சனி, 3 செப்டம்பர், 2016

பெண்களுக்கான மச்ச பலன்கள்!

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான  மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது.
நெற்றியின் நடுவில் மச்சம்: நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தாலும் மேற்சொன்ன பலனே அமையும். நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையு டன் வாழ்வார்கள்.
கன்னத்தில் மச்சம்: காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகரமாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.
இடது தாடையில் மச்சம்: பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பார்கள். ஆண்கள் இவர்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணடையவர்களாகவும் திகழ்வார்கள்.
வலது தாடையில் மச்சம்: பிறரால் வெறுக்கப்படுவார்கள். கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும். மூக்கு மீது மச்சம் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்த தெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.
காதுகளில் மச்சம்: இவர்கள் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணம் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.
நாக்கில் மச்சம்: நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரசனைகள் அதிகமாக இருக்கும்.
கழுத்தில் மச்சம்: கழுத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷ்டம் கிடைக்கும்.
இடதுபக்க தோளில் மச்சம்: சொத்துகளுக்கு அதிபதியானவளாக இருப்பாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.
முதுகில் மச்சம்: கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம்: இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.
தொடையில் மச்சம்: இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமையை அடைவார்கள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும்.
இடது முழங்காலில் மச்சம்: இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண்கள், புத்தி கூர்மையானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதுவே வலது முழங் காலில் என்றால் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள்.
மார்பில் மச்சம்: பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால்
அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
தொப்புளுக்கு மேலே மச்சம்: தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
தொப்புளில் மச்சம்: தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.
தொடையில் மச்சம்: இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.
பிறப்புறுப்பில் மச்சம்: பிறப்புறுப்பில்   மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக