செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலை

வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன்படுத்தும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை, வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் உடல் மன பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்தரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் "ஹிப்னாடிஸத்தை" நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று "ரெய்கி மருத்துவம்" நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் "டெலிபதி" முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்த முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி? எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன்படுத்தப்படுகிறது.

                           காதல் வெற்றிக்காக, காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற - வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை "ஸ்ரீ தேவி யட்சணி மகாத்மியம்" சொல்கிறது.

                                               "ஸ்ரீதேவியட்சணி மகாத்மியம்" சொல்லும் அடிப்படையில்  நோக்கும் போது திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது, வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்ட பெண்ணை வசியம் செய்யகூடாது, உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது, தன்னை விட மூத்த வயது பெண்ணை வசியம் செய்ய கூடாது, அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது, அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய கூடாது. சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது. "வைஜெயந்தி உபாசனை" செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது. இத்தகைய பெண்களை தவிர்த்து பிற பெண்களுக்கு தான் வசியத்தை பிரயோகிக்க முடியும்.

அதே போல பெண்களும், திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது, குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது, விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது, (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன).

 காதலில் வெற்றி பெற யட்சணி  உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி "மதன மேகலா லக்ன பீடம்" வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும். மதன மேகலா விஸ்ரூப யட்சிணி என்பது  நீர், காற்று, நிலம், நெருப்பு, ஆகாயம் போன்ற இயற்கை சக்தியின்  அட்ச அம்சம் கொண்டது. "மதன மேகலா லக்ன பீடம்" ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது.  இதன் உள்ளே ரதி - மன்மத வசிய சக்ரமும், விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடை ஏதுவும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி பிடித்தபடி, "ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா" என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரி பூரண வெற்றியை கொடுத்திருக்கிறது.

இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம், மதனகாமப்பூ, வெண்குன்றி மணி, சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு "வீணா யட்சணி"  மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசியம் செய்யமுடியும்.

மரமஞ்சள், கஸ்தூரி, தாழம்பூ இதழ், கல்மதம், பாதிரி, வெண்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை மரப்பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பால்புரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் "உச்சிஷ்ட மதன கன்னிகா யட்சணி"  அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று "யட்சிணி வசிய நிகண்டு" என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் செய்யும்  நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சாங்கக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வித்வ பிரயோகம் :

குடும்ப பிரச்சனைகள் தீர, கணவன் - மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. "வித்வ பிரயோகம்" எனப்படும் பூதப் பிரேத பைசாச பிரயோகங்கள், துர் தேவதைகள், யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களை கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தியை கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. பொதுவாக கணவன் - மனைவிக்குள் பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் மூன்று வித வழிகளை பயன்படுத்துவதுண்டு. ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும்  கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனதை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்க செய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்களை அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும்.

அஸ்ரஸ்வதம் :
கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சு தன்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். அஸ்ரஸ்வத பிரயோகத்தால்  கணவன் மனைவி தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் நிலையில் பாதிப்புகள், சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகி பிரிந்துவிடும்  நிலை ஏற்படும். அஸ்ரஸ்வத முறையை பயன்படுத்தும் போது கணவன் - மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்ணங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் ஒருவரை விட்டு ஒருவர் விலகி செல்லும் நிலை ஏற்படும்.

அந்தராசனம் :
அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும். ஒழுக்கமாக வாழும்  பெண் அல்லது ஆணுக்கு, வேறு ஆண் அல்லது பெண்ணோடு தொடர்பு மற்றும் தகாத உறவுகள் ஏற்பட்டு அதனால் அவர்களின் குடும்பத்தில் விரிசலும், பிரிவும் ஏற்பட செய்வது.

பொதுவாக எல்லாவித வசியமுறைகளிலும் - திலகம், அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் திலகம் என்பது நெற்றி அல்லது நெற்றிவகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்களும் (திலகம், அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை)  பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள்  பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். பெண்கள் சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ, உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆணோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும், ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும், கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம்,  நறுமணம், செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். வசியம் செய்த பெண்ணை  தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே அந்த ஆணுக்கு தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும். மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான்.

 ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள  செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும். உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும், நாளடைவில் வசியம் செய்தவரின் முழு கட்டுப்பாட்டுக்குள்  அவர்கள் வந்துவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் வசிய மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து, மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு.

இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன.

 உச்சிஸ்ட சண்டாளி, உச்சிஸ்ட காளி, பந்தினி, மதனமேகலா, வட யட்சிணி, துமாவதி, சங்க தாரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம், உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீ கரம், புன்னாக மலர், ஜப புஷ்பம், பாதிரி, பால் புரண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளநீரில் சேர்த்து அரைத்து புடம் போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம், ஸ்த்ரீவசியம், புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா யட்சணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி, புனுகு, கும்குமப்பூ, வெள்ளாடனை ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்கள் நிழலில் உலர்த்தி, அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மண் சட்டியில் காட்டி கரியாக எடுத்து, அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும். காம தேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம், மனோசிலை, உத்தரோணிப்பூ ஆகியவற்றை மணிக்கு ஒண்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்று  வேளை, மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்)  உடலில் ஊற விட்டு அதன் பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் - மனைவி ஓன்றாக சேர்வார்கள் என்றும்        (மனைவியின் மணம், ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்) மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவியின் மீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரகொன்றை, தேவதாரு வேர், இலந்தை வேர், வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண் கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான்என்று "பைரவி தந்த்ரம்" என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும். ஆனால் துரதிருஷ்ட வசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன்படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மாற்றும் முயற்சிகளை தடுக்கவும்,  நமது பாரம்பரிய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும், பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும். அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் - மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது. அஸ்வரூட ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் - மனைவி இடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிகப்படுத்துகிறது, பகளாமுகி யந்திரம் கணவன் -மனைவி ஒற்றுமையான திருமண வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தால் என்ன வகையான ஔஷத மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும்  மருந்துகளை ஸ்ரீ தேவி கார்த்யாயணி மந்திரத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம், உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்ப தலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயணி  யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி, மோகினி, பில்லி, சூனியம், வைப்பு, ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை  நீக்கிவிடும்.www.danvantarinadi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக