சனி, 11 ஜூன், 2016

நாடி ஜோதிடம்
நாடி ஜோதிடம் ஒரு பழங்கால விஞ்ஞானம் ஆகும். இதைப் பற்றி யாஹூ-அகத்தியர் குழுமத்தில் மருத்துவர் ஜெ.பி. அய்யா அவர்கள் எழுதிய ஒரு தொடரை உங்களுக்காக வழங்குகிறேன். இதில் படியெடுத்து ஒட்டியதைத் தவிர என்னுடைய வேலை ஒன்றுமில்லை. அனைத்தும் மருத்துவர் அய்யாவையே சாரும். "நாடி ஜோதிடம்" "இதயம்" இரு வார இதழ் - 1992 ஆசிரியர் M.துரைராஜ் மலேசியா இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம்ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரி கால ஞானிகள்" என்றுஅழைப்பர். இவர்களில் பலர் முனிவர்களாகவும்,ரிஷிகளாகவும், சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக்கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச்சென்றனர். அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு. அதன் பெயர் "நாடி சாஸ்திரம்" அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர். ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும்வாழ்க்கைநிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர். குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர்,பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டுஅந்த ஏடுகளில் காணப்படும். தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தாரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை. "கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகு ஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது. நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள். தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள்சிதறிக் கிடக்கின்றன.அவற்றில் பல அழிந்துவிட்டன.மேலும் பல மறைந்துபோயின.தற்சயம் மிகவும் பிரபலமானவை காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிகநாடியும்தான். வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது. இப்போது சிறிது "Theory" (Want to skip?) பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும். ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச்சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும்முறையை ஒரு பாடல் கூறுகிறது: "பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுளை. (மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே? என்றெல்லாம்என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை). காம்பைச்சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி,அவ்வெண்ணிக்கையை ஆற்றால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கை. இப்போது ஒரு சந்தேகம். சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள்தோன்றினவா? அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா? விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடைபெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில்இயங்குகின்றனவா? காரணத்தின் விளைவாகக் காரியமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள்அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப்பட்டுவிட்டனவா? மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு.கதையின் போக்கில் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது. துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக்கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன. நிகழ்ச்சிகளின் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சரி¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன. மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம்நிகழவேண்டியது; தவிர்க்கமுடியாதது; வேறு வழியில்லை. "அவனுடைய இறப்பு எனப்படும் கட்டாயம்,நிச்சயமாக நிகழவேண்டி, காரணங்கள்தோன்றின", என்று வைத்துக்கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம். கொடியசைந்தும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகா¢ல் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது.தலைமை குருக்கள் மஹா பரி நிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக்கொண்டிருந்த கொடியன்று அசைந்தது. அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது.அதன் தாடர்பாகவாக்குவாதமும், அதன் விளைவாகப் பெரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன. இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும் நியதியும்,கட்டுக்கோப்பும்விளங்குகின்றன.இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன. இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும். காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தெரிந்திருக்கின்றன. இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும்.அதிலும்யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும். இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச்செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு. ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது. காலதத்துவத்தின் ரகசியங்களையும் "CosmicOrder" எனப்படும் பிரபஞ்ச நியதியையும் தன்னுள்ளடக்கிக் காட்டும் நூல்களில் நாடி சாஸ்திரமும் அடங்கும். நாடி ஜோதிடத்தில் கெளசிகம்,அகத்தியம்,சப்தரிஷி என்றெல்லாம் பெயர்கள் கொண்ட பல பிரிவுகள் உள்ளன என்று ஏற்கனவே கூறியுள்ளேன். இவற்றுள் கெளசிகம், அகத்தியம் போன்றநாடி நூல்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் கைரேகைகளை அடிப்படையாகக் கொள்கிறார்கள்.ஆனால் சப்தரிஷி நாடியிலோ குறிப்பிட்டநபரின் ஜனன ஜாதகத்தில் கண்டுள்ள ஜன்ம லக்கினத்தையும் மற்ற கிரகங்கள் நின்ற நிலைகளையுமே எடுத்துக் கொள்கிறார்கள் இவற்றின் அடிப்படையில் அவரவருக்குரிய நாடி நூல்களை எப்படித்தேடிக் கண்டு பிடிக்கிறார்கள் என்பதைப்பிறகு சொல்கிறேன். அதற்கு முன் ஒரு கேள்விக்கு பதில் கூறிவிடுகிறேனே! ஒருவருக்கான நாடி நூல் இன்னொருவருக்குப்பொருந்த முடியுமா? மனிதர்களின் கை ரேகைகளில் பல வகையான அமைப்புகள் காணப்படுகின்றன.எத்தனையோ வகையான ரேகை அமைப்புகளில் குறிப்பிட்ட சில ரேகைஅமைப்புகளை மட்டுமே நாடி சாஸ்திரத்துக்கு உரியதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த சிறப்பு ரேகை அமைப்புகள் பதினொன்று இருக்கின்றன. இவற்றை வைத்துத்தான் ஒரு குறிப்பிட்டநபருக்குரிய நாடி ஜோதிட ஏடு தேடப்படும். கோபுராங்கி,தனயோகம், புவிச்சக்கரம், சங்கு, தாமரை, போன்ற பெயர்களைஅவ்வமைப்புகள் கொண்டிருக்கின்றன. இந்த 11 வகையான ரேகை அமைப்புகளும் எந்த விதமான வரிசையில் அமைந்துள்ளன என்று பார்ப்பார்கள். உதாரணமாக இவை, தனயோகம், சங்கு- தாமரை - புவிச்சக்கரம்- என்றவாறோ, சங்கு- தாமரை- தனயோகம்- புவிச்சக்கரம் என்றவாறோ,கோபுராங்கி- சங்கு- தாமரை-புவிச்சக்கரம்- தனயோகம் என்றவாறோ, பல வகைகளில் வரிசையாக அமைய முடியும். இந்தத் தொடர்கள் வெவ்வேறு முறைகளில் ஒவ்வொருவருக்கும் அமைந்தி ருக்கும். இந்த இடத்தில் கணித சாஸ்திரத்தில்காணப்படும் சில விதிகளைப் பற்றி உங்களிடம் கட்டாயம் கூறியாக வேண்டியிருக்கிறது. கணித சாஸ்திரத்தில் "Permutation and Combination"என்றொரு விதியுண்டு. இரண்டு எண்களை நான்கு விதமாக இரண்டிரண்டாக வா¢சைப்படுத்தலாம். 1,2 என்னும் இரண்டு எண்களை எடுத்துக்கொள்வோம். 1,2; 2,1; 2,2; 1,1 என்றவாறு நான்கு வகைகளில் இவை அமையும். மூன்று எண்களோ 3X3X3 =27 வகைகளில் அமையும். இப்போது 1,2,3யை எடுத்துக்கொள்வோம். 1,1,1; 1,1,2; 1,1,3; 1,2,1; 1,2,2; 1,2,3; 1,3,1; 1,3,2; 1,3,3.....etc.., etc., என்றவாறு 3,3,3, வரை 27 வகைகளில் அமையும். நான்கு எண்களோ 4X4X4X4=256 வகைகளில் அமையும். இம்முறைக்கு தமிழ் மந்திர சாஸ்த்ரத்தில் "மாறல்" என்று பெயர். பஞ்சாட்சர மாறல், சடாட்சர மாறல் என்றெல்லாம் சில மந்திர அமைப்புகள்இருக்கின்றன. தமிழ் இலக்கண விதிகளில் கூட இந்தPermutation/Combination பயன்பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் செய்யுளியலில் 357, 406, ஆகிய பாடல்களில் பார்த்தீர்களானால் தொல்காப்பியரேகூட இதைக் கையாண்டிருப்பது தெரியும். நமது இந்திய சாஸ்திரிய சங்கீதத்திலும் கூட Permtation/Combination அமைந்துள்ளது. ராகங்களில் ஆரோகண அவரோகணக் கிரமத்தில் அமைந்துள்ள ஸ்வர வரிசைகளை கற்பனையைப் பயன்படுத்தி Permutation/Combination விதியின்படி விரிவாக்கிக்கொண்டே போகலாம்.ஒரே ராகத்தை மணிக்கணக்கில் பெரிய வித்வான்கள் விஸ்தாரமாகப் பாட முடிகிறது அல்லவா? வேதங்களை ஓதும் முறைகள் சில இருக்கின்றன. அவற்றைப் "பாடங்கள்" என்று கூறுவார்கள்.சிகா பாடம், ஜடாப்பாடம், கனப்பாடம்,முதலிய எட்டுவகைகள் இருக்கின்றன."அஷ்ட விக்ருதிகள்" என்று இவற்றைக் கூறுவார்கள். இந்த மாதிரி ஓதும் முறைகளிலும் கூட Permutation/Combination தான் அமைந்திருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? மனிதர்களிடையே காணப்படும் அந்த பதினோரு வகையான ரேகை அமைப்புகளைPermutation/Combinationபடி 11X11X11X11X11X11X11X11X11X11X11 = 285,311,670,611 வெவ்வேறு வரிசைகளாக ஏற்படுத்தமுடியும். Theoretically, இந்த உலகின் ஜனத்தொகை இந்த எண்ணிக்கையை மீறும்போதுதான் ஒரே மாதிரியான ரேகை வரிசைகள் கொண்ட இரண்டு பேர் இருக்க முடியும். அப்பொதுதான் கலி முற்றும். பூபாரம் அதிகரித்துவிடும். 28531 கோடியை ஜனத்தொகை எட்டும்வரைகாத்திருந்து பார்ப்போமே? Cloning முறையால் ஏற்படுத்தப்படும் மனிதப்பிரதிகளுக்கு(அச்சுபிழையல்ல) ஒரே மாதியான ரேகை அமைப்புகள் இருக்குமா? "Theoretically possible", பல்கேரியப் பேராசிரியர் லிர்ப்பா லூ·ப் சொல்கிறார். அந்த அளவுக்கு மனித இனம் தன்னையே செயற்கையாகப் படைத்துகொள்ள முடியும்போது கலி முற்றியதாகத்தானே அர்த்தம்? இதுவும் பண்டைய சாஸ்திரங்களில் சொல்லப்படுவதுதானே? இந்த இடத்தில் கொஞ்சம் diversion. உலகில்வியாபகமாகத் தமிழர்கள் பரவி விட்டதால் மற்றவர்களைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வது நல்லதுதானே? Permutation/Combination விதியைத் தன்னகத்தே கொண்ட மற்றொரு சாஸ்திரம்" யீத்சிங்" Iching ;சீன தேசத்துச் சோதிடம். "யீ" என்றால் மாறுதல். "சிங்" என்றால் நூல். அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களை முன்கூட்டியே அறிவிப்பது இந்நூல். யீச்சிங்கைப் பயன்படுத்தி தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை நடப்புகளைஅறியலாம். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதற்குரிய ஆலோசனைகளையும் இந்நூலின் மூலம் பெறலாம். New York Stock Exchange இல் இந்த முறையே பிரபலமாயிருக்கிறது. ஒரு நாடு அல்லது சமுதாயத்தின் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ளலாம். உலகின் நடப்பையும் தொ¢ந்துகொள்ளலாம். பண்டைய சீன ஞானிகளும் இதையெல்லாம்அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்களிடம்கூட தமிழ் நாடி சாஸ்திரநூல்களுக்கு இணையானவை கிடையாது. யீத்சிங்கில் Permutation மட்டுமல்லாது BinarySystemமும் இருக்கிறது. இந்திய ஜோதிடத்தில் புலமை வாய்ந்தவர்கள் யீத்சிங் போன்ற முறைகளையும்ஆராயவேண்டும். தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கும் நாடி நூல்களில் வைத்தீஸ்வரன் கோயில்,திருவானைக்கா முதலிய ஏடுகளே முக்கியமானவை. குன்றக்குடியிலும் ஏடுகள் இருப்பது பலருக்குத் தெரியாது. ஒரு குறிப்பிட்ட நபரின் நாடி ஏடுகள் யாரிடம் இருக்கின்றன என்பதைத் தேடித்தான் கண்டுபிடிக்க முடியும். பலருக்குக் கிடைக்கமாட்டா. சிலருக்கு மட்டுமே அதிகத் தேடல் இல்லமலேயே கிடைக்கும். ஏடுகளைக் கண்டு பிடிக்கச் சில முறைகள்இருக்கின்றன. சப்தரிஷி நாடிக்கு ஜனன லக்னமே அடிப்படை. கெளசிகம், மச்சேந்திரம், முதலிய ஏடுகளில் கைரேகைகளைப் பயன்படுத்துகிறார்கள். குன்றக்குடி முறையை விளக்குகிறேன். ஏடு பார்க்க விரும்பும் நபர், ஜோதிடரை சந்திக்கும் நேரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விநாயகர் வழிபாட்டுடன் ஜோதிடர்,நபா¢ன் கை ரேகை அமைப்புகளை வரிசைக் கிரமமாகக் குறித்துக்கொள்வார். இவ்வாறு பதினோரு வகையான ரேகை அமைப்புகளையும் குறித்துக்கொண்ட பின்னர் ஏடு தேடல் ஆரம்பமாகும். உதாரணமாக முதலாவது ரேகை அமைப்பு கோபுராங்கியாகவும், இரண்டாவது தனயோகமாகவும், மூன்றாவது புவிச்சக்கரமாகவும், நான்காவது சங்கு, ஐந்தாவது தாமரை என்றும் வைத்துக் கொள்வோம். முதலமைப்பு கோபுராங்கியாக உள்ளசுவடிக்கட்டுகளிலிருந்து தனயோக ரேகைப் பிரிவை எடுப்பார்கள். கோபுராங்கி-தனயோகச் சுவடிகளில் மூன்றாவது அமைப்பாக விளங்கும் புவிச்சக்கர ரேகை ஏடுகளை எடுத்துவிடுவார்கள். அதிலேயே சங்கு சுவடிகளை ப்பிரித்தபின்னர், அவற்றுள் தாமரை சுவடிகளைத் தேடுவார்கள். வலையில் surfing செய்து உள்ளுக்குப் போகும்போது இதைத்தானே செய்கிறோம்? கடைசியில் அவர்கள் தேடிய sequence வந்துவிடும். கிடைக்காமல் போய்விடுவது அதிகம். ரேகை அமைப்புகளின் வரிசைக்கேற்ப ஏடுகளில் காணப்படும் ரேகை அமைப்பு வரிசை ஒத்திருக்கவேண்டும்.அப்படி இல்லையெனில் தேடி வந்தவர் திரும்பவேண்டியதுதான். அவ்வாறு ஏடு அமைந்துவிட்டால், நல்ல நேரம் பார்த்துப் படிக்க ஆரம்பிப்பார்கள்.... முழுவதும் பாடல்கள் ரூபத்திலேயே ஜோதிடக் குறிப்புகள் அமைந்திருக்கும். ஜாதகருடைய பிறந்த வீடு, ஊர், மூதாதையர் விபரம், உறவு, சொந்தப்பெயர், மனைவி மக்கள், சொத்து சுகம், குலம் கோத்திரம், முதலியவை சொல்லப்பட்டிருக்கும். உதாரணம் ஒன்றைப்பார்ப்போம். "தலைவாசல் உத்தரமாகும் சாற்றுவோம் கீழ்மேல்வீதி நீலமாய்த் தந்தி யீசன் நிகழ்த்துவோம் கீழ்பாலாஉ

நாடி ஜோதிட

நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி. நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.

பல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது. நாடி யுக்திகள் பல நுணுக்கங்களை கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.

நாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.
1. சப்த ரிஷி நாடி
2. சந்திரகலா நாடி
3. மீனா நாடி
4. பிருகு நாடி
5. சிவ நாடி
6. நந்தி நாடி
7. கால சக்கர நாடி
8. கணேச நாடி
9. சூரிய நாடி
10. சந்திர நாடி
11. அங்கார நாடி
12. புதன் நாடி
13. குரு நாடி
14. சுக்கிர நாடி
15. சனி நாடி.

மேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும். சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது. ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.

சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜோதிட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும். ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.

நாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா? என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

நமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும். நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக