குல தெய்வ சாபம் என்றால் என்ன ?
1
சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை
முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி
நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட
தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன்
உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட
தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த
கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது
தம்பதியருக்கும் பொருந்தும்.)
4
கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று
சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு
வழிவகுக்கும்.
5
பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம்
இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு
கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6
கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும்,
சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து
கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ
சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8
தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை
நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9
சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம்
என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட
வாய்ப்பு உண்டு.
10
ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும்
செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக