உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை மாதம். சூரியன், சனீஸ்வரரின்
வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வளர்பிறை ஏழாம் நாள் சூரிய
ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சப்தமி எனும் ஏழாம் நாளில் வருவதால் ரத சப்தமி
என எல்லோராலும் அறியப்படுகிறது. நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர்
சூரியன். சகல ஜீவ ராசிகள், பயிர் பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ
வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி,
ஆளுமை போன்றவற்றின் கர்த்தா.
ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், அதிகார மையங்கள், தலைமை செயலாளர்கள் ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் இந்த ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின், தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும். அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள், காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது. அருக்கன் என்றால் சூரியன். இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது. எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது. சூரியனுக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு. தினகரன், பாஸ்கரன், அருக்கன், சூரிய நாராயணன் என பல காரணப் பெயர்கள் உண்டு. இதில் சூரிய நாராயணன் என்ற பெயர் விஷ்ணுவை குறிப்பதாகும். இந்த ரத சப்தமி நாளில் எல்லா வைணவ தலங்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறும். திருப்பதியில் அதிகாலை சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை எந்த நாளும் இல்லாத வகையில் பெருமாள் சப்த வாகனங்களில் அமர்ந்து அருள் பாலிப்பார்.
முதலில் சூரிய பிரபையில் ஆரம்பித்து, சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், கடைசியாக சந்திர பிரபையில் எழுந்தருளி நாள் முழுவதும் சேவை சாதிப்பார். இந்த நாள் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல் புண்ணிய பலன்களை தரும் நாளாக புராணங்கள் போற்றுகின்றன. இந்நாளில் துவங்கும் புதிய முயற்சிகள், அரசாங்க விஷயங்கள், முக்கிய சந்திப்புக்கள். தொழில், வியாபாரம் ஆரம்பித்தல் எல்லா சுப விஷயங்களுக்கும் பிள்ளையார் சுழி போடுதல் போன்றவை வெற்றிகரமாக முடியும். தியானம், மந்திரஜெபம், யோகா, கல்வி, கலை, பயிற்சிகள் போன்றவற்றை துவக்குவதற்கு நல்ல நாளாகும். இன்று செய்யப்படும் தானங்கள், தர்மங்கள், உதவிகள் ஒன்றுக்கு பத்தாக புண்ணியத்தை சேர்க்கும்.
வழிபாடு -பரிகாரம்
தினசரி சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, கோதுமை ரவை போன்றவற்றை இல்லாதோர், நோயாளிகளுக்கு தரலாம். கோதுமை பலகாரத்துடன் பழங்கள், கீரை சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம். தினசரி சூரிய காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி வரலாம். ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். சூரிய தலமான ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரியனுக்குரிய பிரார்த்தனை தலமாகும். ரத சப்தமி மற்றும் ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை சப்தமியில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்திக்கலாம்.by.www.danvantarinadi.com/
சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை : ஞாயிறு
தேதி : 1, 10, 19, 28.
நட்சத்திரம் : கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம் : சித்திரை, ஆவணி
ராசி : சிம்மம்
உச்சம் : மேஷம்
நீசம் : துலாம்
நிறம் : சிவப்பு
ரத்தினம் : மாணிக்கம் (சிவப்பு)
தானியம் : கோதுமை
ஆடை : சிவப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக