வியாழன், 8 செப்டம்பர், 2016

சனாதன தர்மம் எனும் இந்து மதம் - கேள்விகளும் பதில்களும்.


கேள்வி : மறு ஜென்மம் என்பது எப்படி உண்மையாகும் ? அதை எப்படி நிரூபிக்க இயலும் ?


பதில் : மறு ஜென்மத்தை கிறிஸ்துவர்களும், இஸ்லாமும் நம்புவதில்லை. அவர்களின் புனித நூல்களின் படி, அந்த பிறவியில் செய்யும் நல்லது அல்லது தீயதின்படி அவர்களுக்கு, இறுதி நாளில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதாவது  ஒருவன் செய்யும் நல்லது அல்லது தீயதின்படிதான், இறுதிநாளில் அவனுக்கு சுவர்கமோ, நரகமோ கிடைக்கிறது. 

இப்போது நாம் முதலில் இறைவன் பார்பட்சம் உள்ளவனா, இல்லையா என்பதை பார்த்தாக வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் நல்லது செய்துவிட்டு மற்றவருக்கு தீங்கு செய்பவன் இறைவன் ஆவானா ? அப்படி பாரபட்சம் காட்டுபவனை அனைத்து உயிர்களுக்கும் இறைவன் என்று கொள்ள முடியுமா ? நிச்சயமாய் முடியாது தானே ? இறைவன் அனைவருக்கு சரிசமமானவன் தானே ? யாருக்கேனும் மாற்றுக் கருத்து உள்ளதா ?

இப்போது நாம் பிறக்கும் குழந்தைகளை பார்ப்போம். ஒரு குழந்தை ஆரோக்கியமாய் பிறக்கிறது, மற்றொன்று பிறக்கும் போதே நோய்வாய் பட்டு பிறக்கிறது. ஒன்று செல்வந்தனாய் பிறக்கிறது, மற்றதோ தரித்திரத்தில் பிறக்கிறது. ஒன்று அழகாய் பிறக்கிறது, மற்றொன்று அசிங்கமாய் பிறக்கிறது. நாம் இப்பிறவியில் செய்யும் நல்லது கெட்டதிற்கு ஏற்றபடிதான் நமக்கு இறுதி தீர்ப்பில் நியாயம் கிடைக்கும் சரி. ஆனால் நாம் எதுவுமே செய்யாத நம‌து பிறப்பின் ஆரம்பத்தில், எப்படி இறைவனுக்கு பாரபட்சம் வந்தது ? ஒரு ஓட்டப்பந்தயம் என்று வைத்துக் கொண்டால் கூட அனைவரையும் ஒரே கோட்டிலிருந்து தானே ஓடச் சொல்லுவார்கள் ?

இறைவன் அப்பழுக்கற்றவன், இறைவன் நியாயவான், இறைவன் சத்தியத்தின் அடையாளம் என்று நாம் நம்புவோம் என்றால். அவன் நிச்சயமாய் பாரபட்ட்சம் அற்றவன் அல்லவா ? ஒரு உயிருக்கும் மற்ற உயிருக்கும் இடையே பிறக்கும் போதே ஒர வஞ்சனை செய்பவன் இறைவன் ஆக முடியுமா ? ஆப்ரகாமிய மதங்களின் வாதங்கள் இங்கே தவிடு பொடியாவதை நீங்கள் கண்கூடக் காணலாம். அவர்களால் இதைப்பற்றி விளக்கவே முடியாது. 

ஆக நாம் முன்பு செய்த ஏதோ ஒன்றுக்காகதான் நாம் இவ்வாறு வித்யாசமான உடல்களை அடைகிறோமே தவிர அது இறைவனின் பாரபட்சமான விருப்பமும் அல்ல, அல்லது படைப்பும் அல்ல. 

ஹிந்து தர்மம் இதை தெளிவாக சொல்கிறது. நீ செய்யும் கர்ம வினைப்படி உன் ஆத்மாவானது அதற்கு ஏற்ற உடலை அடைகிறது. இது ஒரு பிரபஞ்ச தர்மம். ஆண்மாக்கள் இந்த கர்மபந்தம் என்கிற வினைப்பயனைக்கு ஏற்றவாறே அதற்குரிய யோனிகளில் புகுகிறது. எதை நோக்கி எண்ணங்கள் அதிகமாய் லயிக்கிறதோ, அந்த எண்ணங்களை பூர்த்தி செய்துக்கொள்ளும் உடலை நோக்கியே நம் ஆண்மா பயனிக்கிறது. 

உதாரணத்திற்கு காம இச்சையையே சதா சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மனம் கொண்ட ஒருவனின் ஆத்மா, அவ்விதமான் செயலில் சதா ஈடுபடக்கூடிய உடல்களை (நாய், பன்றி) அடைந்து விடுகிறது. உண்பதையும், ருசிப்பதையுமே அதிகமாக‌ புனரும் விருப்பம் உள்ளவர்கள் அதற்குரிய உடல்களை ( ஆடு, மான்) அடைகிறார்கள். ஒவ்வொரு விதமான உயிர்களின் உடலும் ஒவ்வொரு விதமான குணாதிசியங்களை அடிப்படையாக‌க் கொள்வதை நாம் பார்க்கலாம்.

இறப்பின் போது எவன் என்னை நினைக்கிறானோ அவன் என்னை அடைகிறான் என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். சிலர் அப்படியென்றால், எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, இறக்கும் தருவாயில் இறைவனை நினைத்தால் போதுமே என்று நினைக்கலாம். ஆனால் ஒருவன் தன் வாழ்க்கையில் எதன் மேல் அதிகம் பற்று வைத்துள்ளானோ அதை குறித்துதான் அவன் இறக்கும் தருவாயில் நினைப்பான். சதா சொத்தையும் சுகத்தையும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் இறக்கும் தருவாயில், அந்த சொத்துக்களையும் சுகங்களையும், நினைத்துக்கொண்டேதான் சாவான். ஆனால் இறைவன் மேல் எப்போதும் எண்ணத்தை செலுத்தும் மனதை கொண்டவன், இறக்கும் போதும் அவனையே நினைவு கொள்கிறான் அவனையே அடைகிறான்

2)  கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இனை வைக்காதீர்கள் !!


கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம் இருக்கிறது. அதனால் இந்த பதில்.

பூர்வ ஜென்ம கர்ம பலனால் அர‌பியனுக்கு அடிமை ஆன‌வர்களே. யோசித்து பாருங்கள். 

அருவம் என்பதும் உருவம் என்பது என்ன ? கண்களால் பார்க்க முடிந்தால் அதற்கு உருவம் இருக்கிறது, பார்க்க முடியவில்லை என்றால் அது அருவமானது. சரிதானே ? நம் கண்களுக்கு புலப்படாத எவ்வளவோ கதிர்கள் இவ்வுலகில் இருக்கிறது. விஞ்ஞானிகள் நம் கண்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஒளி அளவுகளையே காணும் சக்தி இருக்கிறது என்கிறார்கள். சொல்லப் போனால் நாம் காண்பதும் நிஜமல்ல. நிஜமென்று நாம் நினைப்பது அவ்வளவுதான். எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நிஜம் என்பது ஒரு மாயை என்றார். 

இறைவனை புலன்களால் அறிய முடியுமா ? எந்த கிறிஸ்துவரும், இஸ்லாமியரும் இல்லை என்றுதான் சொல்லவார்கள். சரியா ? புலன்களால் அறிய முடியாத இறைவனை எவ்வாறு புத்தகங்கள் வாயிலாக அறிய முடியும் ? புத்தகங்களை உங்களுக்கு தந்த இறைதூதர்களுக்கு இறைசெய்தி நேரிடையாய் இறக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் அதை உணர்ந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு அது புரியுமா ? புத்தகம் உங்களுக்கு ஒரு வழிகாட்டி அவ்வளவே. இறைவன் கொடுத்த அறிவை உபயோகப்படுத்தாமல், புத்தகத்துக்குள்ளேயே புழங்கி இருப்பதால் கால் காசுக்கு உபயோகம் உள்ளதா ? உங்கள் அறிவை உபயோகித்து சொல்லுங்கள், புலன்களால் அறிய முடியாத இறைவனை அருவமானவன் என்று எவ்வாறு சொல்கிறீர்கள் ? எப்படி கண்டுப்பிடித்தீர்கள் ? இறைவனை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறீர்களா ?

அடுத்து இறைவன் எல்லாவிடத்திலும் உள்ளான் என்கிறீர்களா ? எங்கோ ஏழு வாணம் தாண்டி ஒரு சிம்மாசனத்தில் இருக்கிறார் என்கிறீர்களா ? இறைவன் அவன் படைப்புகளை தாண்டி விலகி தனியாய் இருக்கிறாரா ? அனைத்துமாக இருக்கிறாரா ?

ஹிந்துக்கள் இறைவனை வேறு படுத்திப் பார்ப்பதில்லை. அங்கு இங்கு என்று அளவிடாதபடி அவன் எங்கும் இருக்கிறான். சுருங்க சொன்னால் அவனின்றி எதுவுமே இல்லை. ஆக எல்லாமாய் இருக்கும் இறைவனை, எதுவாய் வணங்கினால் என்ன ? 

ஒரு ஹிந்து தாழ்மையுடன் கேட்கிறான். ஓ இறைவா நீ எங்கும் இருக்கிறாய், எதிலும் இருக்கிறாய், உன்னை முழுவதுமாய் அறிந்துக் கொள்ளும் ஆற்றல் என்னிடம் இல்லை. ஆக என் மனம் உன் மேல் லயிக்கும் பொருட்டு, இந்த சிறு கல்லில் வா, சிலையில் வா, மரத்தில் வா என்கிறான். தன் மனதுக்கு பிடித்த அழகான சிலைகளை எழுப்பி அதில் இறைவனை இறங்குமாறு ப்ரார்த்திக்கிறான். தீமையை அழிப்பதற்கு ஆக்ரோஷ‌மான சிலைகளை எழுப்பி அதில் இறைவனை இறங்குமாறு ப்ரார்த்திக்கிறான். இதில் என்ன தவறு இருக்கிறது ? 

இதற்கு நேர்மாறாக அரேபிய பாலைவன சித்தாந்திகள் என்னச் சொல்கிறார்கள். இறைவனுக்கு இனை வைக்க கூடாதாம், இறைவன் கோபித்து கொள்வானாம். பார் இந்த உருவத்தை வணங்கினாயே, அதுபோலவா நான் இருக்கிறேன் என்று மறுமையில் கேட்பானாம். குழந்தைகள் பார்க்கும் "சோட்டா பீம்" கதைகள் கூட இதற்கு பரவாயில்லையே ? எதை வேண்டினாலும் இறைவன் அல்லவா தந்தருள வேண்டும். எதை நோக்கி நீ கடவுள் அல்லது அல்லா என்றாலும், எது ஆதாரமோ அதை தானே அது சென்று அடையும். இதில் இனை வைத்தால் அவன் கோபம் கொள்ள என்ன இருக்கிறது, இறைவன் என்ன திரைப்பட வில்லனா ? இறைவன் அருவவாதி என்று நீங்கள் மார்தட்டி கொள்வது அவனை நீங்கள் புரிந்துக் கொண்டவர்கள் என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது ?

ஒரு உருவம் இல்லாத இறைவன், அதாவது கண்களால் பார்க்க முடியாதவன், ஒரு ஒலி மூலமாகவோஅல்லது ஒரு சொற்கள் மூலமாகவோ மட்டும் எட்டி விடுவானா ? நாம் பார்க்கும் வண்ணம் காட்சி தராத இறைவன், நாம் இறைஞ்சும் வார்தைகளை மட்டும் கேட்டு விடுவானா ? 

அவன் கொடுத்த அறிவு. அதை உபயோகித்தால் என்ன தவறு.......... யோசியுங்கள் அரேபிய அடிமைகளே !!

3)  உங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள் ?


உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். 

முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தன்மையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

கீதையையே எடுத்துக்கொள்ளுங்கள், அதை படிக்கும் ஒவ்வொரு தனிமனிதரும் தன்னுடைய இயல்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழிமுறைகள் சிறந்தது என்று சொல்வார்கள். சிலருக்கு அறிவுசார்ந்த‌ ஞான யோகம் பிடிக்கும், சிலரோ அன்பே வடிவான பக்தியே சிறந்தது என்பார்கள். சிலர் குண்டலினி சக்தியை மேலெழுப்பி சமாதி நிலை நோக்கி செலுத்தக் கூடிய ராஜ யோகமே சிறந்தது என்பார்கள், சிலருக்கு சடங்குகளில் அதிகம் லயிக்காமல்,  தான் வெறும் கருவி, இறைவன் தான் அனைத்தையும் செய்ய வைக்கின்றான் என்று வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் செயலாற்றும் கர்ம யோகம் பிடிக்கும். ஆக கீதையிலேயே பல வழிகளை இறைவன் தந்திருக்கிறான். 

யோகம் என்றால் இனைவது. ஒரு ஜீவன் என்கிற ஜீவாத்மாவை, இறைவன் என்கிற பரமாத்மாவிடம் எது இனைக்கிறதோ அது யோகம். ஆக இனைவதுதான் இங்கு முக்கியம், எப்படி இனைகிறாய் என்பதல்ல. எப்படி இனைய வேண்டும் என்பது பயனம் செய்பவனின் விருப்பத்தை பொறுத்து இருக்கிறது. நாம் சுற்று வழியிலும் செல்லலாம், நேர் வழியிலும் செல்லலாம். எது சுற்று வழி, எது நேர் வழி என்பதை நம் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ளலாம், நல்ல குருவின் துணைக் கொண்டும் தெளிந்துக் கொள்ளலாம்.

ரிக் வேதம் சொல்கிறது "ஏகம் சத், விப்ர பஹுதா வதண்தி", இறைவன் ஒருவன் தான் ஆனால் பல என்று சொல்கிறார்கள் என்கிறது. உபநிடதமும் "பசுக்கள் பல வண்ணங்களில் இருந்தாலும் அது தரும் பாலின் நிறம் வெள்ளையாக இருப்பதை போல், இறைவன் பலவிதங்களில் காட்சி தந்தாலும் அவன் ஒருவன் தான்" என்கிறது. 

கீதையில் கிருஷ்ணனும் "யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்". இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் அல்லா எனும் அரூபத்திலும் நினைக்கலாம். 

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான். 

திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

"அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை, அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை, அந்தமில்லானுக்கு அடுத்தசொல்தான் இல்லை, அந்தமில்லானை அறிந்துகொள்பத்தே" என்று 

அதாவது இறைவனை இதுதான் என்று சொல்லிவிட முடியாது, இவ்வளவுதான் என்று அளந்து விட‌ முடியாது, வார்தைகளால் முழுவதுமாய் விளக்கிவிட முடியாது அவனை உணரத்தான் முடியும் என்கிறார்.

இதையே நம்மாழ்வார், திருவாய்மொழியில் சொல்கிறார், 

"உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே"

இருக்கிறான் என்பவற்கு, அவன் அனைத்துமாய் இருக்கிறான்.
அவன் இல்லை என்பருக்கு அருவமான சூட்சும சரீரத்தில் இருக்கிறான்
இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக அந்த இறைவன் இருப்பதால், என்றும், எங்கும் வியாபித்து இருக்கும் நிலை கொண்டவன் அவனே !

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள். 

இறைவனுக்கு இனை வைத்து, அவன் கோபத்துக்கு ஆளாகி, நரக நெருப்பில் பொசுங்கும், மனநோயாளிகள் கதைகள் இங்கு இல்லை


4)  ஹிந்துக்களின் தர்ம நூல்கள் ஜாதி வித்யாசம் காட்டுகிறதே ? வர்ண பேதங்கள் மணிதனை உயர்த்தியும், தாழ்த்தியும் கேவலப் படுத்துகின்றனவே ? புருஷ சுக்தத்தில் சூத்திரன் காலில் தோன்றியவன் என்று இழிவு படுத்துகிறதே ?


ஜாதி என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட சமூக மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள்தானே தவிர, ஹிந்து தர்மங்களால் பரிந்துரைக்க பட்டவை அல்ல. சனாதன தர்மத்தில், வர்ணம் என்பது வலியுறுத்தப்படுகிறது, முதன் முதலாக ரிக் வேதத்தின், புருஷ சுத்தத்திலும் இது சொல்லப்படுகிறது. மனு தர்மமும் இதைத்தான் வலியுறுத்துகிறது, புராணங்களும் இதைத்தான் சொல்கின்றன. மனுதர்மத்தை பற்றியும் அன்னிய ஆதீக்கத்தால் எற்பட்ட ஜாதி வேறுபாடுகளை பற்றியும் பிரிதொரு பதிவில் பார்ப்போம்.

வர்ணம் என்றால் என்ன ? 

வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது. அது நான்கு வகைப்படுகிறது. 

ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.

சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது. 

வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

ஆக பிராம்மணன் மற்றவர்களை விட சிறந்தவன் ஆகிறான் அதனால்தான் விராட புருஷன் எனும் பரம்பொருளுக்கு அவன் தலையாக இருக்கிறான், சத்ரியன் காப்பதற்கும், அதர்மத்தை அழிப்பதற்கும் உரிய கரங்களாக இருக்கிறான், வைசியன் சமூகத்தை தாங்கி பிடிக்கும் செல்வமாகிய துடைகளாக இருக்கிறான். சூத்திரன் இவர்களுக்கு ஆதாரமாய் இருக்கும் கால்களாக இருக்கிறான்.

இதை ஏன் ஒரு உடல் ரீதியான அங்கங்களாய் பாவித்தார்கள். உடலில் எந்த அங்கமும் தேவையற்றது இல்லை, ஒவ்வொன்றும் இன்றியமையாத ஒவ்வொரு பணியை செய்கின்றன என்பதை குறிப்பிடத்தான். 

இங்கே மிக முக்கியமாய் நாம் உணர வேண்டியது, வர்ணம் என்பது பிறப்பை மட்டுமே சார்ந்ததல்ல. ஒரு நல்ல குலத்தில் பிறப்பதால் ஒருவனுக்கு நல்லதை செய்யும் சூழ்நிலை உருவாவது இயற்கை. ஆனால் அவன் தன் செயல்களால் வர்ணங்களில் இருந்து வழுவலாம் அல்லது உயரலாம். 

மஹாபாரதத்தில் அஸ்வத்தாமன் எனும் பிறப்பால் ப்ராமண குலத்தில் பிறந்தவ‌ன் தன் தீய செயல்களால் தாழ்ந்த வர்ணத்திற்கு செல்கிறான். விஸ்வாமித்திரரோ ச‌த்ரிய குலத்தில் பிறந்து, பிராமணனாக தன் செயல்களால் உயர்கிறார்.
வர்ண கலப்பில் பிறந்த பலர் மிகப் பெரும் ஞானிகளாய் இருப்பதும் பல உண்டு. வேத வியாசரும், விதுரரும் இதற்கு நல்ல சான்றுகள். 

சூத்திரன் என்கிற தன்மையில் (ஜாதியில் அல்ல) பிறந்து தன் முயற்சியால் ஒருவன் பிராமணனாக ஆகலாம்.

கர்ணண் சூத்திரனாக அவன் செய்யும் தேரோட்டும் செயலை வைத்து கருதப்படுகிறான். அவனை அங்க தேசத்துக்கு அரசனாக மாற்றி ஒரு நிமித்தில் அவன் வர்ணத்தை சத்ரியனாக துரியோதணன் மாற்றுவது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

"சாந்தோக்ய" உபநிடத்தில் சத்யகர்மாவின் கதை வர்ணம் என்பது குணங்களை தழுவி இருக்கிறதே தவிர, பிறப்பை அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. சத்யகர்மா ஒரு பிரம்மச்சாரியாக விரும்புகிறான். அவன் தன் தாயிடம் கேட்டாலும் அவளுக்கு அவனின் தந்தை யார் என்பது தெரியாது என்கிறாள். சத்யகர்மா கௌதமர் என்ற குருவிடம் சென்று த‌ன் தந்தை பெயர் தனக்கு தெரியாது என்பதையும் தான் ஞானத்தை அறிய விரும்புவதாகவும் சொல்கிறான். அதை கேட்ட அவர் "உண்மையை மறைக்காமல் சொல்பவனும், சத்தியத்தை தேடி அலைபவனுமே பிராம்மணன்", ஆக அவன் யாரின் மகன் என்பது தேவையில்லை என்று அவனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார்.

பூமியில் எங்கு, எப்படி, பிறந்தாய் என்பவதை விட எதை விரும்பி, எப்படி செயலாற்றி, எதுவாக மாறுகிறாய் என்பதே முக்கியம் என்பதை இவை தெளிவாக்குகின்றன

5)  வர்ணம் பிறப்பால் ஏற்படுகிறது என்பதை மறைக்க பார்க்கிறீர்களா ? கீதையில் உங்கள் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண்களையும், வைசியனையும் இழிவு படுத்த்துகிறாரே ?


வர்ணம் என்கிற தன்மை அல்லது குணம் பிறப்பால் ஏற்படுகிறது. இதை நான் மறுக்கவே இல்லை. இதை மறுத்தால் கர்ம வினை அல்லது கர்ம பந்தம் எனும் செயல்களின் தாக்கத்தை மறுப்பது போல் ஆகும். நாம் என்ன செய்கிறோமோ அதை தான் பெறுகிறோம். ஆகையால் முற்பிறவியில் நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்றவாறே அடுத்த பிறவியில் அத்தகைய சூழ்நிலையில் பிறக்கிறோம்.

ஆனால் இங்கே ஜாதி எனும் பிறப்பால் மட்டுமே வரும் ஒரு சமூக பந்தத்தை நான் குறிப்பிடவில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், முற்பிறவிகளில் அற வழிகளில் சென்று, ஆண்மீகத்தில் லயிக்கும் ஒருவன் அடுத்த பிறவியில் வர்ண ரீதியாக பிராமண குணத்தோடு பிறக்கக்கூடும். அதாவது அவன் ஜாதி அடிப்படையில் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருக்கலாம் ஆனால் அவன் உயர்ந்த ஆண்மீகவாதியாக, ஒழுக்கமானவனாக ஒரு நல்ல குடும்பத்தில் பிறக்கிறான். 

அதே போல் பூர்வ ஜண்மங்களில் கீழ்தரமான செயல்களை புரிந்தவன், இப்பிறவியில் ஜாதி அடிப்படையில் பிராமணனாகவே பிறந்திருந்தாலும், ஒரு ஒழுக்கம் கெட்டவனாகவே இருப்பான். 

ஆக எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பதை விட அவன் எப்படிப்பட்ட அடிப்படையான குணநலன்களோடு பிறக்கிறான் என்பதே முக்கியம். அதைதான் வர்ணம் குறிக்கிறது.

எப்படிப்பட்ட வர்ணத்தில் ஒருவன் பிறந்தாலும் அவன் தன் செயல்கள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதே உண்மை. செய்யும் செயல்களையே வேள்வி என்று அழைக்கிறார்கள். ஆக நல்லதொரு வேள்வியை நடத்துபவன் இறைவனை அடைகிறான். அவன் எப்படிப்பட்ட தன்மைகளோடு பிறந்திருப்பினும் சரி.

"மாம் ஹி பார்த வ்யபாச் ரித்ய" எனத் தொடங்கும் 9/32 ஸ்லோகத்தில் இதையே கிருஷ்ணன் வலியுறுத்துகிறான்.

பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் பாவப் பிறவி எடுத்தவர்கள் என்று யாராக இருந்தாலும் என்னை தஞ்சமடைந்து அனைத்திற்கும் மேலான மோக்ஷத்தை அடையலாம் என்கிறார்.

இங்கே தெள்ள தெளிவாக கூறியிருப்பது என்ன வென்றால், உடல் ரீதியாக வலிமை குறைந்த பெண்களும், ரஜோ குணம் அதிகம் கொண்டவ வைசிய தண்மை உடையவரும், தமோ குணம் அதிகம் கொண்ட சூத்திர தண்மை உடையவரும், முன் ஜன்மத்தில் பெரும் பாவங்களை செய்தவர்களும் என அனைவரும் இறைவனை அடையலாம் என்பது தான். அதாவது இறைவனை அடைவதற்கு எதுவுமே தடையில்லை என்பதைதான் இந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது. 

"இன்றைய செயல்களால் நாளைய விதியை நிர்மாணிக்கின்றாய்" என்று சுவாமி விவேகாணந்தர் இதைத்தான் சொல்கிறார்.

நீ எதில் வேண்டுமிருந்து வேண்டுமானாலும் தப்பித்து கொள்ளலாம் ஆனால் நீ செய்த செயல்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. அப்படி தப்பிப்பதற்க்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது 'நான்', 'எனது', எனும் எண்ணத்தை துறந்து இறைவனிடம் தஞ்சம் புகுந்து நம் கர்ம வினைகளை அவன்பால் தந்துவிடுவதுதான்.

எது நம்மை பாதிக்கிறது ? எது நம்மை இன்பத்திலும் துன்பத்திலும் மாற்றி மாற்றி நம்மை அலைக்கழிக்கிறது ? நாம் நமது என்ற எண்ணம் தானே ? ஆக அந்த நான், எனது என்கிற நிலையை துறந்து எவன் ஒருவன் இறைவனை தஞ்சம் அடைகிறானோ அவன் இறைவனை அடைகிறான், அவன் எப்படிப்பட்டவன் ஆக இருப்பினும் சரி என்பதையே இந்த ஸ்லோகம் விளக்குகிறது.

உங்கள் கடவுள்கள் ஒருவர் பாம்பில் படுத்திருக்கிறார், ஒருவர் யானை முகத்துடன் எலிமேல் உட்கார்ந்திருக்கிறார், ஒருவர் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார், இதைப்போனற முட்டாள் தனமாக இறைவனை ஏன் சித்தறிக்கிறீர்கள் ? உங்கள் சிவ‌லிங்கம் எதை குறிக்கிறது என்ற உண்மையை சொல்ல முடியுமா ?

தத்துவ ஞானத்தின் ஆழத்தை பார்த்தவர்கள் ஹிந்துக்கள். ஐன்ஸ்டீன் முதல் அணு விஞ்ஞானி ஓப்பன்ஹீமர் வரை பலரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கும் அளவிற்கு தன்னுள்ளே அற்புதமான கோட்பாடுகளையும், ஈடு இனையற்ற சித்தாந்தங்களையும் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த தத்துவங்களை கொண்ட ஹிந்து தர்மம், முட்டாள்தனமான விடயங்களை முன்நிறுத்த வாய்ப்பே இல்லை. பாமரனையும் தன்பால் ஈர்க்கும் வண்ணம் இறைவனை உருவகப்படுத்திய சனாதன தர்மம், தத்துவ ஞானிகளையும், அறிஞர்களையும் தன்பால் நிலை நிறுத்திக் கொண்டது 

ஒரு பிள்ளையார் சிலையை பாருங்கள். அழகிய யானை முகம், ஒரு குழந்தையையும் அது கவர்ந்துக் கொள்ளும், அவரின் பால்ய கதைகள் அனைவரையும் கவரும், ஒவ்வொரு கிராமத்திலும் அவர் மரத்தடியிலும், சிறு குடிசைக்கு அடியிலும் அமர்ந்துக் கொண்டு பாமரன் முதல் படித்தவர் வரை பலரையும் கவர்கிறார்.

அதே பிள்ளையாரை ஒரு தத்துவஞானி எப்படி பார்க்கிறான்.

அவருடைய பெரிய தலையோடு கூடிய தும்பிக்கை ஓம் என்கிற ப்ரணவத்தை குறிக்கிறது. அவருடைய பெரிய காதுகள், அவரின் கேள்வி ஞாணத்தையும், வேதங்களை உணர்ந்து வெளிப்படுத்தும் ஆற்றலையும் குறிக்கிறது. அவரின் வாகணமான எலி ஆசையையும், அலைபாயும் மனதையும் குறிக்கிறது. அத்தகைய ஆசையையும், அலைபாயும் மனதையும் அடக்கி அவர் திடமாக அமர்ந்திருக்கிறார். 

அடுத்து பாற்கடலில் படுத்திருக்கும் விஷ்னுவை பாருங்கள். ஐந்து தலைக்கொண்ட பாம்புகள், ஐந்து புலண்களை குறிக்கிறது. உள்நோக்கி பார்க்கும் அந்த ஐந்து தலைகளும், உள்நோக்கி பார்க்கும் அமைதியான மனதை குறிக்கிறது. அந்த அமைதியான மனம் எதை பார்க்கிறது ? பரம்பொருளான இறைவனை பார்க்கிறது. அப்பரம்பொருள் பேராணந்த நிலையில் தன்னுடைய எல்லையற்ற தன்மையில் இருக்கிறார். அவர் எல்லையற்ற ப்ரபஞ்சத்தை குறிக்கிறார். அவரை சூழ்ந்துள்ள‌ பாற்கடலோ எல்லையற்ற ஆணந்தத்தை குறிக்கிறது. அவரின் கரங்களில் உள்ள சக்கரம் காலச் சுழற்சியை குறிக்கிறது. அவரின் மற்றொரு கரத்தில் உள்ள சங்கு ப்ரபஞ்சத்தின் ஐந்து தத்துவங்களை குறிக்கிறது. 

அடுத்து புலித்தோல் அணிந்திருந்த சிவனை பார்ப்போம். அவரின் உடல் முழுதும் பூசப்பட்ட திருநீர் கண்களுக்கு புலப்படும் ப்ரபஞ்சத்தை குறிக்கிறது, அவரின் ஆடையில்லாத திருமேணியோ, அந்த ப்ரபஞ்சத்தின் ஆதார நிலையை குறிக்கிறது. அவரின் தலையில் உள்ள கங்கை அவர் பாவங்களையும், அறியாமையையும் அழிப்பவர் என்பதை குறிக்கிறது. அவரின் தலை அருகில் உள்ள தேய்பிறை, ப்ரபஞ்சம் தோன்றுவதையும், அழிவதையும் குறிக்கிறது. அவரின் நெற்றியில் உள்ள த்ரையம்பகம் எனும் நெற்றிக் கண், அவரின் எல்லையற்ற ஞாணத்தையும், ஆற்றலையும் குறிக்கிறது. அவரின் கழுத்தில் உள்ள பாம்பு அவரின் யோக சக்தியை குறிக்கிறது. இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

லிங்கம் என்பது குறியீடு அல்லது முத்திரை என பொருள்தரும். லிங்கம் என்பது பிரமாண்டம் அல்லது ப்ரபஞ்ச மூலாதார‌த்தை குறிக்கிறது. அது சத்யம், ஞாணம் மற்றும் ஆணந்தத்தை குறிக்கிறது. லிங்கம் ப்ரக்ருத்தி எனப்படும் இயற்கை, புருஷா எனப்படும் இறைவனுடன் இனைவ‌தை குறிக்கிறது. சிவலிங்கம் உருவம‌ற்ற இறைவனை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாந்த்ரீகர்களும், மேற்கத்திய அறிஞர்களும் லிங்கத்தை ப்ரபஞ்சத்தின் விதையான ஆதாரமாகவும், அதன் பீடத்தை ப்ரபஞ்ச சக்தியாகவும் சொல்கிறார்கள். இவை எதைப்பற்றியும் அறியாமல் சில மனநோயாளிகளும் மூளை சலவை செய்யப்பட்டவர்களும் அதை தங்கள் குறுகிய எண்ணங்களால் குறுக்கி, அது வெறும் ஆண் பெண் உறவை மட்டுமே சித்தரிக்கிறது என்று சொல்வதுதான் வேடிக்கை.

இப்படி ஹிந்து மதத்தில் சிலைகள் ஒவ்வொன்றும் இறைவனின் பேராற்றலை பல்வேறு விதமாக உருவகப்படுத்தி, ஒரு பாமரனுக்கும் அதை எளிதாக கொண்டு சேர்க்கிறது. ஒரு தத்துவ புத்தகத்தை படிக்கையில் ஏற்படும் ஞானம் ஒரு சிலையிலேயே உருவகப்படுத்த படுகிறது. ஒரு பக்தன் அச்சிலையை தரிசிக்கும் போதே அதில் உருவகப் படுத்தப்பட்டுள்ள உயர்ந்த தத்துவங்கள் அவனுக்குள் உயர்ந்த எண்ணங்களை உண்டாகி அவனை செம்மை படுத்துகிறது. ஒரு வெற்று சுவரை வெறித்து பார்த்து பிரார்தனை செய்வதற்கும், உயர்ந்த தத்துவங்களை உருவகப்படுத்தி, நம்முள்ளே உயர்ந்த எண்ணங்களை உண்டாக்கும் சிலையை, வழிபடுவதற்கும் வித்யாசங்கள் இருக்கிறதல்லவா ?

ஹிந்து வேதங்களும், உபநிடந்தங்களும் பல விஞ்ஞாண விடயங்களை கொண்டது என்று சொல்கிறீர்களே ? உங்கள் ரிஷிகளும், முனிவர்களும், அதை கண்டு பிடித்தார், இதை கண்டுப் பிடித்தார் என்கிறீர்களே... அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உதாரணத்திற்கு விமான‌ சாஸ்திரத்தை "பரத்வாஜர்" கண்டுப்பிடித்தார் என்று சொல்கிறீர்கள், பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப் பட்டதற்கான ஆய்வு கூடங்களோ, விஞ்ஞான உபகரணங்களோ இல்லையே ? எதை வைத்து இப்படி ஆரிய கட்டுக்கதைகளை பரப்புகிறீர்கள் ?

பண்டைய பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சொல்வதற்கு முன், அறிவியல் என்றால் என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மாற்றமே மாறாதது என்பதை அனைவரும் அறிவர். அறிவியல் மட்டும் மாறுவதில்லை. அறிவியல் என்றால் என்ன எனும் விளக்கமும் மாறி வருகிறது. 

ஆல்பர்ட் ஐன்ஸ்டியன் வருவதற்கு முன் விஞ்ஞானம் பெரிதாய் நம்பி கொண்டிருந்தது என்ன வென்றால். தூரமும், காலமும் நிலையானது என்று. ஒரு நூற்றுப்பத்து வருடங்கள் முன்பு கூட‌ விஞ்ஞானிகள் நியூட்டன் மற்றும் கலிலியோவின் விதிகளையே ஆதாரமாய் கொண்டிருந்தார்கள். மின்காந்த அலைகளை குறித்த அவரின் ஆராய்சியில் அவருக்கு அதற்கு முன்பிருந்த நியூட்டனின் சில ஆதார நிலைகள் திருப்தி அளிக்கவில்லை. காலமும், தூரமும் எப்படி நிலையானது என்று அறிவியல் அன்று விளக்கியதை குறித்து அவர் ஆழமாக யோசித்தார். அதில் திருப்தி அடையாத ஐன்ஸ்டியன் அதை குறித்து ஆழமான சிந்தனைகளில் பல மாதங்களை செலவழித்தார். அவ்விதம் ஆழமாய் அதைகுறித்து அவர் சிந்தித்து வந்தபோது, அவரின் மனதில் ஏன் ஒளியின் வேகம் நிலையாக இருக்க கூடாது என்ற உள்ளுண‌ர்வு எழும்பியது. அதை குறித்து தன்னுடைய கணித மற்றும் மின்காந்த விதிகளை வைத்துக் கொண்டு அவர் மறுபரிசீலனை செய்த போது அது சரியாக வந்தது. "E = mc 2 "என்கிற அந்த விதியை அவர் உலகத்திற்கும், உலக விஞ்ஞானிகளுக்கும் சமர்ப்பித்தார். அது உலகத்தையே புரட்டி போட்டது. அன்றைய பெரும் விஞ்ஞானிகள் பலர் அதற்கு ஆட்சேபித்தனர், "இதை எப்படி கண்டுபிடித்தாய் ?" என்று ஐன்ஸ்டினை கேட்டனர். ஐன்ஸ்டியன் சொன்னார் "நான் எப்படி கண்டுபிடித்தேன் என்பது உங்களுக்கு தேவையில்லை, அது செயல்படுகிறதா இல்லையா என்பது தான் முக்கியம், அதை செயல்படுத்தி பாருங்கள் அது செயல்படும்" என்றார். 

ஐன்ஸ்டியன் ஒரு "தியரட்டிக்கல் சைண்டிஸ்ட்" (Theoretical scientist), இத்தகையோர் ஆய்வு கூடங்களில் ஆய்வு செய்வதில்லை, மாறாக தங்கள் ஆழ்மன‌தில் விடைகளை குறித்து தேடுகிறார்கள். பிரபஞ்சத்தில் மனிதன் அறிந்தது, அறியாதது என எல்லாமே எப்போதுமே இருக்கிறதல்லாவா ? அதை வெளிக் கொணர்வதற்குதான் ஆழமான தேடல் தெவைப் படுகிறது. எப்படி ஒரு ரேடியோவில் உள்ள குழிழை நாம் திருப்பிக் கொண்டே வரும் போது குறிப்பிட்ட அலைவரிசையை கிடைக்கையில் அதற்குரிய தகவல் ஒலிப்பரப்பாகிறதோ, அது போல ஒருவர் தன் ஆழ்மனதில் ஆழமான தேடுதலில் ஈடுபடும் போது விடைகள் கிடைக்கின்றன. 

அதைத்தான் ஐன்ஸ்டியன் "உள்ளுணர்வு கொண்ட மனம் அற்புதமான பரிசு, அறிவார்ந்த மனமோ நம்பிக்கைக்குரிய அடிமை" (The intuitive mind is a sacred gift and the rational mind is a faithful servant) என்றார். உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் ஒரு சிறு உள்ளுணர்வால் தான் வெளி வருகிறது என்பார்கள். அதைத்தான் நம் ரிஷிகளும், மகான்களும் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுள் சென்று தங்கள் ஆழ்மனதில் பயனித்து அதன் மூலமாய் பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையானவற்றை உள்வாங்கி நமக்கு தந்தனர். 

எதைநோக்கி ஆழமாய் தியானிக்கிறாயோ, அதையே அடைகிறாய் என்கிறது இராஜ யோகம். அதைத்தான் "வைமானிக சாஸ்திரத்தை" தந்த பாரத்வாஜரும், "ஆர்யபட்டியம்" தந்த ஆர்யபட்டாவும், "அனுத்தத்துவத்தை" தந்த ஆச்சார்யர் கண்ணட் என்பவரும், "ரசவாத சாஸ்திரத்தை" தந்த நாகர்ஜுனாவும், "யோக சாஸ்திரத்தை" தந்த பதஞ்சலியும் செய்தார்கள்.

நம் ஆழ்மணதை விடச் சிறந்த ஆய்வுக்கூடம் இந்த உலகில் ஏது ?

ப்ரபஞ்சத்தில் புதைந்திருக்கும் ஞானச் செல்வ‌ங்களை விடச் சிறந்த நூலகம் எது ?

இதை அறியாமல் பிதற்றும் மன‌நோயாளிகள் இதை புரிந்துக் கொள்வதுதான் எப்போது 

6)  உங்கள் மதத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. எங்கள் மார்கத்தில் எற்ற தாழ்வுகள் இல்லை, எல்லோரும் சமமாக கருதப்படுகிறார்கள். உங்களுக்குள்தான் எத்தனை ஜாதி வேறுபாடுகள் ?  உங்கள் கடவுள்களே ஜாதியை வலியுறுத்துகிறாரே ?


ஹிந்துக்கள் ஜாதி என்னும் வட்டத்திற்குள் வந்ததற்கு பல சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் முக்கியமாக அந்நிய படையெடுப்புகள் காரணமாய் இருந்தன. இதற்கு முன் உள்ள பதிவுகளில் குறிப்பிட்டது போல், வர்ண ரீதியான குணங்களை குறித்த வேறுபாடுகள் வேறு, ஜாதிகள் வேறு. வர்ண ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகள், காலப்போக்கில் தவறாக புரியப்பட்டு ஜாதி குழுக்களாய் மாறின. பண்டைய பாரதத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாய் வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்குள்ளே சில கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் விதித்துக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களில், ஆயிரக்கணக்கான ஜாதிகளாய் உருவெடுத்தனர். ஹிந்து மதம் என்று இன்று சொல்லப்படுவதே தர்மத்தால் ஒன்று சேர்ந்த இந்த ஆயிரக்கணக்கான குழுக்கள் தான். 

இன்று இந்த ஜாதிக் குழுக்களை நாம் வெறுத்தாலும், அவைதான் அந்நிய படையெடுப்புகளில் இருந்து நம்மை காப்பாற்றி உள்ளன. ஆங்கிலத்தில் "நெட்வர்க்" என்று சொல்வார்களே, அத்தகைய ஒரு வலைப் பின்னலாக தான் இந்த ஜாதிக் குழுக்கள் பங்காற்றின. ஒவ்வொரு குழுக்களும் தம் மக்களை தம் கூட்டத்திலிருந்து பிரியாத வண்ணம் காப்பாற்றிக் கொண்டன. சில ஜாதிக் குழுக்களோ மிக உயர்ந்த தண்மையை கொண்டவர்களாக இருந்தும் அந்நிய படையெடுப்பால் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டனர். பீகாரில் "பஷ்டூன்" எனப்படும் அரச பரம்பரையை சேர்ந்தவர்கள், முகலாயர்களோடு போராடி, தோல்வியுற்றதால் அடிமையாக்கப்பட்டு பின் கட்டாயப்படுத்தி மலம் அள்ள வைக்கப்பட்டனர். அவர்கள் பின்னர் மற்றவர்களால் அந்த தொழில் சார்ந்தே அடையாளப் படுத்தப்பட்டனர் என்பது ஒரு சிறந்த உதாரணம். அதை குறித்து தனி ஒரு பதிவில் விவரிக்கிறேன்.

மணிதன் இயல்பாகவே ஆளுமை செலுத்துவதில் விருப்பம் உள்ளவன். இயற்கையாகவே நான் பெரிது, நீ பெரிது என்று இருப்பவன். அதனால், மனிதர்களை விட்டு விடுங்கள். 

ஹிந்துமதத்தில் இறைவன் என்ன சொல்கிறான் ? பாரபட்சம் பார்க்கிறானா ?

இராமர், குகனோடு ஐவரானேன் என்று அவனை ஒரு சகோதரனாக ஏற்றுக் கொள்கிறார். காட்டில், சபரி என்னும் கிழவி எச்சில் படுத்தி கொடுத்த பழத்தை சக்ரவர்த்தி திருமகன் ருசித்து சாப்பிடுகிறார். 

கிருஷ்ணரோ, துரியோதனனின் அரச விருந்தை தவிர்த்துவிட்டு, விதுரன் எனும் சாதாரணவனின் குடிசைக்கு உணவருந்த போகிறார். 

சிவபெருமானோ, தன்னை திணமும் வழிபடும் அந்தணரை விட, தன்னை பெரிதும் வணங்கும் பக்தனாகிய கண்ணப்பன் எனும் வேடுவனின் கால் விரல்களை தன் கண்களில் பதியவிட்டு அவன் பக்தியை உலகுக்கு காட்டுகிறார். 

இப்படி இன்னும் ஆயிரமாயிராம் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு இடத்தில்லகூட‌ இறைவன் மணிதர்கள் மேல் பாரபட்சம் காட்டுகிறாரா என்றால் இல்லை. இல்லவே இல்லை.

அங்கே என்ன நடக்கிறது. இறைவனுக்கு இனை வைப்பவனுக்கு நரகத் தீயாம். நம்பிக்கை வைக்காதவர்களை அழிக்குமாறு இறைவனே ஆனையிடுகிறாராம். இப்படி அஸ்திவாரமே வண்முறையில் இருப்பதால், பல பிரிவுகளாய் பிரிந்து வன்முறை உலகெங்கும் தாண்டவமாடுகிறது. தினம் தினம் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அழிக்கின்றனர். இனச் சண்டையில் பலர் உயிர் இழக்கின்றனர். இதில் எந்த முகத்தோடு, இவர்கள் நம் ஜாதிப் பிரிவுகளை பற்றி பேசுகிறார்கள் ?  இவர்கள் நம் ஜாதிகளை பற்றி பேசுகிற நேரத்தில் குண்டு வெடிப்பில் உயிரிழக்கும் ஒரு பிரிவின‌ருக்கு முதல் உதவியாவது செய்யலாமல்லவா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக