வியாழன், 8 செப்டம்பர், 2016

கிருஷ்ண அவதாரம் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் ஆகும். இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவர் இந்து சமய கடவுளாவார். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர கேசவன், கோவிந்தன், கோபாலன் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.


கம்சன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தங்கை, ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் வீடு திரும்பும் போது கம்சனுக்கு ஓர் அசரீரி கேட்டது. ரூசூ39;கம்சா, உன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறதுரூசூ34; என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்சன் தேவகியைக் கொன்று விட்டால் தன் உயிருக்கு பிரச்சனை இல்லை என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது வசுதேவன் கம்சனிடம் வேண்டி இவளை கொல்ல வேண்டாம், நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். எனினும் அவர்கள் இருவரையும் சிறை வைத்திருந்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.


எழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.


தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன் காத்திருந்தான் கம்சன். எட்டாவது குழந்தையாக அவதரித்தார் மகாவிஷ்ணு. அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதையிடம் மாற்றி, அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர். கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது, அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது.


கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை. கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின. ஆயர்பாடியில் கிருஷ்ணன், வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால், கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி, மக்களை காத்ததன் மூலம் அழித்தான். இறுதியாக கம்சன், மல்யுத்த வீரர் இருவரை அனுப்பி பலராமனையும், இவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். எனினும் மல்யுத்த வீரர்கள் இவர்களால் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணருடன் மோத முயன்றான். இறுதியில் இவர் கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக