சனி, 10 டிசம்பர், 2016

அத்தியாயம் -1 ''அர்ஜுன விஷாத யோகம் ''


 அத்தியாயம் -1
அர்ஜுன விஷாத யோகம் 
குழப்பமும் கலக்கமும் 

இன்றோ  நாளையோ  ஒவ்வொருவரும் இறைவன் என்னும் உண்மையை நாடிச் சென்றே ஆக வேண்டும் .அது இன்றா  ? அல்லது நாளையா ? என்பது தான் கேள்வி .பல துயரங்கள் நம்மை தாக்கும் போது என்ன செய்வது என்ற குழப்பம் ஒவ்வொரு மனிதனையும் வந்து தவிக்க வைக்கும்.எல்லாம் இவ்வளவு  தானா ? என்ற  மிகப் பெரிய சோகம் ஏற்படும் .அத்தகைய சூழ்நிலையில் தான் அர்ஜுனன் இருக்கிறான்.உற்றார் ,உறவினரைக் கொன்று தான் அரசாட்சியை பெற வேண்டுமா ? என்னும் மிகப் பெரிய சோகத்தில் குழம்புகிறான்.கலங்குகிறான் .தவிக்கிறான்.
அதன் காரணமாக போரிலிருந்து விலகலாம் ,சண்டையிடத் தேவையில்லை என முடிவு செய்கிறான்.தன் முடிவிற்கான 
காரணங்களை ஸ்ரீ கிருஷ்ண  பகவானிடம் கூறுகிறான் ...

கீதை உபதேசத்தை நேரில் கேட்டவனான சஞ்சயனிடம் திருதிராஷ்டிர மன்னன் கேட்கின்ற கேள்வியுடன் அத்தியாயம் துவங்குகிறது ...





த்ருதாஷ்டிரன் கேட்கிறான்...
ஸஞ்சயனே !
குருக்ஷேத்ரமென்னும் தர்ம பூமியில்
 யுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒன்று கூடிய
 என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள் ?

ஸஞ்சயன் சொன்னான் :-
அப்போது 
துரியோதன மன்னன் ,
வியூகமாக அணிவகுத்து நிற்கும் பாண்டவ சேனையைப் பார்த்து துரோணாச்சரியரின் அருகே சென்று 
இவ்வாறு கூறினான்.
 குருநாதா !

தங்கள் சிஷ்யனும் ,
புத்திசாலியும்
துருபதமன்னனின் மகனுமான
 திருஷ்டத்யும்னனால் அணிவகுக்கப்பட்ட
 இந்த பாண்டவர்களின் பெரிய சேனையைப் பாருங்கள் .
இந்த பாண்டவ சேனையில்
 சூரர்களும் ,
பெரிய வில்களைத் தாங்குபவர்களும் ,
சண்டை செய்வதில்
 பீம,அர்ஜுனர்களுக்குச் சமமானவர்களுமான
  யுயுதானன்,    விராடன்,
மஹாரதனான த்ருபதன்,
த்ருஷ்டகேது
  சேகிதானன்,
வீரனான காசிராஜன்
  புருஜித்,   குந்திபோஜன்,
 மனிதசிரேஷ்டனான சைப்யன் ,
 பராக்கிரமசாலியான யுதாமன்யு,  
உத்தமொளஜஸ்,  
வீரமிக்க சுபத்திரையின் மகன்,
   துரொளபதியின் குமாரர்கள், 
இவர்கள் எல்லோருமே மகாரதர்கள்.

பிராம்மணோத்தமரே!

இனி
 நமது சேனையில்
முக்கியமானவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
என்னுடைய சேனைத்தலைவர்களை
 ஞாபகத்திற்காகத் தங்களுக்குச் சொல்கிறேன்.
தாங்கள், பீஷ்மர், கர்ணன்,
 க்ருபாசார்யர், 
யுத்ததில் ஜெயிப்பவரான அஸ்வத்தாமா, 
விகர்ணன், 
ஸோமதத்தனின் மகன் பூரிச்ரவஸ்,
மற்றும்
அனேக வீரர்கள்
எனக்காக உயிரையும் பொருட்படுத்தாதவர்கள்,
இவர்கள் எல்லோரும்
 பற்பல ஆயுதங்களைத் தாங்குபவர்கள்,
போர்க்கலையில் வல்லவர்கள்.
இப்படிப்பட்ட நம் சேனை
 பீஷ்மரால் காக்கப்பட்டு
அபரிமிதமாக இருக்கிறது.
பீமனால் காக்கப்பட்ட இந்த பாண்டவர்களின் சேனையோ
 மிதமாக இருக்கிறது.
ஆகையால்,
 நீங்கள் எல்லோரும்
 சேனைகள் நுழையும் வழிகள் எல்லாவற்றிலும்
அவரவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள
 இடத்தில் இருந்து ,
பீஷ்மாச்சாரியரையே கவனமாகக் காத்து வாருங்கள்.
இவ்வாறு
துரியோதனன் சொல்லிக் கொண்டிருக்க ,
வீரம் பொருந்தியவரும் ,
குரு வம்சத்துப் பெரியவரும் பாட்டனாருமான
  பீஷ்மர்,
உரத்த சிங்கநாதம் செய்து ,
சங்கையும் ஊதினார்.
அதைக் கேட்டு
துரியோதனன் மகிழ்ச்சியடைந்தான்.
பிறகு,
சங்குகளும் ,பேரிகைகளும் ,
தம்பட்டங்களும்,பறைகளும் ,
கொம்புகளும்
வெகு வேகமாக முழக்கம் செய்தன.
அந்த முழக்கம்
ஒரு பேரொலியாக இருந்தது.
அதற்குப் பிறகு
வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் அமர்ந்திருந்த
கண்ணனும் ,அர்ஜுனனும் 
தெய்வத்தன்மை பொருந்திய
தம் சங்குகளை ஊதினார்கள்.
பாஞ்ச ஜன்யம் என்ற சங்கைக்
கண்ணன் ஊதினார்.
தேவதத்தம் என்ற சங்கை
அர்ஜுனன் ஊதினான்.
அச்சமூட்டும் செயல்களைப் புரிபவனும்,
ஓநாய் போன்ற வயிற்றைப் படைத்தவனுமான 
பீமசேனன் ,
பொளண்டிரம் என்ற தன் பெரிய சங்கை ஊதினான்.
குந்தியின் மகனான தர்மராஜன், 
அநந்த விஜயம் என்ற சங்கையும்,
நகுலனும் சகாதேவனும்
முறையே
ஸுகோஷம் ,மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும்
ஊதினார்கள்.
வில்வீரனான காசிராஜனும்,
மஹாரதியான சிகண்டியும்,
த்ருஷ்டத்யும்னனும்,
விராட தேசத்தரசனும்,
யாராலும் தோற்கடிக்கப்படாத சாத்யகியும்,
துருபதனும் ,
துரொளபதியின் பிள்ளைகளும்,
புஜபலம் மிக்கவனும்
 சுபத்திரையின் குமாரனுமான
அபிமன்யுவும்,
எல்லோரும்
ஒரே சமயத்தில்
 தனித்தனியாக
 தங்கள் சங்குகளை
முழக்கினார்கள்.
அந்த பெருமுழக்கம்
 வானத்தையும்
 பூமியையும்
எதிரொலிக்கச் செய்து கொண்டு
துரியோதனாதியரின் இதயங்களைப் பிளந்தது.
அரசே!
ஆயுதங்களைப் பிரயோகிக்கும் அந்த சமயத்தில்
ஆஞ்சநேயரைத்
 தன் தேர்க்கொடியில்
அமரச்செய்து கொண்டவனான அர்ஜுனன்,
கெளரவர்கள் போரிடுவதற்காக நிற்பதைக் கண்டு
வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு ,
ரிஷிகேசனான கிருஷ்ணனிடம் 
இந்த வார்த்தைகளைச் சொன்னான்.
அர்ஜுனன் சொன்னதாவது :-

அச்சுதா !
என்னுடைய தேரை 
இரண்டு சேனைகளின் நடுவில் நிறுத்து.
யுத்தம் செய்ய வேண்டுமென்ற ஆசையுடன் 
இங்கு நின்று கொண்டிருக்கும் இவர்களை 
நான் பார்க்க வேண்டும்.
இந்த யுத்தத்தில் 
யாரோடு நான் சண்டையிட வேண்டுமோ,
துர்புத்தியுள்ள துரியோதனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக யுத்தம் செய்யும் எண்ணத்தோடு
 இங்கே யார் யார் வந்திருக்கிறார்களோ
 அவர்களை
 நான் பார்க்கப் போகிறேன்.
ஸஞ்சயன் சொல்கிறான் ! 
பாரத மன்னரே ,
இவ்வாறு அர்ஜுனன் கண்ணனிடம் சொல்ல,
அவர் அந்த உயர்ந்த ரதத்தை 
பீஷ்மர், துரோணர்
இவர்களுக்கும்,
எல்லா அரசர்களுக்கும் எதிரில் நிறுத்தி,
 ''அர்ஜுனா !
 இங்கு ஒன்றுகூடியுள்ள கெளவர்களைப் பார் !  
என்றான்.
அர்ஜுனன் ,
அங்கே இருபுறத்து சேனைகளிலும்
நின்று கொண்டிருக்கும்
 தகப்பன்மார்களையும்,
பாட்டன்மார்களையும்,
ஆச்சார்களையும்,
மாமன்மார்களையும்,
சகோதரர்களையும்,
பிள்ளைகளையும்,
பேரப்பிள்ளைகளையும்,
சிநேகிதர்களையும்,
மாமனார்களையும்,
நண்பர்களையும்
 கண்டான்.
அவ்வாறு எல்லா பந்துக்களும் நிற்பதைக் கண்ட அர்ஜுனன்,
அதிக இரக்கம் கொண்டு ,
மிக்க வருத்தத்துடன்
 இவ்வாறு சொன்னான்;-
கிருஷ்ணா ! 

போர் செய்ய விரும்பி
 இங்கே வந்திருக்கும் இந்த பந்துக்களைப் பார்த்து
 என் உடலுறுப்புகள் தளர்வடைகின்றன.
வாய் உலர்ந்து போகிறது.
உடலில் நடுக்கமும் 
மயிர்க்கூச்சமும் உண்டாகிறது.
கையிலிருந்த காண்டீபம் நழுவுகிறது.
உடலெல்லாம் எரிகிறது.
நிற்கவும் முடியவில்லை.
மனம் குழம்புவது போலிருக்கிறது.

கேசவா ! 

பல கெட்ட சகுனங்களை 
நான் காண்கிறேன். 
யுத்தத்தில் 
சொந்த ஜனங்களைக் கொல்லுவதால் 
எந்த நன்மையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
கிருஷ்ணா !
 நான் வெற்றியை விரும்பவில்லை. 
ராஜ்யத்தையோ,
சுகத்தையோ விரும்பவில்லை.
கோவிந்தா! 
ராஜ்யத்தாலோ, 
போகங்களாலோ,
உயிர் வாழ்ந்திருப்பதாலோ,
எனக்கு என்ன பிரயோஜனம் ?
எவருக்காக நாம் ராஜ்ஜியத்தையும் ,
போகங்களையும்,
சுகங்களையும் விரும்புகிறோமோ,
அப்படிப்பட்டவர்களெல்லாம்
 பிராணனையும் 
செல்வங்களையும் துறந்து 
இந்த யுத்த பூமியில் நிற்கிறார்கள்.
ஆசாரியர்கள்,
தகப்பன்மார்கள்,
பிள்ளைகள்,
பாட்டன்மார்கள்,
மாமன்மார்கள்,
மாமனார்கள்,
பேரன்கள்,
மைத்துனர்கள்,
சம்பந்திகள்,
இவர்களெல்லாரும் நிற்கிறார்களே!
மதுசூதனா !
இவர்கள் என்னைக் கொல்ல வந்தாலும்
 நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை.
மூவுலகங்களும் கிடைப்பதாக இருந்தாலும்கூட ,
அதையும் நான் விரும்ப மாட்டேன்.
அப்படியிருக்க 
ஒரு பூமிக்காகவா நான் இவர்களைக் கொல்வேன் ?

ஜனார்த்தனா !

திருதராஷ்டிரனுடைய மக்களைக் கொன்று
 நமக்கென்ன மகிழ்ச்சி வந்து விடப்போகிறது ? 
இந்த மகா பாவிகளைக் கொல்வதால் 
நமக்குப் பாபமே வந்து சேரும்.
ஆகவே ,
மாதவா !
நம் பந்துக்களான 
திருதராஷ்டிரன் மக்களை நாம் கொல்வது தகாது.
சொந்தக்காரர்களைக் கொன்றுவிட்டு
 நாம் எப்படிச் சுகமாக இருக்க முடியும் ? 
நீயே சொல்.

பேராசையால் விவேகம் அழிந்து போனவர்களான இவர்கள்
 குல நாசத்தால் ஏற்படும் கெடுதலையும் 
மித்திர துரோகத்தால் ஏற்படும் பாபத்தையும் 
அறியவில்லை.

ஜனார்த்தனா ! 
குல நாசத்தால் ஏற்படும் 
கெடுதியை நன்கறிந்தவர்களானா நாம்
 இந்த பாபச் செயலிலிருந்து விலகத் தெரிந்து கொள்ளவேண்டாமா ?
குலம் அழிந்தால் 
புராதனமான குல தர்மங்கள் அழிந்து போகும்.
தர்மம் அழிந்தால் 
குலம் முழுவதையும் 
அதர்மம் சூழ்ந்து விடும்.
அவ்வித கலப்பு 
குலத்தை அழித்தவர்களுக்கும்,
அந்த குலத்திற்கும் நரகத்தையே தரும்.
இவர்களுடைய பித்ருக்களெல்லாம் 
சிரார்த்த பிண்டமும்,
தர்ப்பண ஜலமும் அற்று
நரகத்தில் விழுவார்கள்.
வர்ணக் கலப்பை உண்டாக்குகின்ற குல பாதகர்களின் இத்தகைய தீங்குகளால் 
நிலையான ஜாதி தர்மங்களும் 
குல தர்மங்களும் 
அழிந்து போகும்.
ஜனார்த்தனா !
குல தர்மங்கள் அழியப் பெற்ற மனிதர்களுக்கு நிலையாக
 நரக வாசமே கிடைக்குமென்பதைக் 
கேள்விப்பட்டிருக்கிறோமே !
ஐயோ !
கஷ்டம் !
ராஜ்ய சுகத்தில் ஆசை வைத்து 
பந்துக்களைக் கொல்லப் புகுந்து, 
பெரிய பாபத்தைச் செய்யத் தொடங்கி விட்டோமே !
ஒருவேளை ,
நான் கையில் ஆயுதம் தரிக்காமலும் ,
எதிர்க்காமலும் இருக்கும் போது,
ஆயுத பாணிகளான திருதாஷ்டிரக் குமாரர்கள் 
யுத்தத்தில் என்னைக் கொன்று விட்டார்களேயானால் ,
அதுவே எனக்கு மிகவும் நன்மையாக இருக்கும்.
ஸஞ்சயன் சொன்னது :-
இப்படிச் சொல்லி விட்டு ,
அர்ஜுனன்,
போர்க்களத்தில்
அம்பையும் வில்லையும் எறிந்து விட்டு
துக்கத்தால் மனம் கலங்கி ,
தேர்த்தட்டில் அமர்ந்து விட்டான்.
 அர்ஜுந விஷாத யோகம் என்ற முதல் அத்தியாயம் முற்றிற்று.

 

 

செவ்வாய், 6 டிசம்பர், 2016

வெற்றிகளை குவிக்கும் சூரிய வழிபாடு

உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை மாதம். சூரியன், சனீஸ்வரரின் வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சப்தமி எனும் ஏழாம் நாளில் வருவதால் ரத சப்தமி என எல்லோராலும் அறியப்படுகிறது. நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். சகல ஜீவ ராசிகள், பயிர் பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி, ஆளுமை போன்றவற்றின் கர்த்தா.

ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், அதிகார மையங்கள், தலைமை செயலாளர்கள் ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் இந்த ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின், தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும். அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள், காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது. அருக்கன் என்றால் சூரியன். இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது. எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது. சூரியனுக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு. தினகரன், பாஸ்கரன், அருக்கன், சூரிய நாராயணன் என பல காரணப் பெயர்கள் உண்டு. இதில்  சூரிய நாராயணன் என்ற பெயர் விஷ்ணுவை குறிப்பதாகும். இந்த ரத சப்தமி நாளில் எல்லா வைணவ தலங்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறும். திருப்பதியில் அதிகாலை சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை எந்த நாளும் இல்லாத வகையில் பெருமாள் சப்த வாகனங்களில் அமர்ந்து அருள் பாலிப்பார்.

முதலில் சூரிய பிரபையில் ஆரம்பித்து, சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், கடைசியாக சந்திர பிரபையில் எழுந்தருளி நாள் முழுவதும் சேவை சாதிப்பார். இந்த நாள் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல் புண்ணிய பலன்களை தரும் நாளாக புராணங்கள் போற்றுகின்றன. இந்நாளில் துவங்கும் புதிய முயற்சிகள், அரசாங்க விஷயங்கள், முக்கிய சந்திப்புக்கள். தொழில், வியாபாரம் ஆரம்பித்தல் எல்லா சுப விஷயங்களுக்கும் பிள்ளையார் சுழி போடுதல் போன்றவை வெற்றிகரமாக முடியும். தியானம், மந்திரஜெபம், யோகா, கல்வி, கலை, பயிற்சிகள் போன்றவற்றை துவக்குவதற்கு நல்ல நாளாகும். இன்று செய்யப்படும் தானங்கள், தர்மங்கள், உதவிகள் ஒன்றுக்கு பத்தாக புண்ணியத்தை சேர்க்கும்.

வழிபாடு -பரிகாரம்

தினசரி சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, கோதுமை ரவை போன்றவற்றை இல்லாதோர், நோயாளிகளுக்கு தரலாம். கோதுமை பலகாரத்துடன் பழங்கள், கீரை சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம். தினசரி சூரிய காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி வரலாம். ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். சூரிய தலமான ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம்  சூரியனுக்குரிய பிரார்த்தனை தலமாகும். ரத சப்தமி மற்றும் ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை சப்தமியில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்திக்கலாம்.by.www.danvantarinadi.com/
சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)

கிழமை    :    ஞாயிறு
தேதி    :                1, 10, 19, 28.
நட்சத்திரம்    :    கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்    :    சித்திரை, ஆவணி
ராசி    :    சிம்மம்
உச்சம்    :    மேஷம்
நீசம்    :    துலாம்
நிறம்    :    சிவப்பு
ரத்தினம்    :    மாணிக்கம் (சிவப்பு)
தானியம்    :    கோதுமை
ஆடை    :    சிவப்பு

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

சங்கு தீர்த்தம்

சங்கு தீர்த்தம்;

 ஸ்ரீமந் நாரயணர் திருக்கரத்தில் ஒருகையில் வலம் புரிச்சங்கும் மறுகையில் ஸ்ரீசக்கரமும் தரித்தபடி காட்சி அளிப்பார்.


தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலை அடையும் போது அமிர்தம் மகாலஷ்மி, வலம்புரிசங்கு, காமதேனு இப்படி பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதில் மகாவிஷ்ணு மகாலஷ்மியை தனது இருதயத்திலும், கையில் சங்கையும் வைத்துக் கொண்டார். காத்தல் கடவுளாக விளங்கும் மகாவிஸ்ணு மகாபாரதயுத்தம் நடைபெற ஆரம்பிக்கும் போது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். கீதா உபதேசம் செய்து நிலைகுலையாது அர்ச்சுனனை போராட்டம் பற்றி வழிகாட்டினார். பாஞ்சசன்னியம் என அழைக்கப்பட்ட தனது கையில் உள்ள வலம்புரிச் சங்கை வாயில் வைத்து ஊதி போர் ஆரம்பிக்கப்படுவதை தெரிவித்தார். 

பிறப்புக்கும் இறப்புக்கும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. தீய சக்திகள் இதனால் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் அரண்மனைகளில் அரசர் விழாக்களில் இச்சங்கு முக்கிய இடம் வகிக்கப்படுகிறது. விழா ஆரம்பிக்கும் முன் போருக்கு தயாராகும்போது சங்கினை வாயில் வைத்து ஊதி ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால், கோரோசனை, கஸ்தூரி பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர். 


மகாலஷ்மிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லஷ்மி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து மந்திரத்தினால் புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தம் போல் பரிசுத்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அஸ்டோத்ரசத நூற்றியெட்டு எனவும்,அஸ்டோத்ரசகஸ்ர ஆயிரத்தெட்டு எனவும் சங்குகள் இடம் புரிச்சங்குகளில் அடுக்கி வைக்கப் பட்டு பூஜித்த பின் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குவால் அபிஷேகிக்கும் போது மகாபுண்ணியம் கிடைக்கப் பெறுகிறது. அதில் பிரதான சங்காக விளங்கும் வலம்புரி தீர்த்தம் பாவங்களைப்போக்கி தீவினை களைந்து நன்மை அளிக்கிறது.

அருமையானதும், பெருமையானதும் ஆக விளங்கும் சங்குகள் ஆழ்கடலில் இருந்து பெறப்படும். இதில் மிக அருமையான வலம்புரி கிடைப்பது அரிதாகும். தேவி பாகவத்தில் வலம்புரி சங்கு பற்றி கதையொன்று உண்டு. அக்காலத்தில் கிருஷ்ண பகவானுக்கு மகனாக அவர் தேகத்தில் சுதர்மன் அவதரித்தார்.  சுதர்மன் ராதையால் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக சங்கசூடனாக அசுரகுலத்தில் பிறந்து பின்பு சாபம் தீர பல தவங்கள் இயற்றி யாகங்கள் செய்து யாராலும் அழியாத வரம் பெற்றதோடு, மந்திரகவசமும் கிடைக்கப் பெற்றான். மூன்று யுகங்களிலும், கிருதயுகத்தில் வேதவதி,  திரேதாயுகத்தில் சீதை, துவாபர யுகத்தில் பாஞ்சாலியான திரெளபதியாகப் பிறந்து திரிகாயினி எனப் பெயர் பெற்று திகழ்ந்தாள் வேதவதி. இவள் லஸ்மியின் அம்சமாகையால் இலஸ்மியிடமே சேர்ந்தாள்.

லஸ்மி சரஸ்வதி கங்கை மூவருக்குள்ளும் ஏற்பட்ட கலகலப்பு பகையாக மாறி அவர்களே சாபமிட்டனர். அதன் விளைவே லஸ்மி அம்சமான துளசி தருமத்வஜனின் புத்திரி துளசியாக அவதரித்தாள். சாபங்கள் காரணமாக மானிடப்பிறவியாகி சங்கசூடனை மணம் புரிந்து பதிவிரதா தர்மத்தை கடைப்பிடித்து உலகம் போற்ற வாழ்ந்து வரும் போது சங்கசூடன் மூவுலகங்களையும் தன் வசப் படுத்தி ஆட்சி புரிய நினைத்தான்.
 
அசுரருக்கும் தேவருக்கும் எப்போதும் தீராதபகை. அது போரில் முடிவுறுவது வழக்கம். அசுரனாகப் பிறந்து மூவுலகங்களையும் ஆட்டி வைத்து தேவலோகத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர சங்கசூடன் போர் செய்தான். அசுரப் படைகளை ஏவி தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். அதனால் தேவர்கள் அனைவரும் திருமாலிடம் முறையிட "பிரம்மனிடம் பல வரங்கள் பெற்று அவன் அழியாது உள்ளான். அவனை சிவபெருமானால் மட்டுமே அழிக்க முடியும், அதிலும் மந்திரக்கவசமும் அவன் மனைவியின் பதிவிரதத் தன்மையும் இழக்கப்படாது சங்கசூடனுடன் இருக்கும் வரை  அவனுக்கு அழிவு கிடையாது. ஆகையால் அரிய சக்தியுள்ள சிவனிடம் தஞ்சம் அடையுங்கள்" என்று அவர் கூறியதும் தேவர்கள் சிவனிடம் முறையிட, தேவர்கள் புடைசூழ சென்று  சங்கரரும் சங்கசூடனுக்கு தூது அனுப்பி தேவர்களுக்கு உரிய தேவலோகத்தின் மீது ஆசைப்படாதே என்றும் எதுவும் அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டால் அழிவு நிச்சயம் என்று சமாதானமாகப் போகும் படி
கூறினார். அவன் தலையில் கனமும் மனதில் வஞ்சமும் சிவனாரையே எதிர்த்து பேசினான். தேவர்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்கவேண்டும், அசுரர் அழிந்து பட்டு போகவேண்டும் என நினைப்பது சரியா? என்றும் தேவ சபையை வென்று அரசாள்வேன் எனக்கூறி நெடுங்காலம் போரிட்டுக் கொண்டே இருந்தான்.

ஆக அவனை வெல்லுவது எளிதல்ல என நினைத்து அவனது மந்திரக்கவசத்தை தந்திரமாக யாசித்து பெற்றுக் கொண்டும் சங்கசூடனின் மனைவி துளசியிடம் விஸ்ணு சென்று அவள் கணவனாக மாறி அவள் பதிவிரதத்தன்மையை இழக்கச் செய்யவும் கடும் போர்புரிந்த சங்கசூடனை சிவபிரான் தன்சூலாயுதத்தால் பொடிப்பொடியாக்கினார். உயிர் இழந்த சங்கசூடன் வைகுந்தம் சென்று மோட்சம் அடைந்தான். சங்கசூடனின்  உடல் சாம்பலாகியது. எலும்புகள் பூவுலகில் சங்குகளாகி ஆழ்கடலில் பிறப்பெடுத்தன. அவை தேவார்ச்சனைக்கு பயன் பட்டன, சங்கு தீர்த்தம் பூசைக்கு உகந்ததாய், மகாவிஸ்னு லஷ்மி உறைகின்ற பொருளாய் செல்வம் செழிக்க ஐஸ்வர்யம் கிடைக்க பூஜிக்கும் அருள் பெற்றது. வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் தெய்வங்களுக்கு செய்யப் பட்டு பூஜித்ததும் சங்கு தீர்த்தம் எம்மை புனிதம் அடைய வைக்கிறது. இந்நீரை தீர்த்தமாக அருந்த நோய்கள் நீங்கி ஆனந்தம் பெறலாம். சங்கின் மகத்துவத்தை உணர்ந்து என்றும் பூஜித்து அதன்பலனை அடைவோம்.


நந்தினி விரதம்

 www.danvantarinadi.com

நந்தினி விரதம் (கோவத்ஸ பூஜை)

 ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் 
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் 
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

                                  (ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை) 



'கோமாதா' என்று தாய்க்குச் சமமாகப் போற்றப்படும் பசுக்களின் சிறப்பு வார்த்தைகளில் அடங்குவதில்லை. சாத்வீகத் தன்மைக்கு உதாரணமாகப் போற்றப்படும் பசு, மனிதர் பெறவேண்டிய செல்வங்களுள் முக்கியமான ஒன்று. அக்காலத்தில், அதிகப் பசுக்களை வைத்திருப்பவர், பெரும் செல்வந்தராகக் கருதப்பட்டார். 'மாடு' என்றாலே செல்வம் என்றும் பொருள். வேள்விகள், ஹோமங்கள் நடக்கும் முன்பாக, கோபூஜை செய்து துவங்குவது நம் சம்பிரதாயம். திருக்கோவில்களில், விடியலில், திருவனந்தல் தரிசனத்தின் போது, இறைவனின் திருமுன், பசுவையும் கன்றையும் அழைத்து வந்து தரிசனம் செய்வித்த பின்பே, சேவார்த்திகள் இறைவனை  தரிசிக்கின்றனர். இறைவனே, கோமாதாவின் திருமுகத்தில் விழிப்பதாக ஐதீகம்.
கன்றோடு சேர்ந்த பசு, சுபசகுனங்களில் ஒன்று. கோசாலை, ஆலயத்திற்கு சமமான பெருமை வாய்ந்தது. கோசாலையில் செய்யப்படும் யாகங்கள், ஹோமங்கள், ஜபங்கள் ஆகியவற்றுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. பசுவை, யார் ஆராதிக்கிறார்களோ, அவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளையும் பெறுகிறார்கள். பசுவிற்கு 'அக்னிஹோத்ரி' என்றும் பெயர் உண்டு. அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், அக்னியை எப்படி, சிறிதும் சோர்வின்றி ரட்சிக்க வேண்டுமோ, அப்படியே, பசுவையும் ரட்சிக்க வேண்டும்.
பசுவிற்கு ஒரு பிடி அகத்திக்கீரை தருபவன், எண்ணற்ற யாகங்களைச் செய்த புண்ணியப் பலனை அடைகிறான் என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பசுவுக்கு தினமும் ஒரு பிடி புல் தருபவர், மரணத்திற்குப் பின் கட்டாயம் சொர்க்க வாசம் அடைகிறார். தாய்ப்பால் கிடைக்க இயலாத குழந்தைகளுக்கு, பசுவின் பாலே தரப்படுகின்றது. பஞ்சகவ்யம் எனப் போற்றப்படும், பசுஞ்சாணம், பால், தயிர், நெய், கோமியம் ஆகியவை தெளித்தே, யாகசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. பசுவின் சாணமும், கோமியமும், சிறந்த கிருமி நாசினிகள். கிருச்ச விரதம் முதலான விரதங்கள் எடுக்கும் முன்பாக, பஞ்சகவ்யம் கட்டாயம் அருந்த வேண்டும்.
பசுஞ்சாணத்தில் ஸ்ரீலக்ஷ்மியும், கோமியத்தில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, அக்காலத்தில், விடியலில், சாணம் கரைத்த நீரைத் தெளித்து வீடு வாசலை மெழுகித் தூய்மை செய்தார்கள். சாணம் கிருமிநாசினியாதலால், பூச்சிகள் வீட்டினுள் சேராமல் தடுக்கும். பசுஞ்சாணத்தால் தட்டிய வரட்டிகளையே, ஹோமங்களில் உபயோகிப்பது வழக்கம். மிக நுண்ணிய மந்திர ஒலிகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது பசுவரட்டி.

பசுவின் உடலில், எண்ணற்ற தேவதைகள் வாசம் செய்கின்றனர். பசுவின், முகத்தின் மத்தியில் சிவனாரும், வல, இடக் கண்களில் முறையே சூரிய சந்திரரும், வலப்புற நாசியில், முருகனும், இடப்புற நாசியில், கணபதியும், காதுகளில் அஸ்வினி தேவர்களும், கழுத்தின் மேல்புறம் ராகுவும், கீழ்ப்புறம் கேதுவும், கொண்டைப்பகுதியில் பிரம்மாவும், முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதியும் விஷ்ணுவும், முன்வலக்காலில் பைரவரும், முன் இடக்காலில், ஹனுமனும், பின்கால்களில் முறையே, பராசரர், விஸ்வாமித்திரரும், பின்கால்களின் மேற்புறம், நாரதரும் வசிஷ்டரும், பிருஷ்ட பாகத்தின் கீழ்ப்புறம் கங்கையும், மேற்புறம் ஸ்ரீலக்ஷ்மியும், முதுகுப்புறம், குபேரர், வருணன், அக்னி, பரத்வாஜர் ஆகியோரும், வயிற்றுப் பகுதியில் சனகாதியரும் பூமாதேவியும், வாலின் மேல், கீழ்ப்பகுதியில் முறையே, நாகராஜரும், ஸ்ரீமானாரும், வல, இடக் கொம்புகளில், வீமன், இந்திரனும், நான்கு குளம்புகளிலும், விந்திய மலை, இமயமலை, மந்திர மலை, த்ரோணமலை முதலியவையும், பால்மடியில், அமுதக்கடலும் வாசம் செய்கின்றன.
ஆகவே, பசுவை வணங்கினால், எல்லாத் தேவர்களையும் தொழுத பலன் கிடைக்கும்.  தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, நந்தா, சுரபி(காமதேனு), பத்திரை, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன். இவற்றின் சந்ததியரே, இப்பூவுலகில் நாம் காணும் பசுக்கள் என்று புராணம் கூறுகிறது. இவை, இன்றளவும் கோலோகத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். தானங்களில் கோதானம் மிக முக்கிய இடம் பெறுகிறது. மகாபாபிகளும், பஞ்சகவியம் அருந்தி ஒரு வேளை உபவாசமிருந்தால், அவர் செய்த பாவம் நசியும் என்று அக்னி புராணம் கூறுகிறது.
பசுவின் கால் தூசியில், மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். மாடுகள், மேய்ச்சல் முடிந்து திரும்பும் சமயம்'கோதூளிகா வேளை' என்று போற்றப்படுகிறது. அந்தச் சமயமே, அனைத்து இல்லங்களுக்கும் தேவி எழுந்தருள்கிறாள். ஆகவே, அந்த நேரம் தவறாது விளக்கேற்ற வேண்டும். மாலை நேரத்தில் செய்ய வேண்டிய பூஜைகளை கோதூளிகா வேளையில் துவங்குவது சிறந்தது.

 

இத்தகைய மகிமை பொருந்திய பசுக்களை போற்றும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, ஐப்பசி கிருஷ்ணபட்ச துவாதசியில் கடைப்பிடிக்கப்படும், நந்தினி விரதம் எனப்படும் கோவத்ஸ பூஜை. இம்மாதம், 11/11/2012ல் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
இந்த விரதம் தோன்றக் காரணமான புராணக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது, விஷ்ணு புராணத்தில், பிருதுசக்கரவர்த்தியின் சரிதமாகக் கூறப்படுகின்றது.
வானத்தில் வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் துருவ சக்கரவர்த்தியின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. தான் செய்த அருந்த்வத்தின் பயனால், ஸ்ரீமந் நாராயணினின் அருளைப் பெற்று, உத்தமமான பதவியை அடைந்த துருவன், சம்பு என்ற பெயருடைய மங்கையை திருமணம் செய்து கொண்டான். அவனுடைய சந்ததியில், அங்கன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு வெகு காலமாக வாரிசு இல்லை. அவன் பட்டமகிஷி, மிருத்துவின் புதல்வியாகிய, சுருதை என்பவள். அங்கன், ரிஷிகளின் ஆலோசனைப்படி, புத்ர காமேஷ்டி யாகம் செய்தான். அதன் பலனாக, அவனுக்கு வேனன் என்ற ஒரு பிள்ளை பிறந்தான். அவன், தன் பாட்டனாராகிய மிருத்துவின் குண விசேஷத்தைக் கொண்டிருந்தான். கொடுங்கோலனாகவும், யாகங்கள், ஓமங்கள் முதலியவற்றைச் செய்வதைத் தடுப்பவனாகவும் இருந்தான். தானங்கள் கொடுப்பதையும் தடுத்து, 'தானே, யக்ஞங்களாலும், பிறவற்றாலும் தொழப்படவேண்டியவன்' என்று  நாடு முழுவதும் பறையறிவித்தான்.
ரிஷிகளும், முனிவர்களும், இவ்வாறெல்லாம் செய்வது தவறு, என்று எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. அவனது செய்கைகளால், கோபமே வராத முனிவர்களுக்கும் கோபம் வந்தது. அவர்கள், தங்கள் கையிலுள்ள, தர்ப்பைப் புல்லால் அவனை அடித்தார்கள். அவன் எரிந்து, இறந்து கீழே விழுந்தான். உடனே, எங்கும் தூசியும் தும்புமாக நாற்திசைகளிலும் பறந்து வியாபித்தது. இதைக் கண்ட ரிஷிகள், அங்கிருந்த மக்களிடம் வினவ, அவர்கள், "ரிஷிகளாகிய நீங்கள், உங்கள் சுபாவத்தைக் கைவிட்டதாலேயே இவ்வாறு நேர்ந்தது" என்று கூறினார்கள்.
இந்த பெரும் சங்கடத்தை நீக்க, ரிஷிகள் எல்லோரும் கலந்து ஆலோசித்து, உடனே ஒரு புத்திரனை வேனனுக்கு உண்டாகுமாறு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்காக, எரிந்த வேனனுடைய உடலின் தொடையைக் கடைந்தனர். அப்போது, அவன் பாவ குணங்களெல்லாம் உருவெடுத்து, கறுப்பாக, விகாரமாக‌ ஒரு உருவம் தோன்றியது. அவனே 'பகுகா' என்ற பெயருடைய வேனனின் புதல்வன். அவனை, ரிஷிகள், 'நீஷீத' (அமர்) என்று சொன்னார்கள். அதனால், 'நிஷாதன்' என்பதும் அவன் பெயாராயிற்று. அவன் குலம் நாட்டுக்கு வெளியே, மலை, வனாந்தரங்களில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். அவன் சந்ததியினரே, நிஷாத இனத்தவரான, விந்திய மலை வேடர்கள்.
அதன் பிறகு, ஒரு நற்புத்திரனை உண்டாக்கும் விதமாக, வேனனுடைய, வலது கையைக் கடைந்தனர் ரிஷிகள். அதிலிருந்து, தேஜோமயமாக, அக்னியைப் போன்று ஜொலிக்கும் ரூபத்துடன், பிருது மாமன்னன் தோன்றினான். அவன் தோன்றிய உடனேயே, வானத்திலிருந்து, அசகவம் என்ற வில்லும் திவ்யமான பாணங்களும் அவன் கையில் சேர்ந்தன. எல்லா புனித நதிகளும், சமுத்திரங்களும், தத்தம் புனித நீரினால், பிருதுமன்னனை அபிஷேகித்து, திவ்ய ரத்தினங்களைக் கொடுத்து வணங்கி நின்றன. பிருது மன்னனின், வலக்கரத்தில் சக்ர ரேகை இருந்ததால், அவர், ஸ்ரீமந் நாராயணனின் அம்சம் என்று அனைவரும் மகிழ்ந்தனர்.
அப்போது வேனனுடைய இடது கரத்திலிருந்து, தீப்பிழம்பாக, ஸ்ரீலக்ஷ்மியின் அம்சத்துடன், ஒரு பெண் தோன்றினாள்.  அவளுக்கு 'அர்ச்சி' என்று பெயரிடப்பட்டது.
பிருது மன்னன், நாட்டில் நல்லாட்சி நடத்தினாலும் அவன் தகப்பனின் செயல்களின் விளைவாக, கடும் வறட்சி ஏற்பட்டது. இதற்கெல்லாம், காரணம், பூமியே என்று வெகுண்டெழுந்த பிருது மன்னன், பூமியின் மீது அம்பை எய்யத் துணிந்தபோது, பூமாதேவி, ஒரு பசுவின் உருக்கொண்டு, தப்பியோடினாள்.
பிருது மன்னன், பசுவைத் துரத்தி, அதைக் கொல்லத் துணிந்தபோது, பசுவின்உருவில் இருந்த பூமாதேவி, 'மன்னனே, என்னைக் கொல்வதால், எல்லா உயிர்களும் அழியுமே!!. எல்லா செல்வங்களும், என்னுள் அமிழ்ந்து, மக்கி விட்டன.
அவற்றை, நான் பால் ரூபமாக சொரிகிறேன். ஒரு கன்றை உருவாக்கிக் கொடுப்பாயாக, அப்போது நான் பாலைப் பொழிவேன். நான் கொடுக்கும் செல்வங்களனைத்தும், பூமியில் தங்கு தடையில்லாமல், பரவும் பொருட்டு, பூமியை சமமாக நிரவுவாயாக' என்றாள். அக்காலத்தில், மலைகள் அனைத்தும், மிக நெருக்கமாக, பரவியிருந்தன. உடனே, பிருது மன்னன், தன் அம்பால் நிலத்தைக் கீறி, நிலத்தைச் சமன் செய்தான். அவனது இந்தச் செயலாலேயே, பயிர்த்தொழிலும்,வாணிபமும் சிறந்து, குடியிருப்புகளும் தோன்றின.
பிருது மன்னன், சுவயாம்புவ மனுவைக் கன்றாக்கி, தன் கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பால் ரூபமாகக் கறந்து கொண்டான். மகரிஷிகள், பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாக்கி, வேதமயமான, ஞானத்தைப் பாலாகக் கறந்துகொண்டனர்.
தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி, ஸ்வர்ண பாத்திரத்தில், அமிர்தத்தைப் பெற்றனர். அசுரர்கள், பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புப் பாத்திரத்தில், மதுவைக் கறந்தனர். இப்படியாக, அனைவரும் அவரவர்க்கு வேண்டியவற்றைக் கறந்து கொண்டு அதற்கேற்ற பலனை அடைந்து அனுபவிக்கலாயினர்.
பெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்





2771. அகல்விழி2810. அருள்மொழித்தேவி2849. அழகுதெய்வாணை
2772. அகநகை2811. அருளரசி2850. அழகுநங்கை
2773. அகமுடைநங்கை2812. அருளம்மை2851. அழகியபெரியவள்
2774. அகவழகி2813. அருளம்மா2852. அறம்
2775. அங்கயற்கண்ணி2814. அருள்2853. அறம் வளர்த்தாள்
2776. அஞ்சம்மாள்2815. அருள்விழி2854. அறம் வளர்த்த நாயகி
2777. அஞ்சலை2816. அருள்மங்கை2855. அறச்செல்வி
2778. அஞ்சளையம்மா2817. அருள்மணி2856. அறப்பாவை
2779. அஞ்சொலி2818. அருள்நெறி2857. அறவல்லி
2780. அடைக்கலம்2819. அருள்வடிவு2858. அறிவுக்கரசி
2781. அணிசடை2820. அருட்கொடி2859. அறிவுக்கனி
2782. அணிமாலை2821. அருளழகி2860. அறிவுச்சுடர்
2783. அம்மங்கை2822. அருளாழி2861. அறிவுமணி
2784. அம்மணி2823. அருளி2862. அறிவுநிதி
2785. அம்மாக்கண்ணு2824. அருட்செல்வி2863. அறிவுமதி
2786. அம்மாக்குட்டி2825. அருவி2864. அறிவுடைநங்கை
2787. அமிழ்தம்2826. அருமைச்செல்வி2865. அறிவழகி
2788. அமிழ்தமொழி2827. அருமையரசி2866. அறிவுடையரசி
2789. அமிழ்தரசு2828. அருமைநாயகி2867. அறிவுக்கொடி
2790. அமிழ்தவல்லி2829. அல்லி2868. அறிவொளி
2791. அமுதம்2830. அல்லியரசி2869. அன்பு
2792. அமுதா2831. அல்லிக்கொடி2870. அன்புப்பழம்
2793. அமுதவாணி2832. அல்லியங்கோதை2871. அன்புமணி
2794. அமுதவல்லி2833. அல்லிவிழி2872. அன்புச்செல்வி
2795. அமுதசுரபி2834. அலர்மேல்மங்கை2873. அன்பரசி
2796. அமுதரசி2835. அலர்மேல்வல்லி2874. அன்பழகி
2797. அமுது2836. அலர்மேலு2875. அன்புக்கொடி
2798. அமுதினி2837. அலைவாய்மொழி2876. அன்புமொழி
2799. அமைதி2838. அவ்வை2877. அன்னம்
2800. அமைதோளி2839. அழகி2878. அன்னம்மா
2801. அரங்கநாயகி2840. அழகரசி2879. அன்னக்கிளி
2802. அரசி2841. அழகம்மை2880. அன்னக்கொடி
2803. அரசக்கனி2842. அழகம்மாள்2881. அன்னத்தாய்
2804. அரசநாயகி2843. அழகுடைச்செல்வி2882. அன்னப்பழம்
2805. அரசர்க்கரசி2844. அழகுடைநங்கை2883. அன்னமணி
2806. அரியநாயகி2845. அழகுமணி
2807. அருஞ்செல்வி2846. அழகுநிலா
2808. அருண்மொழி2847. அழகுமுத்து
2809. அருள்மொழி2848. அழகுமுத்துமணி

ஸ்ரீமத் பகவத்கீதை



கீதை , பெரிய தத்துவ மேதைகளும் அறிஞர்களும் மட்டுமே படிக்கவேண்டும் என்ற தவறான கருத்து நம்மிடம் பரவியுள்ளது.சடங்குகளில் காட்டும் ஆர்வத்தை நமது மதக் கோட்பாடுகளில் உள்ள உண்மைகளை அறிந்துகொள்ளக் காட்டத் தவறிவிட்டோம்.
கீதையில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, என்ன செய்கிறோம் என்பதை சீர்தூக்கிப் பார்த்துத் தெளிவு கொள்ளவேண்டும் என்பதே முக்கியமாகக் கூறப்பட்டுள்ளது.பாவம் செய்தவனும் தனது அறிவில் தெளிவு பெற்று, பாவங்களில் இருந்து மீண்டு வரலாம் என்கிறது..... சந்நியாசம் என்பது பொறுப்புகளில் இருந்து தப்பித்துச் செல்வது அல்ல. பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது என்னும் புரட்சிகரமான கருத்தைக் கூறுகிறது.



கீதையைப் படிப்பவர்கள், அது ஒரு மத நூல் மட்டுமல்ல, சிறந்த மனோதத்துவ நூல் என்றும் புரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கையைச் சம நிலையுடன் நோக்கவும், குழப்பம் இல்லாமல் மனம் தடுமாறாமல், மனத் தெளிவுடன் வாழவும் கீதை அருமையான வழிகளைச் சொல்லுகிறது.அந்தக் கருத்துக்களை நான் எளிமைப் படுத்தி இங்கே கூற விரும்புகிறேன். அனைவரும் இதைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்..

கீதோபதேசத்தின் காரணம்.

வேதங்கள் அநாதியானவை அவற்றின் காலம் இன்னதென்று இதுவரையில் யாருமே வரயறுத்துச் சொன்னதில்லை.

வேதங்களைச் செய்தவர் யார்?

யாருக்குமே தெரியாது..........ஒருவேளை ரிஷிகள் வேதத்தை இயற்றியிருப்பார்களோ...அப்படியானால் அந்த ரிஷிகளின் காலம் என்ன?

என்ன ஆதாரம் நம்மிடம் இருக்கிறது? ரிஷிகள் நமக்கு இந்த வேதங்களைக் கூறியபோதிலும், அவர்கள் தானாக இவைகளைப் படைக்கவில்லை. அவர்கள் நிஷ்டையில் இருந்தபோது, இந்த வேதங்கள் அவர்களது காதில் தானாக ஒலித்தவை.ரிஷிகளின் தவத்தால் ஏற்பட்ட ஞானம், மனவலிமை அவர்களுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்தது.

இறைவனை நாதப் பிரும்மம் என்று கூறுகிறோம். நாத வடிவங்களால் ரிஷிகளுக்கு இந்த வேதங்கள் அருளப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே வேதங்கள் நிலையான என்றும் அழியாத உண்மைமையின் வடிவம் ஆகும்.

வேதங்களைச் சுலபமாக அனைவராலும் புரிந்துகொள்ள இயலாது.வேதங்களின் விளக்கமாக உப-நிஷதங்கள் தோன்றின.இந்த உப நிஷதங்கள், குரு-சீடன் பேசிக்கொள்வதுபோல அமைந்தவைலைந்த உபநிஷதங்கள் அருத்துக்கள் அனைத்தும் உள்ளடக்கி கீதை நமக்குக் கிடைத்துள்ளது.பகவத் கீதையின் முழுமையை, உண்மையை, அது கூறும் கருத்தை எவனொருவன் புரிந்து கொள்கிறானோ, அவந்தான் இந்து மதத்தின் மூலக் கருத்தைப் புரிந்துகொண்டவனாவான்.......வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டவனாவான்.

மற்ற மதங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு இந்து மதத்துக்கு உள்ளது.பிற மதங்கள் வாழ்க்கை நெறிகளைப் பற்ரிப் பேசுகின்றன.மனித வாழ்க்கை மேம்பாடு அடையும் வழிமுறைகளைக் கூறுகின்றன.

ஆனால் இந்துமதம் பிரபஞ்ச ரகசியத்தை விளக்க முயற்சிக்கிறது.படைப்பின் காரண காரியத்தைவிளக்கி அதன்வழியே வாழ்க்கை நெறியை வகுத்துக் காட்டுகிறது.மிகவும் சிக்கலான ஒன்றை, புதிர்போலத் தோன்றும் ஒன்றை, எளிமையாக்கி உணர்த்த இந்து சாஸ்திரங்கள் முயற்சிக்கின்றன. இந்த முயற்சிகளின் கருத்துப் பெட்டகமே கீதை.

வேதங்கள், ரிஷிகளுக்கு அருளப்பட்டன என்று பார்த்தோம். அவை அமைதி நிரம்பிய வனங்களில், தனிமையின் ரிஷிகள் இருந்தபோது அறுளப்பட்டவை.ஆனால் கீதையின் உபதேசத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட களம் முற்றிலும் மாறுபட்டது.போர்க்களத்தில்தான் கீதை உபதேசிக்கப்பட்டது...இருபுறங்களிலும் போர்ப்படைகள் அணிவகுத்து நிற்க போர் முரசு ஒலித்து போர்ப் பிரகடணம் செய்யப்போகும் நிலையில் கீதோபதேசம் ஆரம்பம் ஆகிறது.

கீதையில் உபதேசிக்கப்படும் கருத்துக்களைப் போலவே, கீதை உபதேசிக்கப்பட்ட இடமும் காலமும் முக்கியமானவை.

கீதையை உபதேசிப்பவர் யார்?.................... கிருஷ்ணபரமாத்மா.

உபதேசத்தைக் கேட்டுக்கொள்பவன்......போர்க்கலையில் வல்லவனான அர்ச்சுனன்.

போர் செய்வதா வேண்டாமா....என்று தடுமாற்ரம் அடைந்து கையில் பிடித்த காண்டீபத்தை நழுவவிடும் நிலையில் இருந்த அர்ச்சுனனின் மன மயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்த பரமாத்மா கீதையை உபதேசிக்கிறார்...அமைதியான சூழ்நிலையிலே உருவான வேதங்களின் கருத்துக்களுக்கு போர்க்களத்திலே விளக்கம் கிடைக்கிறது.இது முரன்பாடாகத் தோன்றினாலும் , இந்த முரன்பாடே கீதையின் தனிச் சிறப்பும் அழகும் ஆகும்.

அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட குழப்பம் அவனுக்கு மட்டும் ஏற்படும் குழப்பம் அல்ல. வாழ்க்கை என்னும் போர்க்களத்திலே அனைவருக்கும் ஏற்படக்கூடிய குழப்பம் என்றுதான் கொள்ளவேண்டும்.அர்சுனனுக்கு உபதேசம் செய்து அவனுடைய குழப்பத்தை மட்டும் கிருஷ்னபிரான்

தீர்த்து வைக்கவில்லை.அதன்மூலம் மனித இனத்துக்கு ஏற்படும் அத்துனைக் குழப்பங்களுக்கும் வழிகாட்டி தெளிய வைக்கிறார்.

எது நல்லது, எது கெட்டது என்று புரியாமல் தவிக்கும் மானிட இனத்தின் பிரதிநிதியாகக் காட்சியளிக்கிறான் அர்ச்சுனன்.அவனது சந்தேகத்தைத் தீர்த்துவைத்து, தர்மத்தின் பக்கம் நின்று மனிதைனம் செயல்படவேண்டிய வழிமுஐகளை அற்புதமாக கீதையின் மூலம் விளக்குகிறார் கிருஷ்னர்.

தர்மத்தின் தன்மை, வாழ்க்கையின் பொருள், மரணத்தின் அவசியம் ஆகியவற்றை தள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதே கீதை.எனவேதான் அதர்மம் தலைதூக்கி ஆர்ப்பரிக்க, தர்மம் அதை வெல்லும் வகையில் எதிர் நிற்க...,மரணஓசை எங்கும் ஓங்காரக் கூச்சலிடும் போர்க்களம் கீதோபதேசத்துக்கு நிலைக்களனகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மனித வாழ்க்கையே ஒரு முடிவில்லாத போராட்டம். உயிர்கள் எதைப் பெற விரும்பினாலும் அதற்காக அவை போராடித்தான் ஆகவேண்டும்.ஒரு உயிரை எதிர்த்து இன்னொரு உயிர் போராடித்தான் ஆகவேண்டும் என்பது இயற்கையின் நியதி.போராட்டத்தில் தோற்றுப் போகும் இனங்கள் காலப் போக்கில் அழிந்துவிடுகின்றன.அதுபோலவே வாழ்க்கைப் போராட்டத்தில் போராடத் தெரியாத மனிதனும் தனது

வாழ்க்கையில் தோல்வி அடைகிறான்.போராட்டம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை.

போராட்டம் எதற்காக நடைபெறவேண்டும்?

ஏன் நடைபெறவேண்டும்?

எப்படி நடைபெறவேண்டும்?

இவை அனைத்தையும் கீதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவு படுத்துகிறது..

போர்க்களத்தில் சங்கநாதம் முழங்குகிறது. போர் முரசு ஒலிக்கிறது..ஆனால் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டவேண்டிய அர்ச்சுனன் குழப்பமுடன் நிற்கிறான். ஏன்?

அவனுக்கு எதிரில், ஞானபண்டிதரும், மகா புருஷரும், அவனுடைய பாட்டனாரும் ஆன பீஷ்மர் நிற்கிறார்.அவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணர் நிற்கிறார்.அவனுடைய பங்காளிகள் நிற்கிறார்கள்.அவன் மதித்துப் போற்றும், மாவீரன் கர்னன் போன்ற வீரர்கள் நிற்கிறார்கள்.இவர்கள் அனைவரையும் கொன்று குவிக்கவேண்டியது அவசியம்தானா என்று அர்ச்சுனன் நினைக்கிறான்..அவர்கள்மேல் இரக்கப்படுகிறான்.குருவையும், சகோதரர்களையும் போரில் கொன்று தான் வெற்றி அடைவதால் கிடைக்கப் போகும் லாபம் என்ன என்று எண்ணிப்பார்க்கிறான்.அதன் முடிவாகப் போரே வேண்டாம் என்று வில்லை நழுவவிட்டு களத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் அவனுக்குள் வலுக்கிறது.பெரும் பாவச் செயலை தான் செய்ய இருந்ததை நினைத்து மனம் பதைக்கிறான்..அவனது கரங்கள் நடுங்கிச் சோர்வடைகின்றன.நாக்கு உலர்ந்துபோகிறது....எதிரிகளைக் கண்டதுமே வில்லை இறுகப் பற்றும் அவனது கரங்கள் முதல் முறையாக வில்லை நழுவ விடுகிறது.

இவர்களைக் கொன்று தான் வாழ்வதால் என்ன பயன் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறான்.

"இவர்களைக் கொன்றுவிடுவதால் மூன்று உலகங்களில் முடி சூட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தாலும் , என் எதிரே நிற்கும் எனது உறவினர்களையும் குருமார்களையும் கொன்று குவிக்க நான் சம்மதிக்கமாட்டேன்.இதனால் பாவத்தைத் தவிர எனக்கு என்ன கிடைக்கப் போகிறது" என்று சரமாரியாக எழுந்த வினாக்களை கிருஷ்ணபரமாத்தா புன்முறுவலுடன் எதிர் கொள்கிறார்.

"இயற்கையே ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்பதை நீ அறியவேண்டும் அர்ச்சுனா. அப்படிக் கொலைக்களமான உலகில் வந்தபின்பு, கொலையைச் செய்வதற்கு தயக்கம் காட்டக் கூடாது.அது அஹிம்சை அல்ல.அறநெறியும் அல்ல.அதர்மத்தை அழிக்க தர்மம் நின்றுதான் ஆகவேண்டும்" என்று அர்ச்சுன னுக்கு தர்மம் என்றால் என்ன என்று தெளிவாக்குகிறார்.,

அர்ச்சுனனைப் போர் புரியத் தூண்டும் அவர் அவனை உண்மையில் ஒரு கொலைகாரனாகவா ஆக்குகிறார்? நிச்சயமாக இல்லை.

கொலைக்களமாகக் காட்சிதரும் உலகத்தில், தனக்கென்று உண்டான கடமைகளைச் செய்து மட்டுமே தர்மத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே பரமாத்மா தெளிவு படுத்துகிறார்.
 
  பக்தி யோகம்

மனத் தளர்ச்சி அடைந்து தயங்கி நின்ற அர்ச்சுனனைப் பார்த்த கிருஷ்ணபிரான், " வீரர்களுக்குப் பொருந்தாதபடி வீரனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் சோர்வு உனக்கு எப்படி உண்டானது?.போர் உடை தரித்து ஆயுதபாணியாக நிற்கும் வீரனுக்கு இப்படிக் கலக்கம் வரலாமா?.சந்தர்ப்பங்களை உருவாக்கி அதற்கு அதிபதியாக இருக்கவேண்டிய வீரன் இப்படிக் கோழையாக நிற்கலாமா?இழிவான உள்ளச் சோர்வைக் கைவிட்டு துடித்து எழு." என்றார்.

அதற்கு அர்ச்சுனன், " எனது பாட்டனாரான பீஷ்மரை எதிர்த்து நான் எப்படிப் போரிடுவது?எனது குருவான துரோணருக்கு எதிராக எனது காண்டீபத்தை நான் வளைக்க முடியுமா?" என்றெல்லாம் புலம்பினான்.

"அர்ச்சுனா....இங்குதான் நீ மாபெரும் தவறு செய்கிறாய்.!எதிரே நிற்பவர் யார் என்று பார்க்காதே.. வீரன் தனது கடமையைச் செய்யும்போது

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக்கூடது.அதர்மத்துக்கு துணையாக அவர்கள் கெளரவர்கள் பக்கம் நிற்கும்போதே, அவர்களை கொல்ல உனக்கு சகல உரிமையும் கிடைத்துவிடுகிறது.நீ குறிப்பிடும் பீஷ்மரும் துரோணரும் வீரர்கள்தான். அங்கே பார் அவர்கள் வீரனுக்குரிய கடமையினைச் செய்ய தயாராக உன் எதிரே நிற்கிறார்கள்.அதனால் நீ உனது கடமையைச் செய்" என்றார் கிருஷ்ணபிரான்.

அர்ச்சுனனும், கிருஷ்ணனை வணங்கி, " பரமாத்மாவே...நான் உன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன்.

எனது கடமைகள் என்ன என்று எனக்கு எடுத்துரைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறான்.

அபோதுதான் கிருஷ்ண பரமாத்மா அவனுக்கு கீதையை உபதேசம் செய்கிறார்.

"யாருக்காக நீ துயரப்படத் தேவையில்லையோ, அவர்களுக்காக துயரம் அடைகிறாய்.ஞானிகள் வாழ்பவர்களுக்காகவோ இறந்தவர்களுக்காவோ துயரமே அடைவதில்லை.உன்னால் பீஷ்மர், துரோணர் என்ற இரு மனித வடிவங்களைத்தான் பார்க்க முடிகிறது.அந்த வடிவங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆத்மாக்கள் ஏறியுள்ள வாகனங்கள்தான் என்பதை அறிவாயா??

.நான்,நீ, இந்த அரசர்கள் அனைவருமே எவருமே முன்பு இல்லாமல் இருந்ததில்லை. இந்த உடல்கள் அழிந்துவிடுகின்ற காரணத்தால், நாம் இல்லாமல் போனதும் இல்லை.ஆன்மா ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு உடலை தனது வாகனமாகக் கொள்கிறது.அந்த உடலின் மூலமாக சில அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறது.ஆத்மா குடிகொள்ளும் உடலுக்குத்தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை.

இந்த சுலோகத்தில் பகவான் ஆத்மாவின் அழியாத் தன்மையைக் கூறுகிறார்.

ஹிந்து மதம் மறு பிறவியில் நம்பிக்கை கொண்டது.ஆத்மா அழிவற்றது என்னும்போதுதான் மறுபிறப்பு சாத்தியம் ஆகிறது.

சில சமயங்களில் ஐந்து வயதுக் குழந்தை ராக சுத்தமாகப் பாடுவதைப் பார்க்கலாம்.10 வயதுச் சிறுமி எவ்வளவு கஷ்டமான கணக்கிற்கும் நொடியில் விடை கூறுவதைக் காண்கிறோம்.5 வயதுக் குழந்தை ராகப் பயிற்சி பெற்று இம்மியளவும் பிசகாமல் பாடுவது இயலாத காரியம்..

10 வயதுக் குழந்தை கணிதத்தைப் படித்து மேதாவியாக விளங்குவதும் இயலாத காரியம்தான். ஆனால் இவற்றுக்கெல்லாம் விளக்கம் என்ன???ஆத்மாவின் அழியாத்தன்மை, மறுபிறப்பு இவற்றைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?

ஐம்புலனும் உடலோடு சம்பத்தப்பட்டதினால், குளிர்,வெப்பம், இன்பம் துன்பம் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றன.அது ஆத்மாவுக்கு உரியது அல்ல.அதனால்தான் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொண்ட ஞானிகள் எதனாலுமே கலக்கம் அடைவதில்லை.

இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக யார் கருத்தில் கொள்கிறார்களோ அவர்களே ஞானியாகியாகிறார்கள்.இன்ப துன்பங்களினால்

பாதிக்கப்படாமல் வாழ்வது என்றால், ஒருவன் மரக்கட்டைபோல் இருக்கவேண்டும் என்று பொருள் அல்ல.

"எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் வாழ்வது வேறு.

உணர்ச்சிகளின் பாதிப்புக்கு உள்ளாகாமல் வாழ்வது என்பது வேறு" இந்த உண்மையை உணர்பவன் ஆத்ம சொரூபத்தில் கலந்துவிடுகிறான்.

உலகமெல்லாம் பரவிய பொருள் அழிவற்றது. அழியாப் பொருளை அழிக்க யாராலும் முடியாது.

அழிவற்ற மெய்தான் உலகெங்கும் வியாபித்து நிற்கிறது

உதாரணத்துக்கு களிமண்ணை எடுத்துக்கொள்வோம்.அதைப் பயன்படுத்திப் பானை செய்கிறோம். குடம் செய்கிறோம்.

கூஜா செய்கிறோம்.தட்டு, பொம்மை என்று விதம் விதமாகச் செய்கிறோம்.செய்யப்பட்ட பொருள் ஒவ்வொன்றையும் தோற்றத்தைக் கொண்டு விதம் விதமான பெயரிட்டு அழைக்கிறோம்.இருந்தாலும் அவை அனைத்துக்கும் ஆதாரமான பொருள் களிமண்தானே?

மண்ணில் இருந்து அவை உருப்பெறுகிறது. அழியும்பேந்து மண்ணுடன் கலந்துவிடுகிறது.

இதில் மண் மட்டுமே மெய். மற்றதெல்லாம் பொய்.

ஆகவே இந்தப் பிரபஞ்சத் தோற்றத்துக்கும் ஆதாரமாக அழியாத மெய்ப்பொருள் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது.

இதையெல்லாம் அர்ச்சுனனுக்குக் கூறிய கிருஷ்ணபிரான், உடல்களை அழிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மத்தை நிலைநாட்டு

என்கிறார். அர்ச்சுனன் பீஷ்மரது உடலை அது பீஷ்மர் என்று எண்ணுவது தவறல்லவா? அவன் பீஷ்மரின் உடலை மட்டும்தான் அழிக்கப் போகிறான். பிஷ்மரை அல்ல!! ஏனென்றால் ஆத்மா அழிவது இல்லை

ஒரு செயலை எப்படிச் செய்யவேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

துன்பம், லாபம், நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளை ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு அந்தச் செயலை செய்யவேண்டும்.அதனால் நீ எந்தவித இழப்பையும் அடையமாட்டாய்.

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிப்பது அறிவுப் பூர்வமானது.

லாபத்தையும் நட்டத்தையும் ஒன்றாகக் கொள்வது மனது பூர்வமானது.

வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகப் பார்ப்பது தேகப் பூர்வமானது.

இந்த மூன்றில் இரண்டு குணங்களை பெற்றாலே அவன் கர்மயோகி ஆகிவிடுகிறான்.

கடலில் செல்லும் ஒருவன் அலைகளே இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லவா?

ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்டது கடலின் குணம்.அந்தக் குணத்தை ஏற்றுக்கொள்பவன்தான் கடலில் பயணம் செய்யமுடியும்.

அதுபோலதான், வாழ்க்கையிலும். இன்பம் துன்பம் வெற்றி தோல்வி, என்னும் அலைகள் இல்லாமல் வாழ்வென்பதே கிடையாது.

அலைகளுக்குப் பயந்துவிடக் கூடாது. அதே சமயம் அலைகளால் அடித்துச் சென்றுவிடாமல் துணிச்சலாக வாழவும் வேண்டும்.

இத்தகைய வாழ்க்கையை ஒருவன் பெறவேண்டுமானால், அவன் தன்னைப் பற்றி முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

கடமை எது என்று ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் பிறகு எப்படிச் செயல்படுவது என்பதில் குழப்பம் இருக்காது.

எந்த ஒன்றிலும் பர்றில்லாமல் அவன் கடமையைச் செய்தால் அவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

புதன், 16 நவம்பர், 2016

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும்.
தொன்று தொட்டே நம் மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்.
சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம். மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.
சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன.
மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன.
தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.
சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் :
*சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம்.
*சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும்.
*ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.httsp;//www.danvantarinadi.com.