ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நாடி ஜோதிட விதிகள் - நாடி ஜோதிடம்




நாடி ஜோதிடத்தின்படி பொதுவாக, ஒருவருடைய பிறந்த ஜாதகமானது, அவர் எந்த மாதிரிப் பலங்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டுகிறது. அந்தப் பலங்களை எப்போது அனுபவிப்பார் என்பதை, நாடி ஜோதிடமானது அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகத்தைக் கோச்சார கிரகம் எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை தருகிறதோ, அப்பொழுது அனுபவிப்பார் என்று கூறுகிறது.

பழைய ஜோதிட(பராசரர்) முறையானது பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசா புத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது. ஆனால் பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து முற்றிலும் கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. குறிப்பாக, ராசிக் கட்டத்தில் ஒரு கிரகமாகப்பட்டது, தனித்து எந்த வீட்டில் இருந்தாலும், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. அதற்கு மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும். இது நாடி விதி.

நாடிமுறை ஜோதிடத்தில் சுமார் 23 விதிகள் உள்ளன. இவற்றைத் தெரிந்துகொண்டால் நாடி முறையில் பலன் சொல்வது சுலபம்.
www.danvantarinadi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக