செவ்வாய், 20 செப்டம்பர், 2016


atharva-veda-8
கட்டுரையை எழுதியவர்;தன்வந்தரிநாடிஜோதிடம்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1530;
நான்கு வேதங்களில் மிகவும் மர்மம் நிறைந்தது அதர்வண வேதம். ஏனெனில் ஆதிகால மருத்துவ, விஞ்ஞான உண்மைகள், மாய மந்திர பில்லி சூனியங்கள் நிறைந்தது இந்த வேதம். துரதிருஷ்டவசமாக இதில் குறிப்பிடப்படும் மூலிகைகள், தாயத்துக்கள் ஆகியன வழக்கத்தில் இருந்து போய்விட்டதால் என்ன என்றே தெரியவில்லை. ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வரும் சோமக் கொடி பற்றியே நமக்கு தெரியவில்லை. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜில்காமேஷ் (சுமேரிய/ பாபிலோனிய) காவியத்தைப் படித்துப் புரிந்து கொண்டுவிடலாம். அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களை அறிவது கடினம். நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்க முடியும்.


ரிக்வேதத்தில் 107 மூலிகை பற்றி வரும் பாடல் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் அதில் 107 மூலிகைகள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. நம் வசமுள்ள சரக, சுஸ்ருத சம்ஹிதைகளையும், தமிழ் சித்த மருத்துவ நூல்களையும் வேதங்களையும் வைத்துக்கொண்டு கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்து ஆராய வேண்டும்.


சோம பானத்தைப் போதையூட்டும் மருந்து என்று வெளிநாட்டுக்காரர்கள் பிதற்றியுள்ளனர். ஆனால் பாண்டியர் தமிழ் கல்வெட்டோ அதை மனோசுத்த மருந்து என்கிறது. நம்மவர்கள் கீதை, குறள், ராமாயணம், மஹாபாரதம் எதையுமே படிக்காமல், சங்க இலக்கிய 30,000 வரிகளைப் படிக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் பல அபத்தங்களை எழுதி வருவது வருந்ததக்கது. முதலில் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். வெளி நாட்டுக்காரர் சொல்வதைவிட்டுவிட்டு, நம்மவர் அது பற்றி என்ன சொன்னார்கள் என்று முதலில் அறிய வேண்டும்; நம்ப வேண்டும். அப்படிச் செய்தால் புரியாத புதிர்கள் விடுபடும். மர்மங்கள் துலங்கும்!


atharva__veda__samhita_

இதோ ஜங்கிடா மர்மங்கள்:-

ஜங்கிடா என்பது ஒரு மூலிகை என்றும் பல வியாதிகளுக்குக் கைகண்ட மருந்து என்றும் கீத், மக்டொனல் இருவரும் எழுதிய வேதப் பொருளகராதி (வேதிக் இண்டெக்ஸ்) கூறுகிறது. அவர்களே இது என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று ஒப்புகொண்டுவிட்டு கௌசிக சூத்திரத்தில் வரும் குறிப்பில் இதை காலண்ட் என்பவர் “டெர்மினாலியா அர்ஜுனா” -- என்ற தாவரம் என்று சொல்வதாகவும் குறித்துள்ளனர். டெர்மினாலியா அர்ஜுனா என்பது மருத மரம் ஆக்கும்.

மூன்று மருத மரங்களும் மூன்று மாணிக்கங்களும் என்ற எனது கட்டுரையில், ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனம்), திருவிடை மருதூர் (மத்யார்ஜுனம்), திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) ஆகிய தலங்களில் உள்ள மருத மரங்கள் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

ஆனால் தேவி சந்த் என்பவர் எழுதிய அதர்வண வேத புத்தகத்தில் ஒரு இடத்தில் ஜங்கிடா என்பது கடவுளைக் குறிக்கும் என்று எழுதிவிட்டு பிற இடங்களில் மூலிகை என்று மொழி பெயர்க்கிறார். சாயணர் என்ற  பெரிய மகான் தான் 700 வருடங்களுக்கு முன் துணிந்து வேதங்களுக்குப் பொருள் எழுதினார். அவர் இந்த ஜங்கிடா என்பது காசி மாநகரத்தில் உள்ள ஒரு மரம் என்கிறார்.

 Terminalia_arjuna-1
மருத மரம் (விக்கிபீடியா படம்)

இது இருதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்களைக் குணப்படுத்தும் என்று தெரிகிறது. மருத மரம் குறித்து வெளியான பல மருத்துவ நிபுணர்களின் கட்டுரைகள் இது இருதய மற்றும் ரத்த நாளம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் என்று எழுதியுள்ளனர். ஆயினும் அவர்களுடைய ஆய்வுகள் முடிவானவை அல்ல. எதிரும் புதிருமாக முடிவுகள் வந்தால் மருத்துவ உலகம் அதை ஏற்காது. வேறு சிலர் ஜங்கிடா என்பதை வேறு சில மூலிகைகளுடன் தொடர்புபடுத்திக் கட்டுரை எழுதியுள்ளனர்.

வேதங்களில் குறிப்பிடப்படும் நூற்றுக்கணக்கான மூலிகைகள், நோய்களின் பெயர்கள் எல்லாம் ஊகத்தின் பெயரிலேயே எழுதப்பட்டுள்ளதால் யார் சொல்வதையும் உண்மை என்றோ தவறு என்றோ சொல்ல முடியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதையுமே கேள்விக்குறியாக தொக்கி நிற்கும் வகையில் எழுதிவிட்டு சோம பானம் என்பது மட்டும் என்ன என்று “கண்டுபிடித்துவிட்டதாக” சில வெளி நாட்டினரும் அதைக் கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் சொல்லும் நம்மூர் பகுத்தறிவுகளும் நகைப்புக்குரியவர்கள் என்பது வேதங்களைப் படித்தோர் அறிவர். இனம் இனத்தோடு சேரும். மது, மாது, மாமிசம், போதைப் பொருளில் மூழ்கிக் கிடக்கும் வெளிநாட்டினருக்கு நம் கலாசாரம் எப்படிப் புரியும்? மாக்ஸ்முல்லர் போன்ற பலர் இந்தியாவுக்கு வரமலேயே நம் வேதங்கள் பற்றி எழுதினர்!! நியுயார்க்கிற்குப் போகாமலேயே மேலூர் கொட்டாம்பட்டி முனிசாமி “உலகிலேயே உயரமான கட்டிடங்கள்” என்று புத்தகம் வெளியிட்டால் அதை தமாஷ் இலக்கிய வகையில் சேர்க்கலாம் அல்லவா!!


 terminalia arjuna
Marutha maram= Terminalia arjuna

மேலும் இந்தியா வந்த வெளிநாட்டினருக்கும் உதவியோர் அரைகுறை ஆங்கிலம், அரைகுறை வேத சம்ஸ்கிருதம் அறிந்தவர்களே. ஆகையால் அவர்கள் மொழிபெயர்ப்பும் அரைகுறையே. ரமணர், ராம கிருஷ்ணர், காஞ்சி மஹா சுவாமிகள், சிருங்கேரிப் பெரியவர் போன்ற உத்தமோத்தமர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பினால் போதும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதங்களை உள்ளது உள்ளபடி காப்பது நமது கடமை. மனித இனத்தின் முதல் புத்தகம் அது. சுமேரிய எகிப்திய இலக்கியங்களை எல்லாம் படித்தோர்கூட வேதங்களை ஊகிக்கத்தான் முடிகிறது, பொருள் சொல்ல முடியவில்லை. ஆயினும் வேதங்களால் பலன் இல்லாமல் இல்லை.

டெலிவிஷனும். மொபைல் போனும் எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியாது ஆயினும் அவைகளைப் பயன்படுத்திப் பயன் அடைகிறோம். இது போல வேதங்களையும் நம்பிக்கையுடன் ஓதினால் பலன் உண்டு.

Flowers_with_Sykes's_warbler_I_IMG_1880
 மருத மரம்

காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்கிறார்: கண் தெரியாதவன் ஒருவன் கையில் விளக்கைக் கொண்டு சென்றான். எல்லோரும் கேட்டார்கள், உனக்கோ கண் தெரியாது, எதற்கப்பா விளக்கு? என்று. அவன் சொன்னான், “உண்மைதான் எனக்குக் கண் தெரியாது. இருட்டில் நீங்கள் என்மீது விழுந்து விடக் கூடாதல்லவா? அதற்காகத்தான். இது போலவே நாமும் அர்த்தம் தெரியாதபோதும் வேதம் என்னும் ஒளி விளக்கை ஏந்திச் செல்வோம். அதன் பொருள் தெரிந்த மகான்கள் யுகந்தோறும் அவதரித்து நம்மை வழிகாட்டிச் செல்வர்” (பெரியவர் சொன்ன சொற்கள் எனக்கு அப்படியே ஞாபகம் இல்லை. நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன்) by.www.danvantarinadi.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக