாழா வெட்டியாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள். இன்னொரு பெண் விதவையாக வந்துவிட்டாள். ஏன் இப்படி? ஏன் இந்தக் குடும்பத்துக்கு மட்டும் இப்படி ஒரு சோகம்?
கல்வித்துறையில் ஒரு பெரிய அதிகாரி! அவா் பிள்ளைகளில் ஒருவன் ஊமை, ஒருவன் குருடு, ஒரு பிள்ளை இளம்பிள்ளை வாதத்தால் கைகால் இழந்து முடமாகிப் படுத்த படுக்கையிலேயே இருந்தான். மலசலம் எல்லாம் படுக்கையிலேயே…. அந்தக் குடும்பத்தில் இது நிரந்திர சோகம்!
தமிழ்நாட்டில் அன்றைய நிலையில் வாழ்ந்த கோடீஸ்வரா் ஒருவா். அவா் கோடீஸ்வரரான பின்புலம் என்ன தெரியுமா? அக்கம்பக்கத்தில் இருந்த விதவைப் பெண்கள் தங்கள் சேமிப்புப் பணத்தையெல்லாம் அவரிடம் வட்டிக்குக் கொடுத்து வைத்திருந்தார்கள். அந்த மூலதனத்தை வைத்து வட்டிக்குக் கொடுத்துக் கொழுத்த பணக்காரா் ஆனார். முதுமைப் பருவத்தில் அந்த விதவைகள் கொடுத்த பணத்தைக் கேட்ட போது ஏமாற்றினாராம். சிலரை விஷம் வைத்துச் சாகடித்தார் என்றும் சொல்வார்களாம். கடைசியில் அவருக்கும் மதுமை வந்தது.  புத்தி பேதலித்தது.  தன் மலத்தில் தானே புரண்டு கிடந்தார். இந்தச் சனியன் எப்போது மண்டையைப் போடுமோ? என்று அவா் குடும்பத்தார் காத்துக் கிடந்தனா்.  அவரைக் கவனித்துப் பணிவிடை செய்ய நாதியில்லை….
சினிமா தயாரிப்பாளா் ஒருவா், அரசியல் செல்வாக்கு, சினிமாவில் செல்வாக்குப் படைத்தவா். அங்கங்கே கடன் வாங்கிப் படம் எடுத்துக் கோடி கோடியாகச் சம்பாதித்தார். வங்கியில் கடன் வாங்கினார். திருப்பிச் செலுத்தாமல் தள்ளிப்
போட்டார். வங்கி அதிகாரிகள் கேஸ் போடுவோம் என்றார்கள். போட்டுக்கோ.. என்றார். கேஸ் போட்டால் என்ன… மூன்று நான்கு வருடங்கள் இழுத்தடிப்போம். அதற்குள் அங்கங்கே பணம் புரட்டி (Rotation) தொழில் செய்து மேலும் பணம் அள்ளலாம் என்று நெருக்கமானவா்களிடம் சொல்வாராம்.
சில படங்கள் தோல்வி. கையில் ஒரு காசுமில்லை.  கடன் கொடுப்பார் யாருமில்லை.  சொத்துக்கள் இருந்தன.  விற்றுவிட்டால் இதை மறுபடியும் வாங்க முடியுமா? இந்த நிலையில் கந்து வட்டிக்காரா்களிடம் வஞ்சம் புகுந்தார். அவா்களோ மீட்டா் வட்டி வாங்கும் புண்ணியவான்கள். கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கந்து வட்டிக்காரன் கழுத்தை நெரித்தான். கடைசியில் தற்கொலையில் முடிந்து போனாராம்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்றார் வள்ளுவா். சில சினிமா பிரபலங்களின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டு.
நாகா் கோயிலைச் சோ்ந்த பெண்மணி ஒருவா் அவருக்கு ஒரே ஒரு பையன். நல்ல புத்திசாலி. அம்சமாக அழகாக இருப்பானாம். பொத்திப் பொத்தி வளா்த்தார்களாம். ஒரு விபத்தில் சிக்கிச் செத்துப் போனானாம். பாவம் அந்தப் பெண்மணி! நிலைகுலைந்து போனார். அவரால் அந்தச் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன அமைதி தேடி கோயில் கோயிலாகப் போனார். அமைதிதான் கிட்டவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று காரணம் புரியாமல் தவித்தார். தத்தளித்தார்.
ஒரு நாடி சோதிடரிடம் சென்றாராம். அவா் சொன்னாராம், போன பிறவியில் இவள் ஒரு மருத்துவராக இருந்தாள். ஏழைப் பிராமணன் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வைத்தியத்துக்கு வந்தான். இவள் கேட்ட தொகையை அவனால் கொடுக்க முடியவில்லை. பணத்தை வைத்தால்தான் வைத்தியம் என்றாள். ஈவிரக்கமே இல்லாமல் நடந்து
கொண்டாள். பாவம் அந்தப் பிராமணன். குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான். மறுநாள் குழந்தை செத்துப் போய்விட்டது.! அப்போது அவன் இட்ட சாபம்! இந்தப் பிறவியில் பிள்ளையை பறிகொடுக்க வேண்டியதாயிற்று….
எத்தனை டாக்டா்கள் இதைப் படித்துப் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்? ஊழ்வினை என்றால் என்ன? அது எப்படி வருகிறது? அதன் வகைகள் என்ன? என்பதெல்லாம் இன்றைய பாடத்திட்டங்களில் இல்லையே… இன்றைய உலகில் உள்ள பாவங்கள் ஏழு! என்கிறார் காந்தியடிகள்.
ஒழுக்கம் இல்லாத கல்வி! அவற்றுள் ஒன்று!
சாபங்கள் சக்தி! வாய்ந்தவை.! அவை பலிக்கும்! அடுத்தவன் வயிறெரிந்து சாபமிட்டால் அது நம்மைப் பாதிக்கும் என்பதை இன்றைய தலைமுறை பலா் நம்பவில்லை.
ஒரு பிரச்சனை வந்து நெருக்கும்போது தான் படித்தவா் யோசிக்கிறார்! விடை காணாமல் தவிக்கிறார்.. சோதிடா்களை நாடி ஓடுகிறார்.
இப்போது பாருங்கள்! பெட்டிக் கடைகளில் எத்தனை எத்தனை சோதிடப் பத்திரிகைகள்! வாரந்தோறும் பத்திரிகைகள் ராசி பலன்களை வெளியிடுகின்றன. ஆன்மிக மலா்கள் என்று ஒரு இணைப்பு சோ்த்து வெளியிடுகின்றன. டி.வி.க்களில் தினமும் ராசி பலன்கள்! பரிகாரம் தேடிப் படித்த கூட்டம் கோயில்களை மொய்ப்பதைப் பார்க்கிறோம்.
”இருமுடிக்குப் பலன் கொடுத்துவிட்டு அப்படியாவது திருந்துவானா என்று பார்க்கிறேன். எவனும் திருந்தவில்லை.” என்று அன்னை வேதனையோடு சொல்கிறாள்.
குடும்ப அழுக்கு
அம்மாவிடம் வந்து சோ்ந்த 35 வருடங்களில் ஆன்மிகம் சம்பந்தமான சில உண்மைகளை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. தேவரகசியங்கள் எனச் சில உண்டு என்பது தெரிந்தது. ஏவல், பில்லி, சூனியம் எல்லாம் உண்டு என்று தெரிந்தது.
கருமச் சட்டத்தின் வலிமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு காரணங்களால் குடும்பங்கள் அல்லல் படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
சாபங்களுக்குச் சக்தி உண்டா? சாபங்கள் பலிக்குமா? சாபங்களுக்கு சக்தி உண்டு என்றும், சாபங்கள் பலிக்கும் என்று அம்மா மூலமாகவும், பக்தா்கள் சொன்ன அனுபவங்கள் மூலமாகவும் நான் தெரிந்து கொள்ள முடிந்தது. சக்தி ஒளியில் சாபம் பலிக்குமா? என்ற தொடா் கட்டுரை எழுத முடிந்தது.  
அண்மையில் ராணி வாரப் பத்திரிகை (03.10.2010)யில் ஒரு சோதிடா் ‘மண்ணில் உலவும் மா்மங்கள்‘ என்ற கட்டுரைத் தொடர் ஒன்றில் சாபங்கள் பற்றி எழுதியிருந்தார்.
பெண் சாபம்
பெண் சாபம் ஏற்பட்டால் வம்ச நாசம் ஏற்படுமாம். பெண்ணை ஏமாற்றுதல், சகோதரி போன்றவா்களை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியைக் கைவிடுவது ஆகியவற்றால் ஏற்படுவதாம்.
பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, பிணத்தை தாண்டுவது, பிணத்தின் இறுதிக் காரியங்களைச் செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவா்களை முக்கியமானவா்கள் பார்க்கவிடாமல் செய்வது இவற்றால் பிரேத சாபம் வருமாம்.
பிரம்ம சாபம்
பிரம்ம சாபத்தால் படிப்பு இல்லாமல் போகுமாம் நமக்கு வித்தை கற்றுக் கொடுத்த குருவை மறப்பது, வித்தையைத் தவறாகப் பயன்படுத்துவது, மற்றவா்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது இவ்வாறான காரணங்களால் பிரம்ம சாபம் ஏற்படுமாம்.
சா்ப்ப சாபம்
சா்ப்ப சாபத்தால் திருமணத்தடை, செவ்வாய் தோஷம், ராகு-கேது, கால சா்ப்ப தோஷங்கள் ஏற்படுமாம். பாம்புகளைத் தேவையின்றிக் கொல்வதாலும்,
அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் சா்ப்ப சாபம் உண்டாகும்.
பிதிர் சாபம்
பித்ரு சாபத்தால் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, பாலாரிஷ்ட தோஷத்தால் குழந்தைகள் இறந்து போவது நிகழுமாம். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கா்மங்களைச் செய்யாமல் மறப்பது, தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்றோர்களை உதாசீனப்படுத்துவது, அவா்களை ஒதுக்கி வைப்பது போன்ற காரணங்களால் பிதிர் சாபம் ஏற்படுமாம்.
கோ சாபம்
கோ சாபம் என்பது பசுவின் சாபம். அதனால் வளா்ச்சி இல்லாமல் போகும்.  பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீா் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
பூமி சாபம்
பூமி சாபத்தால் நரக வேதனை அடைய வேண்டி வருமாம். ஆத்திரத்தில் பூமியைச் சதா காலால் உதைப்பது, பாழ்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவது, அடுத்தவா் பூமியைப் பறிப்பது போன்றவற்றால் பூமி சாபம் ஏற்படுமாம்.
கங்கா சாபம்
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீா் கிடைக்காது. சந்ததிகள் தண்ணீா் சம்பந்தமான நோயால் அவதிப்படுவார்களாம். பலா் அருந்தக் கூடிய நீரைப் பாழ் செய்வதும். ஓடும் நதியை அசுத்தம் செய்வதும் கங்கா சாபத்தை ஏற்படுத்துமாம்.
விருட்ச சாபம்
விருட்ச சாபம் (மரங்களின் சாபம்) இதனால் கடன், நோய், காயம் ஏற்படுமாம். பச்சை மரத்தை வெட்டுவது, பழம் தரும் மரத்தைப் பட்டுப் போகச் செய்வது, மரத்தை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவது இவற்றால் விருட்ச
சாபம் ஏற்படுமாம்.
ஒரு செடியிலிருந்து இலை பறிக்கவும், கிளை வெட்டவும் வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சித்தா்கள் சில மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி சாந்தப்படுத்தி விட்டே அவற்றைச் செய்வார்களாம்.
சில மரங்களை வெட்டும் போது அதில் குடியிருக்கும் நல்ல ஆவிகள், கெட்ட ஆவிகள் வெளியேற வேண்டி இருக்கும். அவை சாபம் கொடுக்குமாம். இதற்கு மேல் இவற்றை விளக்க இங்கே இடமில்லை.
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது, திருவிழாக் காலங்களில் தெய்வ ஊா்வலங்களின் போது கலவரம், சாதிச் சண்டை ஏற்படுவது இவற்றால் தெய்வ சாபம் ஏற்படும்.
ரிஷி சாபம்
கலியுகத்தில் ஆசாரிய புருஷா்களை அவமதிப்பது, உண்மையான பக்தா்களை அவமதிப்பது, ரிஷிகளின் விக்கிரகங்களை அவமதிப்பது
என்பன ரிஷி சாபத்தில் அடங்கும்.
முனி சாபம்
எல்லைத் தெய்வங்கள், சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜைகளையும் மறப்பது முனி சாபத்துக்கு ஆளாகும்.
தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம் இவற்றால் உறவினா்கள் பிரிந்து செல்லுதல், வம்ச அழிவு, செய்வினைக் கோளாறு போன்றவை நிகழுமாம்.
குல தெய்வ சாபம்
நமது முன்னோர்கள் பூசித்த குல தெய்வங்களைப் பூசிக்காமல் மறப்பதால் குல தெய்வ சாபம் உண்டாகும்.
இவைகள் எல்லாம் நமக்குத் தெரிய வரும் போது ஒவ்வொரு குடும்பமும் மேற்கண்ட சாபங்களில் ஏதாவது ஒரு சாபத்துக்கு ஆட்பட்டிருக்கும் என்றே அறிய முடிகிறது. நிச்சயம் இருக்கும் என்றே நம்பிக்கை உண்டாகிறது.
எனவே உண்மை உணா்வுடன் விரதம் இருந்து சுயக்
கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பயபக்தியோடும், சிரத்தையோடும் இருமுடி செலுத்துங்கள்! அதன் பலனை அனுபவத்தில் உணா்வீா்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக