காலையில் சூரிய வணக்கம் சொன்னா... ரத்த அழுத்தம், புற்று நோய்க்கு
பை...பை
லண்டன்: சூரிய ஒளி உடலில் பட்டால், ரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய்
குறையும் என லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளார்கள்.
மனித உடலுக்கு சூரிய ஒளியால் வைட்டமின் டி சத்துக்கள் , மின்சாரம் உள்ளிட்ட
பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் தான்
நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு ஆரோக்கியமாக
வாழ்ந்து வந்துள்ளனர்.
தற்போது, சூரிய ஒளியால் நமது ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனம்
உற்பத்தி ஆகி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது என லண்டன் எடின்பரோ
பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தோல் புற்றுநோய்...
அமெரிக்காவில் வருடத்திற்கு சுற்றுச்சூழல் மாறுபாட்டால் 1,59,000 ஆயிரம்
பேர் இறக்கிறார்களாம். அவர்களில் 2,750 பேர் தோல் புற்று நோயாளிகளாம்.
கதிர்வீச்சு....
லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வெல்லர், இந்த
ஆய்வுக்காக 24 பேரை புறஊதா கதிர்வீச்சுக்கும், மேலும் சிலர் மின்விளக்கின்
ஒளிக்கும் என சரியாக 20 நிமிடங்கள் அமர வைத்தாராம்.
ஆய்வு என்ன சொல்லுதுனா...
ஆய்வின் முடிவில், மின்விளக்கின் ஒளிக்கு உட்படுத்தபட்டவர்களை விட புறஊதா
கதிர்வீச்சுக்கு உட்படுத்தபட்டவர்களின் ரத்த அழுத்த அளவு கணிசமாக
குறைந்திருந்தது தெரியவந்தது.
எப்படி செயல்படுகிறது...
சூரியஒளி உடலில் பட்டால் ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனம்
உற்பத்தி செய்கிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. மேலும்
திடீர் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது.
என்ன தாக்கங்கள்...
இந்த ஆய்வின் தொடர்ச்சியாக சூரிய ஒளியால் மாரடைப்பு மற்றும் தோல்
புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு எந்த விதாமான தாக்கங்கள் ஏற்படும் என்பது
குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
www.danvantarinadi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக