ஞாயிறு, 1 ஜனவரி, 2017

“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

 www.danvantarinadi.com

 


எது நடந்ததோஅது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோஅது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?எதற்காக நீ அழுகிறாய்?எதை நீ கொண்டு வந்தாய்அதை நீ இழப்பதற்கு?எதை நீ படைத்திருந்தாய்அது வீணாவதற்கு?எதை நீ எடுத்து கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள்அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,எனது படைப்பின் சாராம்சமுமாகும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
கீதையின்-சாரம்-முன்னுரை
கண்ணபிரான் போதனையான பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும்உற்ற நண்பனும்தூய தொண்டனும்உயிர்த் தோழனும்உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம்வீரம்புகழ் மிக்க போர் வீரனுமான அர்ச்சுனனுக்கு அவன் மனம் சோர்ந்து காண்டீபத்தையே கண்ணன் காலடியில் போட்டு மண்டியிட்டு மன்றாடிய போதுஅர்ச்சுனனை உண்மையான ஞானியோகிபக்தன்விவெகிவிராதி வீர்ன்அதிவிவேகி என்பதை உணர்ந்து கொண்டான்.
இப்படியானவன் சீடனாக அமைவது அருமையிலும் அருமை. எனவே இவன் மூலமாகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் முறிந்து சிதைந்த பரம்பரையின் புதிய பரம்பரைத் தொடர்பின் முதல் சீடனாக அர்ச்சுனனை உருவாக்கி அவன் மூலமாகவே உலக மக்களுக்காக பகவத்கீதையை அர்சுனனக்கு உபதேசிக்கிறான் கண்ண்ன். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான்.
சதித்திட்டங்களால் அர்ச்சுனனுடைய அரசை ஆக்கிரமிக்க எண்ணிய துரியோதனின் மனத்தையும்போர்களத்தின் மத்தியிலேயே அர்ச்சுனன் மனதில் நடந்து கொண்டிருக்கும் நிலமையையும் கண்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.
எதற்கும் அச்சம் பயம் கொள்ளாத அர்ச்சுனன் போர்க்களத்தில் உயிர் நஷ்டத்தை எண்ணியே மனம் தளர்ந்தான். காண்டீயம் அவன் கை விட்டு நழுவி விடுமளவு பொருமையை இழந்தான். இனியும் இங்கு நிற்க என்னால் முடியாது கண்ணா என்றான். போரிலெ வெற்றியைக் கண்டும் மகிழ்ச்சி கொள்ளாமல் உறவினர்நன்பர்கள்அன்பர்களின் உயிர் நஷ்டத்தைக் கண்டே கலங்கினான்.
எவர்களுக்காக என் வாழ்க்கையையும் போர் வெற்றியையும்அரசையும் விரும்பி போர்க்களம் வந்தவன் தன் குலத்தினரோடும்தன் உறவினரோடும் உள்ள இரத்தபாசம் அவனுக்கு ஏற்பட்ட இரக்கத்தால் வெளிப்படுகிறது.
அர்ச்சுனன் மூலமாக இவையாவும் அறிந்த கண்ணபிரானுடைய முடிவான தீர்மானம் நீதி நேர்மையில்லாத அநியாயமான அக்கிரமக்காரர்களைசமூக விரோதிகளை சண்டானர்களை கொண்ர்றொழிக்க வேண்டும். நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவான விருப்பம் கொண்டான்.
அர்சுனா! தகாத இடத்தில் தகாத நேரத்தில் ஏன் இவ்விதம் கோழையானாய்உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானதுகேடானது. அர்ச்சுனா! உலகில் பன்றிகளைப் போல் வாழ்வதற்கல்ல மனிதன் பிறந்திருப்பது.
தருமஷேத்திரமான குருஷேத்திரமே போர்க்களமானது. உன் இரத்த பாச எதிரிகளால்உன் மனைவி துரொபதையின் துகில் உரிந்த சண்டாளர் அவளின் உடை களைந்தபோதுபிஷ்மர் துரோணர் மற்றும் மதிப்புக்குரிய பெரியவர்கள்மற்றும் மாவீரர்கள் எல்லோரும் மெளனமாக பேசாதிருந்தார்கள். நீ போரிடாது விட்டால் உன் மதிப்பும் போய்விடும். இந்த அவமதிப்பை உன்னால் சகிக்கவே முடியாது.
போரிட்டவாறு இறப்பாயானால் சுவர்க்கம். வெற்றியானால் பெருமையும் அரசையாளும் மகிமையும் கிடைக்கும். போர்புரிவதே உன்கடமை. அதை நடுநிலையான மனதுடன் செய். வெற்றி தோல்வியில் பற்று வைக்கதே. இந்த அநியாய அக்கிரம சண்டாளர்கள் அசுர மனம்அரக்க குணம் கொண்டவர்கள். சமூகத்திற்க்கு உதவாதவர்கள். இவர்களை கொண்றொழிக்கவே வேண்டும்.கொல்வதற்கு பயப்படாதே. இவர்களை ஏறேற்கனவே கொன்றுவிட்டேன். கொல்வதற்கு பயபடாதே. உன் பக்கம் நான் இருக்கிறேன்.  உனக்காகவே சாரதியாகி தேரோட்டியாக செயல்படுகிறேன். எனவே நீ கவலைப்படாதே. தொடர்ந்து போர் செய். உனக்கே வெற்றி நிச்சயம்.
நல்லவர்களை காப்பாற்றவும்கொடியர்களை அழ்த்து தர்மம்நீதியை நிலை நாட்டவே நான் விரும்பி அவதரிக்கிறேன். இவ்வாறு கண்ணன் போதிக்கிறார் பகவத் கீதையில்.
கீதையின்-சாரம்-முன்னுரை-முற்றிற்று.
01. குருசோத்திரப் போர் களத்தில் படைகளை கவனித்தல்
பாண்டவர்களின் ஒப்பந்தப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தர்மரும் சகோதரர்களும் காட்டில் வாழ்ந்தார்கள்.ஓராண்டு காலம்
எவரும் அறியாமல் மாறு வேடத்தில் வாழ்ந்தார்கள்.இவ்வித கஷ்டங்களை சகித்து ஒப்பந்த காலமும் முடிவானது.தங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராச்சியத்தை உரிமையுடன் பெற்றுக் கொள்ள வந்தார்கள்.
அவர்களுடைய நியாயமான வேண்டுகளை பங்காளி துரியோதனன் கொடுக்க மறுத்துவிட்டான்” பாதி ராச்சியயமாவதுஊசிமுனை நிலம் கூடக் கொடுக்கமுடியாது. முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று ராச்சியத்தை பெற்றுக்கொள்ளட்டும்  என்று அறுதியிட்டுக் கூறிவிட்டான்.
கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?
அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும்அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது தர்மரும் சகோதரர்களும் தாய் குந்திதேவியிடம் நிலமையைத் தெரிவித்தார்கள்.” உரிமையைப் பெறப் போராடவும் தயங்க வேண்டாம்” என்றாள் தாய்.தாயின் உத்தரவு பெற்றதும் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள்.சமாதானத் தூதுவர்களாக பல அறிஞர்கள்,அரசர்கள்பெருமக்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை.ஆணவமும் அகம்பாவமும் கொண்ட துரியோதனன் எல்லோரையும் அலட்சியம் செய்து விட்டான்.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பலமுறை தூது சென்றும் தோல்வி கண்டார் அவரையும் துரியோதனன் மதிக்கவில்லை.காரணம் பிள்ளைப் பருவத்தில் கண்ணன் இடையர் குலத்தில் வளர்ந்தவன்.இடையர்களோடு கூடிப் பசுக்கூட்டம் மேய்த்தவன்.இதனல் கண்ணனைப் பற்றி எதுவும் அறியாமல் ஏளனமாய் எண்ணிக் கொண்டான்.அத்துடன் துரியோதனன் ராஜமாளிகையில் அரசயோகத்தில் வாழ்ந்தவன்.அர்ச்சுனன் கன்ணனனை தன்னுறவினனாகவும் தோழனானகவும் உயிருக்குயிரான நண்பனானகவும் ஓர் அவதார புருஷனானகவும் எண்ணி இதயத்தை பறி கொடுத்திருந்தான்.அதனால் அர்ச்சுனன் கண்ணனுக்கு கெளரவம் கொடுத்தான்.
போரே முடிவானது
போருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும்அன்பர்களையும்நண்பர்களையும் ,அபிமானிகளையும்,ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக்  கொண்டார்கள்.
போருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர்குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு ஈட்டிவாள்,சூலம்,வேல்பறைகள்( மேளங்கள்) சங்குகள்ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள்நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.
ஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும்  ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதனன் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.
அச்சமயம்  ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.
ஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.
பாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியாஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா! எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம்  எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.
இதைக்கேட்ட அர்ச்சுனன் ஆயுதம்
 ஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா!” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு  ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்என்று கேட்டார்.கிருஷ்ணா! நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இருந்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்.
எங்கு இறைவன் இருக்கிறானோ
அங்கு வெற்றி நிச்சயம் என்பது தத்துவம்
பெரியப்பா,சித்தப்பாபிள்ளைகளான  பாண்டவர்களுக்கும் ( ஐவர்) கெளரவர்களான ( நூற்றியொருவருக்கும்) போர் நடப்பது முடிவாயிற்று.இருதரப்பாரிற்கும் பாட்டானார் மகரிஷி வேதவியாசர் .101 பிள்ளைகளுக்குத் தந்தையான மகராஜா,திருதாட்டினர்,இவர் பிறவியிலே குருடர்.இவருடன் வேதவியாசர் மிகவும் பாசம் கொண்டவர்.அதனால் அவரிடம் வந்து மகனே  ( திருதாட்டினர்) பெரும்போர் தொடங்கப்போகிறது.இதனால் பேரழிவு நிச்சயம்.இனியாராலும் தடுக்கவே முடியாது.இந்தப் போரை நீ பார்க்க விரும்பினால் உனக்கு நான் திவ்விய திருஷ்டி ( அருட்பார்வை) தருகிறேன். இதன் உதவியால் நீ இங்கிருந்த படியே போர்க்களக் காட்சிகளைத் தெளிவாக பார்க்க முடியும்.என்றார். இதைக்கேட்ட திருதாட்டினன் என் புதல்வர்களும் என் தம்பி பாண்டுவின் புதல்வர்களுமாக நம்குலத்தவர்கள் தாமே. தமக்குள் போரிடுவதை நான் விரும்பவில்லை .ஆனால் போர் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அப்படியானால் உன் உதவியாளன் சஞ்சயனுக்கும்  திவ்விய திருஷ்டி அளிக்கிறேன்.அவன் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போராளிகளின் மனப்போக்கையும் நன்கு தெரிந்து உடனுக்குடன் சகல தகவல்களையும் தெரிவிப்பான் என்று கூறினார். அதனால் சஞ்சயனும் அருள்நோக்கைப் பெற்றான்.போர் தொடங்கியதிலிருந்து முடிவுவரை சகல நிகழ்ச்சிகளையும் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியான கண்ணபிரானின் செயல் திறன்களையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனனின் கேள்விகளையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனன் கேள்விகளையும் விபரமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.
சஞ்சயன் ( காவல்க்கணர்) என்ற தேரோட்டியின் மகன். தேரோட்டிகளில் சஞ்சயனுக்கு மட்டுமே அக்காலம் தனிமதிப்பும் மரியாதையும் இருந்தது.இவன் அமைதியானவன்,அடக்கமானவன்,நல்நடத்தையானவன்,நல்லஞானமுள்ளவன்.பரமாத்மா கிருஷ்ணனுடைய பக்தன்.அவருடைய மகிமையை உண்மையான சொரூபத்தை பூரணமாக அறிந்தவன்.அக்காலம் அர்ச்சுனனும் சஞ்சயனும் இளமைமுதல் இணைபிரியாத நண்பர்கள்.சஞ்சயனுக்கு பகவான் வேதவியாசர் அளித்த தெய்வீக பார்வையால் அவனிருந்த இடத்திலிருந்தே திருதாட்டினருக்கு குருஷோத்திர போர் நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்தான்.
போர்முனை
அநுமான் கொடி பறந்து கொண்டிருக்க அழகான கம்பீரமான வெண்நிற புரவிகள்( குதிரைகள்) பூட்டிய கம்பீரமான ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாரதியாக அமர்ந்திருக்கிறார்.அவருக்கு பின்னால் காண்டீபதாரியாய் அர்ச்சுனன் அமர்ந்திருக்கிறான்.குறித்த நேரத்தில் ரதம் போர்க்களம் புகுந்தது.

இருபடையணிகளிலும் தம் உறவினர்களையும் நண்பர்களையும் மற்றும் வேண்டியவர்களையும் கண்டான்.அர்ச்சுனன் போரில் இவர்கள் எல்லாம் இறந்து போவார்களே என்ற எண்ணமும் உண்டானது.சோகத்தால் மனம் தளர்ந்தான்.கண்ணா இருசேனைகளுக்கும் நடுவில் நம் ரதத்தை கொன்டுபோய் நிறுத்துங்கள்” என்றான்.அர்ச்சுனனுக்கு போர் ஆயத்தங்களை குறிக்கும் முரசங்கள் முழங்கியதும் அவனுக்கு உற்சாகம் பொங்கியது.ஏன் அர்ச்சுனா அவ்விதம் கேட்கிறாய் கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனா!இதோ உன்னுடன் போர் புரிய வந்திருக்கும் உறவினர்களான குருவம்சத்தவர்களை பார் என்றார்.அர்ச்சுனன் இடுபக்கப் படைகளையும் அவதானித்தான்.எதிர் அணியிலுள்ள சகலரையும் பாட்டனர்களான பீஷ்மர்தூரோணச்சாரியார்ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் யாவரையும் கண்டான்.மேற்கொண்டு இப்போர்க்களத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கும் வீரப்பெருமக்களை நான் பார்க்க வேண்டும் அல்லாமலும் எவர்களோடு நான் போரிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்யும் நோக்குடன் வந்திருக்கும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.
அதேசமயம்( கெளரவர்) துரியோதனன் படையின் பிரதம தளபதி பீஷ்மர் சிங்கம் கர்சிப்பதுபோல் சங்கொலி எழுப்பினார்.தொடர்ந்து அவர் படையினர்களும் போர் முரசங்கள் மற்றும் வாத்தியங்களை முழங்கினார்கள்.வஞ்சகன் துரியோதனன் அங்குமிங்குமாக ஓடி வியாசரிடமும் துரோரணச்சாரியரிடமும் வஞ்சமான முறையில் உரையாடி அவர்களை உசுப்பி உசார்ப்படுத்தி வைக்க பல அரசியல் தந்திரங்களை கையாளுகிறான்.காரணம் பெரியவர் பீஷ்மர் இருபகுதியாருக்கும் பாட்டனார்.ஆனால் தனது படைக்கு தலைமைத் தளபதி. இது இவனுக்கு ஓர் சந்தேகம்.அவர் இருதரப்பாரிடமும் பாசம் கொண்டவர்.அவனே தீர்மனிக்கிறான் அவர் தலைமை தளபதியாக இருந்தாலும்கூட பாண்டவர் படையை வெல்வது சந்தேகம். பாண்டவர் படைக்கே மிகப்பெரும் பலவானும் வல்லவனுமாகவிருக்கும் பீமசேனனின் படை எனது கெளரவர் படையை வென்றுவிடமுடியும் என்பதும் அவனை உறுதிப்படுத்தி மனதை உறுத்தியது.போர்முனையில் கெளரப்படையினரின் முழங்கக்கேட்டதும் பாண்டவர் படையும் போர் தொடங்க வாத்தியங்களை முழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதற்குரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை.அதேசமயம் வெண்நிறப்பிரவிகள் பூட்டிய சிறந்த ரதத்தில்  அர்ச்சுனனோடு அமர்ந்திருந்த கிருஷ்ண பரமாத்மா தனது ” பஞ்சஷன்னியம்” என்னும் சங்கை எடுத்து எங்கும் பேரொலியாக கேட்க முழங்கினார்.
தொடர்ந்து அர்ச்சுனனும் தேவதத்தன் என்னும் சங்கை முழங்கினான்.தொடர்ந்து பீமன்,தர்மர்,நகுலன்,சகாதேவன் முறையேபெளண்டிரம்”" அனந்த விசயம்”"சுகோஷம்”"மணீ புஷ்பகம்ச்ங்குகளையும் முழங்கினார்கள்.வீறுகொண்டெழுந்த பாண்ட்வர்களின் சங்கநாதம் எல்லா திசைகளிலும் பரவி எதிரொலித்தது.முறைகேடாக ராச்சியத்தை அபகரித்துக் கொண்ட கெளரவர்களின் நெஞ்சங்களை நடுநடுங்க வைத்தன.
எதிர் அணியிலும் தன் அணியிலும் போரிடக் காத்திருக்கும் மாவீரர்களான பாட்டனார்ஆசாரியர்மாமா,சகோதர்கள்,அண்ணன்,தம்பிகள்,புதல்வர்கள்,மாமனார்கள்,தந்தைக்கு ஒப்பான பெரியவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,அரசர்கள் இவர்களை எல்லாம் பார்த்ததும் அர்ச்சுனன் தைரியமிழந்து கோழையைப் போல் வருந்தி பேசத்தொடங்கினான்.
ஹே கிருஷ்ணா!என் நெருங்கிய உற்றார் உறவினர்களை போர்புரியும் நிலையில் எதிரே பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன.முகம் வாடுகிறது,உடல் நடுங்கிறது.மயிர்க்கூச்சு எழுகிறது.என் கையிலிருந்து காண்டீப வில் நழுவுகிறது.சர்மம் முழுவதும் எரிச்சல்மனம் தத்தளிக்கிறது. தடுமாறுகிறது.என்னால் நிற்கக்கூட முடியவில்லையே கண்ணா!
கண்ணன்: அர்ச்சுனா!இதைத்தவிர வேறெதெல்லாம் தெரிகிறது?
 அர்ச்சுனன் கேசவா! தீய சகுனங்களை காண்கிறேன்.போரில் இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு என்ன இலாபத்தை அடையப்போகிறேன்எனக்கு எதுவும் கிட்டாது. (31)
கண்ணன்அர்ச்சுனா! இவர்களையெல்லாம் வதம் செய்யாமல் உங்களுக்கு உரிமையோடுரிய ராச்சியம் எப்படிக் கிடைக்கும்?
 அர்ச்சுனன் :கிருஷ்ணா! எனக்கு வெற்றியும் வேண்டாம்.இந்த அரசாட்சியும் வேண்டாம்.அரசர் பதவி தரும் சுகங்களையும் நான் விரும்பவில்லை.கோவிந்தா! எங்களுக்கு ராச்சியத்தாலோ சுகபோகங்களாலோ அல்லது வாழ்வதனாலோ என்ன பயன் கிட்டப்போகிறது. (32)
கண்ணன்:  வில்லாளி வீரனே! அர்ச்சுனா! நீ வெற்றியையும் அரசாட்சிகளையும் விரும்பவில்லையா?
அர்ச்சுனன்கண்ணா! நாங்கள் எவர்களுக்காக வேண்டி இந்த ராச்சியம் ,சுகபோகம் எல்லாம் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தம் உயிர் பொருள் சார்ந்த பற்றுதல்களை துறந்து போர்புரிய போர்முனையில் வந்து நிற்கிறார்களே(33)
கண்ணன்:  அர்ச்சுனா! இவர்கள் எல்லோரும் உனக்கு யார்?
அர்ச்சுனன்: எந்து குருதேவர் தந்தைமார்கள்புதல்வர்கள்,பாட்டனார்கள்,மாமா, ,மாமன்மார்கள்பேரப்பிள்ளைகள்,மைத்துனர்கள் மற்றும் பல உறவினர்கள். (34)
கண்ணன்:  தம்பி ! இவர்களே உன்னைக் கொல்ல முன் வருவார்களேயானால்?
அர்ச்சுனன்: இவர்கள் என்னைக் கொல்லட்டுமே.மதுசூதனா! எனக்குத் தேவலோகம்பூலோகம்பாதளலோகமென்னும் மூவுலகங்களும் கிடைப்பதானாலும் நான் இவர்களைக் கொல்ல மாட்டேன்.வெறும் பூவுலக அரசாட்சிக்காகவா கொல்லவிரும்புவேன். (35)
கண்ணன்:  தம்பி ! ராச்சியம் ஆளுவதற்கு கிடைத்தால் உனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஏன் இதை நீர் விரும்பவில்லை .இது உங்களுக்கு உரிமையான ராச்சியம் அல்லவா?
அர்ச்சுனன்ஜனாத்தனா! பெரியப்பா திருதராஷ்டிராரின் மக்களையும்உறவினர்களையும் கொன்றுவிடுவதில் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?அவர்கள் எனக்கும் உறவினர்கள் தானே?இந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவா!இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமா( 36,37)
கண்ணன்: அர்ச்சுனா! எதிரணியிலிருக்கும் உன் உறவினர்கள் உன்னையே கொல்லக் காத்திருக்கிறார்கள்.நீ மட்டும் ஏன் அவர்களை கொல்லப் பின் வாங்குகின்றாய்? 
அர்ச்சுனன்பெருமானே! பேராசை காரணமாக இவர்களுடைய பகுத்தறிவு பாழடைந்து விட்டது.அதனால் குலநாசம்,மித்ர தூரோகம் ஆகியவையால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் இவர்கள் கவனிக்கவில்லை.இப்பாவத்தை உணர்த்தும் பகுத்தறிவு படைத்த நாங்களாவது இக்குற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்.குலம் அழிந்தால் என்ன ஆகும்?  ( 38, 39)
கண்ணன்:  குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.
அர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்
கண்ணன்:  குலம் முழுவதிலும் அதர்மம் பரவும். (40)
அர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்?
கண்ணன்:  அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்
அர்ச்சுனன்குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்?
கண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.(41)
அர்ச்சுனன்இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா?
கண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்லஅக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,( சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்( பிதுருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம்ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன( 42,43)
அர்ச்சுனன்கண்ணா! குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்?
கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை(44)
போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?
அர்ச்சுனன்இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும்அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது.  (45)
கண்ணன்:  இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்?
அர்ச்சுனன்: நான் ஆயுதங்களைத் துறந்து யுத்ததிலிருந்து விலகிவிட விரும்புகிறேன்.நிராயுதபாணியான என்னை துரியோதனன் முதலானவர்கள் கொன்றாலும் அது எனக்கு நல்லது. (46)
இப்படியே மனம் வருந்திப் பேசியபின் காண்டீப வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவிடு ரதத்தின் நடுவில் மனசோர்வுடன் உட்கார்ந்து விட்டான்.(47)
படையினரின் விபரம்
பாண்டவர் படை: பாண்டவர் படையைச் சேர்ந்த சிறந்த வில்லாளிவீரர் காசிராஜர்,மாவீரர் சிகண்டி,திருஷ்டத்மனன்,வீராடமன்னன்.வெல்லவே முடியாத வீரசாத்தயகிராஜா துருபரர்,துரோபதியின் ஐந்து வீரப்புதல்வர்கள்,சுபத்திரையின் வீரப்புதல்வன் அபிமன்யு இவர்கள் யாவரும் படையில் போர் புரிகிறார்கள்.
துரியோதனின் படை: வீரமிக்க பாட்டனார் பீஷ்மர் தலைமைத்தளபதி,மாவீரன் கர்ணன்,வெற்றி வீரர் கிருபாசாரியார்,அசுவத்தாமா,விகர்ணன்,சோமதத்தரின் புதல்வர் பூரிசிரவர் இவர்களோடு சிறந்த போர் வீரர்களும் போராடுகிறார்கள்
 கீதையின் உள்பொருள் சுருக்கம்
போர்களத்திற்கு வெகு உற்சாகத்துடன் போர் புரிய வந்த அர்ச்சுனனன் போர் படைகளின் ஆர்பாட்டன்களையும் அவர்களின் உற்சாகத்தையும் கண்டு இவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்களோ என்று எண்ணி மனோதிடம் இல்லாமல் கோளையைப் போல வருத்தப் பட்டுகொண்டான். அவன் கண்களில் நீர் முட்டி வழியத் தொடங்கியது.மதுசூதனன் அர்ச்சுனா! தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டதுஇப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான  வீர புருசனுக்கு அழகல்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ,அளிக்காது. ஆகையால் பார்த்தா! இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே! இதயத்தை வழுவிழக்கஷ் செய்யும் இந்த அற்ப பலவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு காண்டீபத்தை கையிலெடு. போபுரிய எழுந்திரு. போரைத் தொடங்கு என்றார்   ( 1- 3)
அர்ச்சுனன்: கண்ணா! நான் சாவதற்குப் பயப்படவில்லை. பிறரைச் சாகடிகத்தான் தயங்குகிறேன். அஞ்சுகிறேன். என் எதிரே தோன்றும் பீஷ்மர்,துரோணர் முதலானவர்களென் பெருமதிபிற்குரியவர்கள் நான் பூசிக்கத் தகுந்தவர்கள். இத்தகைய சான்றோர்களை கடிந்து பேசவே கூடாதென்று என் இளமைப் பருவமுதல் கருதிய நான் இவர்களுடன் எப்படி பகைமை உணர்வுடன் போர்புரிய முடியும். எப்படி தாக்கி அழிக்க முடியும்   (4)
கண்ணன்: அர்ச்சுனா! கடமையைச் செய்வதற்கு எதிராக வேறு எதையும் கருத்தில் கொள்ளலாமா?
அர்ச்சுனன்: கண்ணபிரானே! மதிப்பிற்குரிய பெரியவர்களை கொல்வதைவிட இந்த பூமியில் பிச்சையெடுத்து வயிறு வளர்ப்பதை மேலாகக் கருதுகிறேன். உங்கள் போதனைப்படி நான் போரிட்டால் எனக்கு என்ன கிட்டும்பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன்அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா(5)
கண்ணன்: அர்ச்சுனா! அப்படியானால் நீ என்ன செய்வதாக உத்தேசம்எதை நியாயம் என்று கருதுகிறாய்
அர்ச்சுனன்: பரந்தாமனே! இந்தப் போர்புரிவது சரியா தவறா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் போரில் நாங்கள் ஜெயிப்போமா தோற்போமா என்பதும் தெரியாது. எல்லாவற்றையும் விட மிகவும் முகியமானது எவர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் வாழ விரும்பவிலையோஅவர்கள் தான் எங்களுக்கு எதிரே அணிவகுத்து நிற்கிறார்கள்.இந்தச்சொந்த ப்ந்தமுள்ள குடும்பத்தாரை நாங்கள் எப்படி  கொல்வோம்  ( 6)
கண்ணன்: இப்போது நீ எதையும் தீர்மானிக்க முடியவில்லையோ இதற்கு மாற்று வழியாக எந்த உபாயத்தை யோசித்துள்ளாய்?
அர்ச்சுனன்: மாதவா! கோழைத்தனம் என்னும் குறைபாட்டால் என் சஷத்திரிய வீர இயல்பு தாழ்ந்து போயிருக்கிறது. எது தர்மம்என்று தீர்மானிக்க இயலாத மதி மயக்கம் . ஆகையால் எது நலந்தருமோ,எது என் கடமையோ எனக்கு எடுத்து சொல்லுங்கள் நான் உங்கள் சீடன் உங்களை சரணடைந்திருக்கிறேன்.எனக்கு அறிவுரை வ்ழங்குங்கள்.வழிகாட்டுங்கள்.க்ண்ணபிரானே முதலில் சொல்வதைப்போல் யுத்தம் புரிய மட்டும் சொல்லாதீர்கள்.ஏனென்றால் போரில் வெற்றி பரிசாகக்கிடைக்கும் செல்வங்களும் அரசும்,அரச சுகபோகங்களும் அல்லது தேவலோக தலமைப்பதவியானாலும் கூட அவற்றால் என் சோகத்தைப் போக்க முடியாது இந்த துயரம் என் புலன்களையே செயலிழக்க வைக்கிறது.                                       (7 -8)
எனவே நான் போர் புரியமாட்டேன் என்று தெளிவாக கூறிவிடேன்.   (9)
கண்ணன்: புன்சிரிப்புடன் நீ வருத்தப்பட வேண்டாததிற்கு வீணாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். புலமைமிக்க சான்றோர் போல்பெரிய தத்துவம் பேசுகின்றாய்! விவேகம் மிக்க சான்றோர்கள் இறந்து போனவர்களுக்காகவும் இறக்கப் போகிறவர்களுக்காகவும் ஒருபோதும் வருத்தப்படமாட்டார்கள். இத்தத்துவத்தை முதலில் நன்றே புரிந்துகொள்.   ( 10,11)
அர்ச்சுனன்: கண்ணா! ஏன் அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்?
கண்ணன்: அர்ச்சுனா! நானோ நீயோ இந்த அரசர்களோ முன்பும் இருந்ததில்லை.பின்பும் இருக்கப்போவதில்லை என்று நினைக்கலாகாது.நாம் எல்லோருமே முன்பும் இருந்தோம்.பின்பும் இருக்கப்போகிறோம்.இந்த உண்மையை உணர்ந்த சன்றோர்கள் பிறப்பு இறப்புக் குறித்துச் சோகப்படமாட்டார்கள்.     ( 12)
அர்ச்சுனன்: வாசுதேவா! இதை எப்படி நான் அறிவு  பூர்வமமாக உணரமுடியும்?
கண்ணன்: தம்பி அர்ச்சுனா! உயிருள்ள இந்த உடலுக்கு பிள்ளைப் பருவம் வாலிபம்வயோதிபம்முதுமை எப்படி ஏற்படுகின்றனவோ இதே போலத்தான் மற்றச் சரீரங்களிலும் குடிபுகுகிறது இந்த ஜீவன் இதனாலிந்த விசயத்தில் விவேகிகள் வருத்தம் கொள்வதில்லை ( 13)
அர்ச்சுனன்: பராத்தமாவே! குழந்தைப் பருவம் முதலிய பலநிலைகள் உடலுக்கு ஏற்படுகின்றன,உண்மைதான்ஆனால் ஏற்புடையது,ஏற்கமுடியாதது,சுகமளிப்பதுதுன்பம் தருவது ஆகியவை எதிர்படும்போது என்ன செய்வது?
கண்ணன்: குந்திதேவியின் மைந்தனே! புலன்களுக்கு உட்பட்ட பௌதீகப் பொருட்கள் யாவும் உகந்தது.அல்லாதது என்னும் நிலைகளில் சுகத்தையும் துக்கத்தையும் தரகூடியவைகள் .ஆனால் அவை வந்து போககூடியவைகள். ஆகையால் அர்ச்சுனா!அவைகளை நீ ஏற்றுகொள். சகித்துகொள்அவைகளீடம் விருப்பு வெருப்பு இல்லாமல் இரு.  (14)
அர்ச்சுனன்: கண்ணா அப்படி இருப்பதால் என்ன பயன்?
கண்ணன்: ஆண்களில் சிறந்தவனே! சுகதுக்கங்களில் சமநிலையோடு இருந்துவரும் தீர புருசனைப் புலன்களுக்கு ஆட்பட்ட பெளதீகப் பொருட்கள் மகிழ்ச்சியோதுன்பமோ கொள்ள வைப்பதில்லை. அத்தகைய நடுநிலைப் பேராண்மைக்குரியவன் பாராத்மாவை தன்னுள் உணர்கிறான்.இதன் மூலம் அமரத்துவ நிலயையும் அறிகிறான்.  ( 15)
அர்ச்சுனன்: அது எப்படிச் சாத்தியமாகும் கண்ணா?
கண்ணன்: ” ஸத்” என்பது சேதன தத்துவம் – உயிர் கொண்டது ” அஸத்” என்பது சடப்பொருள் -உயில்லாப் பொருள் ஸத்” எப்போதுமே இருந்து வருகிறது அஸத்” பொருளுக்கு நிலையில்லை. இந்த உண்மையை தத்துவஞானிகள் அறிந்திருப்பதால் அவர்கள் அமரத்துவ நிலையில் இருக்கிறார்கள் (16).
அர்ச்சுனன்: அந்த ஸத் என்னும் அழியாப் பொருள் எது கண்ணா?
கண்ணண்:எப்பொருள் உலகம் முழுவதிலும் பரவி நிலையாய் இருக்கிறதோஅது அழியாத ஸத்” அதை யாராலும்அழித்துவிடமுடியாது
அர்ச்சுனன்அஸத் எனும் அழியும் பொருள் எது?
கண்ணன்: நம்மிடமிருந்து ஜீவன் எனும் சேதனம் அமரத்துவம் கொண்டது. இதை ஊகித்து அறிய முடியாது. இதனுடைய உடல் உறுப்ப்புகள்.சாதன்ங்கள் யாவும் அஸத்” எனும் அழியும் பொருட்கள்.இதனால் தான் சொல்கிரேன் அர்ச்சுனா! நீஉன் கடமைளைச் செய். யுத்தம் புரிய வேண்டியதுதான் இப்போதைக்குரிய உன் கடமை.
போரில் இறப்பதும் கொல்லுவதும் தவிர்க்க முடியாதவை ஆகையால் உடலில் இருக்கும் ஜீவனும் அந்நிலைக்கு ஆளாகும் என்றெண்னாதே.அதாவது தானும் மடிந்து பிறரையும்மடிய வைக்கும் என்றெண்ணாதே.இந்த ஜீவன் உடலுப்புகளைக் கொண்டிருந்தாலும் அழிவற்றது.மேலும் சேதனன் என்னும் இந்த ஜீவன் எவரையும் அழிப்பதுமில்லை. தானும் அழிவதில்லை.
அர்ச்சுனன்: மாதவா! ஏன் அப்படி அமைந்திருக்கிறது?
கண்ணன் : ஜீவனை சரீரி ( உடல் பெற்றது) என்பர்.இது பிறப்பு இறப்புகளைக் கடந்தது.அதாவது பிறப்பதுமில்லை,இறப்பதுமில்லை.நித்தியமாக நிரந்தரமாக இருப்பது.சரீரம் அழிந்த பிறகும் அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் நிலைபெற்றது.
அர்ச்சுனன்: இதை எப்படி உணர்வதுஉணர்வதால் என்ன பயன்?
கண்ணன்: பார்த்தனே! எந்த மனிதன் இந்தப் பெளதீக உடலை கடந்த ஜீவனை அழிவில்லாதது. நித்தையமானது.பிறப்பும் இறப்பும் இல்லாதது என்பதை நன்கு உணர்கிறானேர் அவன் ப்றரைக் கொல்வதாகவோ பிறரை கொல்லச் செய்வதாகவோ எப்படி நினைப்பான்?

அர்ச்சுனன்: பரமனே! அப்படியானால் இறப்பது யார்?
கண்ணன்: அர்ச்சுனா சரீரம் தான் அழிகிறது சரீரி” அழிவதில்லை . மனிதன் எவ்வாரு  பழைய ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை உடுத்துகிறானோ அதேபோல் ” சரீரி” என்னும் ஜீவன் பழைய உடல்களைத் துறந்துவிட்டு புதிய உடல்களுக்குள் புகுந்து குடியிருக்கச் செல்கின்றது.
அர்ச்சுனன்: புதுப்புது உடல்களில் குடி புகுவதால் உயிருக்குக் எதாவது மாறுதல்கள் ஏற்படுமல்லவா
கண்ணன்: எந்த மாறுதல்களும் ஏற்படாது. ஏனெனில் இந்த சரீரியை ( உயிரை) எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.தீயாலிது எரிக்க முடியாது.தண்ணீரால் இது கரைந்துவிடாது.காற்றால் இதை காய வைக்கவோ சிதறடிக்கவோ முடியாது.
அர்ச்சுனன்: கண்ணா! இந்த உயிர் ஏன் யூகப் பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை?
கண்ணன்: இந்த சரீரி என்னும் ஜீவனை தகர்க்கவோஎரிக்கவோநனைக்கவோவற்றச் செய்யவோ எதனாலும் இயலாது.காரணம் இது நித்தியமாக- சாசுவதமாக இருப்பது.எல்லா வகையிலும் பரிபூரணமானது-நிலையான இயல்பு கொண்டது- சஞ்சமில்லாதது -தொன்றுதொட்டு இருந்து வருவது .இந்த ஜீவன் புலன்களுக்கு அடங்காதது.அதனால் நேரிடையாக காணவும் முடியாதது.இதை உள்ளுணர்வாலும் அறிய முடியாது இதில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டு இந்த ஜீவனைக் குறித்து நீ வருத்தபடவேண்டாம்.
அர்ச்சுனன்: அர்ச்சுதா! இந்த சரீரியை ( உயிரை) மாறுதலற்றதுஅழிவற்றது என்பதை உணர்ந்து கொண்டபின் வருத்தமோ கவலையோ ஏற்படலாகாது உண்மை. ஆனால் அந்த உணர்வு ஏற்படாத வரையிலும் வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?
கண்ணன்: வலிமை மிக்க வில்லாளியே! நீ இந்த உயிரை பிறப்புக்கும் இறப்புக்கும் இலக்கானதாக கருதினாலும் அதையிட்டு வருத்தப்படக்கூடாது.காரணம் பிறந்தது இறக்கத்தான் செய்யும்.இறந்தது பிறகு பிறக்கத்தான் போகிறது.இந்த நியதியை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.ஆகையால் அழிந்து,பிறகு பிறக்கும் உடல்களைக் குறித்து நீ சோகம் கொள்ளலாகது.
அர்ச்சுனன்: சரீரி என்னும் உயிருக்காக சோகப்படலாகாது என்பது சரி தான்.ஆனால் சரீரத்துக்காக வருத்தப்பட வேண்டித்தானே இருக்கிறது?
கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எந்தச் சரீரத்துகாகவும் வருத்தப்படக்கூடாது. எல்லாப் பிராணிகளும் பிறப்பதற்கு முன்பு புலப்படாதவை. நடுவில்மட்டும் தான் புலபப்டுகின்றன இதற்காக வருத்தபடுவான் ஏன்?
அர்ச்சுனன்: கண்ணா! எப்படியும் கவலை எற்படுகிறது ஏன்எப்படி அறிவது?
கண்ணன்: அறியாமைதான் காரணம்.ஜீவ தத்துவத்தை ஜம்புலன்களால் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) மனத்தாலும் அறிவாலும் புரிந்துகொள்ளவோஉணரவோ இயலாது.ஆகையால் ” சரீரியை” பார்ப்பது,பேசுவது,கேட்பது,எல்லாமே வியப்பாகத்தான் இருக்கும்.பிரமை பிடித்த வியப்பு இதை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாது.நமக்குள் நாமே சிந்தித்து உணர வேண்டும் இதற்கும் ஆழ்ந்த சிந்தனை தேவை.
அர்ச்சுனன்: அந்த உணர்வு எத்தகையது கண்ணா?
கண்ணன்: பரதவம்சத்துச் செல்வனே! எல்லா உடல்களிலும் உள்ள இந்த உயிர் என்னும் உள்ளது.அழிவற்றது. அழிக்க இயலாதது.இந்தத் தத்துவத்தை திடமாக உணர்ந்து கொண்டபின் எந்தப் பிராணிக்காகவும் ஏன் வருத்தப்பட வேண்டும்.
அர்ச்சுனன்: கண்ணா! வருத்தத்தை விலக்கிகொள்ள பல அறிவுரைகளைச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு இப்போது எற்பட்டிருக்கும் அச்சத்தையும் பாவச் செயல்களினால் ஏற்படும் பயத்தையும் எப்படிப் போக்குவது?
கண்ணன்: அர்ச்சுனா! உன் ஷத்திரிய தர்மத்தை( கடமையை) ச் சர்ந்தாவது நீ பயப்படாமல் இருக்க வேண்டும்.காரணம் வீரர் குலத்தவர்களான சஷ்த்திரியர்களுக்கு போரிடுவதுதான் தர்மம் இதைவிட நலம்தரும் வேறுசெயல்கள் ஒன்றுமில்லை.
அர்ச்சுனன்: அப்படியானால் சஷத்திரியர்கள் போர் புரிந்துகொண்டே இருக்கவெண்டுமா?
கண்ணன்: இல்லைத் தம்பி போர் எற்படும்போது போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது சஷத்திரய தர்மம் போரிடுவதுதான் அதுவே சுவர்க்கம் புகும் தலைவாசல் .பார்த்தா! போரிடும் வாய்ப்பைப் பெறும் சஷத்திரியர்கள் பாக்கியசாலிகள்.உண்மையில் அவர்கள் உத்தமமான சுகம் பெறுகிறார்கள்.சுவர்க்கம் புகுகிறார்கள்.
அர்ச்சுனன்: கண்ணா! வலுவில் வந்த போரை நாம் தவிர்த்துவிட்டு நான் ஒதுங்கி போனால் என்ன ஆகும்?
கண்ணன்: இது அறப்போர் .இதை நீ செய்யாவிட்டால் உன் சஷ்த்திரிய தர்மமும் இதுவரை நீ ஈட்டிய புகழும் அழியும் நீ உன் கடமையைச் செய்யாததால் உனக்குப் பாவமும் வந்து சேரும்.
அர்ச்சுனன்: புகழ் அழிந்து அபகீர்த்தி ஏற்பட்டால் என்ன ஆகும்?
கண்ணன்: அன்புள்ள் தம்பி! நீ போர் புரியாவிட்டால் தேவதைகள்,மனிதர்கள் எல்லோரும் உன்னை இகழ்வார்கள்.வெகு காலம்வரையும் நீ கடமை தவறிய குற்றத்தை சொல்லிக் காட்டுவார்கள்.இந்த அவப்பெயர் மதிக்கத்தக்க பெருமை கொண்ட உன் போன்ற மனிதனுக்கு மரணத்தைவிட கொடிய துன்பம் தரும்.
அர்ச்சுனன்: மாதவா! மேலும் என்ன ஆகும்?
கண்ணன்: உன்னை பீஷ்மர்,துரோணர் முதலான மாவீரர்கள் வீரபுருசனாக மதிக்கிறார்கள்.அந்த மதிப்பும் போய்விடும்.நீ சாவிற்கு பயந்து கோழையாகி போரிடாமல் ஓடிவிட்டதாக கருதுவார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! இந்த அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ளமுடியாதா?
கண்ணன்: உன்னால் முடியவே முடியாது. மிகப்பெரிய பயங்கரமான மோசமான விளைவுகள் ஏற்படும். உன் எதிரிகளுக்கு பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.அவர்கள் உன் வீரதீர பிரதாபத்தை எள்ளி நகையாடுவார்கள்.இழி சொற்களால் உன்னை ஏசுவார்கள். தூற்றுவார்கள்.இதைவிட துன்பம் வேறு இருக்கமுடியுமா?
அர்ச்சுனன்: சரி நான் போர் புரிந்தால்?
கண்ணன்: போரிட்டவாறு நீ இறந்தாலும் உனக்கு பெருமை சுவர்க்க லோகமும் கிடைக்கும். வென்று விட்டாயானால் இவ்வுலகை அரசாளும் மகிமை மாட்சி கிட்டும். ஆகையால் குந்திதேவியின் மைந்தனே! போர் புரியும் தீர்மானத்துடன் ஆயத்தமாகு. காண்டீபத்தை கையிலெடு.
அர்ச்சுனன்: கேசவா! போர்புரிவதால் பாவம் எற்படாதா?
கண்ணன்: நீ நடுநிலையான மனப்பாங்குடன் கடமையைச் செய். வெற்றி தோல்வி,லாபம்,நட்டம்,இன்பம்,துன்பம் இவைகளில் சமபுத்தியை ஏற்படுத்திக்கொள்.இந்நிலையில் நீ போர்புரிந்து பகைவர்களைஅழிப்பதால் உனக்கு பாவம் ஏற்பட்டது.
அர்ச்சுனன்: கண்ணா! பாவம் ஏற்படுத்தாத சமபுத்திக்கு மேலும் என்ன சிறப்புள்ளது?
கண்ணன்: இந்த சமநிலை அறிவு ( சமபுத்தி) பற்றி முன்பே உனக்கு சாங்கியயோகம் பகுதியில் கூறியிருக்கிறேன்.இப்போது கர்மயோகம்” (செயல்பாடு) சார்ந்த கருத்திலும் சமபுத்தியின் சிறப்பை சொல்கிறேன்.
1. நடுநிலை மன்ப்பாங்கு ( சமபுத்தி) கொண்டுள்ள நீ எல்லாக் கருமபந்தங்களிலும் இருந்து விடுபடுவாய்
2.சமபுத்திக்கு துளியும் அழிவு ஏற்படாது.
3.இதை மேற்கொண்டால் எதிரிடையானவிளைவும் ஏற்படாது.
4.இதைச் சிறிதளவு சார்ந்த அச்சத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
அர்ச்சுனன்: கண்ணா! நீங்கள் புகழ்ந்துபேசும் சமபுத்தி நிலையை எட்ட என்ன வழிகள்?
கண்ணன்: இந்நிலையை எட்ட முதலில் உன் அறிவை ஒரே இலட்சிய முனைப்பிற்கு ஆயுதப்படுத்திக் கொள்ள வேண்டும். பரம்பொருள் தத்துவம் ஒன்று அதை எட்டவேண்டும் என்ற திடமான நிச்சயம் ஏற்பட வேண்டும்.
திடநிச்சயமுள்ள புத்தியை செயலாற்றல் மிக்க ஒருமுனைப்புள்ள் அறிவு என்பர்..இந்த நிச்சயமில்லாத புத்தி மனிதனை பல வழிகளிலும் இட்டுச் சென்று அல்லல்ப்படுத்தும். பல பிரிவுகளைக் கொண்டதாக அது பிரிந்து சிதைந்து செயல்படுத்தும்.
அர்ச்சுனன்: ஒரே முனைப்புள்ள நிச்சயம் மனித புத்திக்கு ஏன் எளிதாக ஏற்படுவதில்லை?
கண்ணன்: அறியாமைதான் காரணம். இந்த அறியாமை எப்படி ஏற்படுகிறதுஆசாபாசங்களுக்கு அடிமையானவர்கள் .சுவர்ககலோக சுகபோகத்தை மேலாக கருதுபவர்கள். வேதத்தின் கர்ம காண்ட பகுதிகளில் கூறப்பட்டுள்ள விருப்பங்களுக்கு ஏற்ற கர்மாக்களில் பற்றுதல்ல் கொண்டவர்கள். பெளதீக சுகபோகம் வாழ்க்கையின் பயன் என்று நம்பி வாழ்பவர்கள். இத்தைகைய மனிதர்கள் மலர்ந்து மனம் வீசும் மலர்களைப்போல் கவர்ச்சிமிக்க வாக்குக்ளைத் தம் கருத்துகளைச் சாதகமாக பேசி வருவார்கள்.அவர்களுடைய கவர்ச்சிப் பேச்சுக்கள் மாறி மாறிப் பிரவிகளைத் தரும் சுயநலச் செயல்களை சிலாகிப்பவை,சுகபோகம்,செல்வம்,செல்வாக்கு ஆகியவைகளைப் பெற உதவும் அற்பச்செயல்களை விபரிப்பவை.நறுமண மலர்களில் உள்ள கவர்ச்சி இந்த ஜனகரஞ்சகப் பேச்சுகளிலும் இருக்கும். ஆனால் இம்மலர்களைப் போலவே அவை விரைவில் வாடி உருகுலைத்துவிடும்.அப்பேச்சுகளில் மயங்கி உழல்பவைகளின் கதியும் அப்படித்தான் சுயநலம் சுகபோகம் என்று உழலும் மனிதர்கள் பரமாத்மாவிடம் ஈடுபடும் என்றும் உறுதியான் அறிவை பெற முடியாது.
அர்ச்சுனன்: சுகபோகம்செல்வம்,செல்வாக்கு அகியவைகளில் ஏற்படுபற்றுதலிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் பரமாத்மாவே வழி காட்டுங்கள்.
கண்ணன்: வேதங்கள் சத்துவம் ரஜஸ் தமஸ்(அடக்கம்,மிடுக்கு,வெறி) எனும் முக்குணங்களைக் கொண்ட உலகியல் வாழ்வை விவரிக்கின்றன.
அர்ச்சுனா! வேதங்கள் விவரிக்கும் ஆசாபாசங்கள் நிரம்பிய செயல்களில் நீ பற்றுதல் கொள்ளாதே ,விருப்பு,வெறுப்பு எனும் தளைகளிலிருந்து நீ தவித்திரு.சாசுவதமான பரமாத்துவத்தில் (உடல் அழிவற்றது.உடல் அழிவும் மாற்றமும் கொண்டது)எனும் திடலுணர்வுடன் நிலை பெற்று இரு.கிடைக்காத பொருளைப் பெறவும்.கிடைத்த பொருளைப் பாதுகாக்கவும் கவலைப்படாதே முயற்சிக்காதே.பரம்பொருளைப் பெறும் ஒரே இலட்சியத்தில் உறுதியுடன் நிலைத்திரு.!
அர்ச்சுனன்: அப்படி ஒரு இலட்சிய நிலைப்பாட்டில் திடமாக இருப்பவர்களுக்கு என்ன ஏற்படும் கண்ணா?
கண்ணன்: அர்ச்சுனா! பெரிய அழகில் குளம் ஒன்று உருவானபின் அதற்கு முன் பயன்படுத்திவந்த சிறியகுட்டை தேவையில்லாமல் போகிறது.அதன் மதிப்பும் மறைந்து விடுகிறது.அதெபோலத்தான் வேதங்களின் பரந்த தத்துவங்களையும் ,சாஸ்திரங்களின் போதனைகளிஅயும் நன்கு அறிந்த ஞானிகள் வாழ்ந்தும் துறந்தும் நிற்கும் மகாபுருஷர்கள்.இவர்களை ஜீவன் முத்தர் ( வாழ்ந்த நிலையிலேயே பற்றுதலின்றி இருக்கும் பெருமை பெற்றவர்கள்) என்பர்.இந்த மகான்கள் உலகியல் சுகபோகங்களுக்கும் செல்வம்,செல்வாக்கு போன்ற வைபவங்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.அவைகளை விரும்பவும் மாட்டார்கள்.
அர்ச்சுனன்: கண்ணபிரானே! நான் அந்த ஜீவன் முக்த நிலையைப் பெற என்ன செய்ய வேண்டும்?
கண்ணன்: கர்ம யோகத்தைக் கடைப்பிடி.செயலில் முனைப்புதான் கர்மயோகம் செயலின் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்திறன் பற்றியே சிந்தித்து முனைவது யோகம் .செயல்புரிவது உன் கடைமை பலனை எதிர் நோக்குவது அல்ல.செயல் முனைப்புதான் உனக்கு உரியது.மேலும் கர்மபலன்களுக்கு நீ காரணமாகதே அதாதவது நீ செயலாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும்.உன் உடல்,உள்ளம் அறிவு முதலியவற்றில் பற்றுதல் வைக்காதே.
அர்ச்சுனன்: அப்படியானால் நான் ஏன் செயலாற்ற வேண்டும்?
கண்ணன்: செயலாற்றாமல் இருப்பதிலும் நீ ஈடுபாடு கொள்ளக்கூடாது.பற்றுதல் எதிலும் இருக்கலாகாது.
அர்ச்சுனன்: அப்படியானால் நான் செயல் புரியமுடியும்?
கண்ணன்: செயலில் நிறை குறை வெற்றி தோல்வி ஆகியவற்றில் நடுநிலையுடன் இருத்தல் யோகம்” ஆகையால் தனஞ்சயா! நீ பற்றுதல்,விருப்பு வெறுப்பு இவைகளைப் புறக்கணித்து விட்டு சமநிலையில் நிலைத்திருந்து கர்மத்தை செய்!
அர்ச்சுனன்சமநிலையில் நிற்காமல் நான் செயல் புரிந்தால் என்ன ஆகும்?
கண்ணன்: விருப்பு -வெறுப்பற்ற சமநிலையுடன் செய்யாத செயல் இழிவையே தரும். தனஞ்சயா ! நீ சமநிலைசமபுத்தியை மேற்கொள். செயலின் விளைவை ( பயனை) விரும்புவன் அற்பன்.அவனது சுயநலபுத்தி செயலைவிட்டு பயனில் ஈடுபடுகிறது.பயனுக்கு அடிமையாகிறது.
அர்ச்சுனன்: கர்மபலனை விரும்புவன் அற்பன் என்றால் சிறந்தவன்( மேலானவன்) எவன்?
கண்ணன்: சமபுத்தி கொண்டவன் சிறந்த மனிதன். அவன் இந்த மானிட வாழ்கையிலேயே பாவ -புண்ணியயங்களுக்கு அப்பாட்பட்டவனாகிரான்.ஆகையால் அர்ச்சுனா! நீ சமநிலைசமபுத்தியில் திடமாக நிலைத்திரு.இதுதான் செயல்த்திறன்.
அர்ச்சுனன்சமபுத்தியின் விளைவு என்ன?
கண்ணன்: யோகம்” எனப்படும் சமபுத்தி,சமநிலைசமநிலை கொண்டமனீஷி( மெய்ஞானி) செயலின் பயனில் பற்றில்லாதவர்.அவர் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு உன்னதமான் அழியாப் பெரும் பதவியைப் பெறுவார்.
அர்ச்சுனன்: செயலின் பயனைத் துறந்த சமநிலையை நான் எப்படிப் பெறுவேன்,எப்போது உணர்வேன்?
கண்ணன்: அர்ச்சுனா! எப்போது உன் அறிவு மோகம் எனும் சக்தியைக் கடக்கிறதோ அப்பொதே உனக்குள் நீ உணர்ந்த கேள்விப்பட்ட யோகங்களிருந்து பற்றின்மை ஏற்பட்டுவிடும்.
அர்ச்சுனன்: வைராக்கியம் ஏற்பட்டபின் யோகம் எனும் சமநிலை எப்போது ஏற்படும்?
கண்ணன்: பலவையான் சாஷ்திரங்களின் சித்தந்தங்கள் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் சஞ்சலப்பட்டிருக்கும் உன் புத்தி உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு பரம்பொருளான் பரமாத்மாவிடம் திடமாக ஈடுபடும்போது உனக்கு யோகநிலை சித்திக்கும்.
அர்ச்சுனன்: யோகநிலை சித்திபெற்ற திடமதி கொண்ட மனிதனுக்கு என்ன் அடையாளங்கள்?
கண்ணன்:  பார்த்தா! சமநிலை பெற்றவர் மனத்திலுள்ள விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விடுவார் .தன்நிலையிலிருந்து தமக்குள்ளேயே மகிழிச்சி அடைகிறார்.அவர் ஸ்திதப்ராக்ம்ஜர்”(நிலையான் சமபுத்தி பெற்றவர்.)
அர்ச்சுனன்ஸ்திதபிரக்ஞன் எப்படிச் கருத்தை வெளியிடுவான்?
கண்ணன்: தம்பி! சாதரண மனிதர்களைப் போல் பேசுவதில்லை.சமபுத்தி-  சமநிலை கொண்டஞானி.அவருடைய செயலும் குறிப்பும் சீரிய கருத்துகளை வெளிப்படுத்தும்.அந்த ஸ்திதபிராக்ஞர் நிகழ்காலத்தில்வாழ்ந்து கொண்டிருந்தாலும் துன்பம்துயரம்சோதனைவிபத்து எனும் கேடுகள் ஏற்படும் போது வருந்துவதில்லை.சுகம்செளக்கியம்புக்ழ்செல்வம்முதலிய நலன்கள் கிட்டும்போது மகிழ்ச்சி கொள்ளுவதில்லை அந்த ஞானி  ஆசை,பயம்,பாசம்,குரோதம்,பகை ஆகிய இயல்புகளைக் கடந்தவராக இருப்பார்.
திடசிந்தனௌம் சீரீய கர்ய்த்துகளையும் கொண்ட அந்த சமபுத்திஸமநிலைச் சாதகரைத்தான் ஸ்திதபிரக்ஞர்என்று அழைப்பார்கள்.அவர் எல்லா நிலைகளிலும் செயல்களிலும் பற்றுதல் இல்லாதவர்.முன்வினைப் பயனாக அநுகூலமான் வாய்ப்பு வரும்போது மகிழ்சியடைய மாட்டார்.பிதிதிகூலமான சந்தர்ப்பம் ஏற்படும்போது வெறுப்படைய மாட்டார்.அவருடைய அற்வு திடமாக நிலைபெற்றிருக்கிறது.பரமாத்மாவோடு இணைய வேண்டுமென்கிற தீர்மானத்துடன் வாழும் அவர் சித்த புருஷ்ர்.
அர்ச்சுனன்: அந்த சித்த புருஷ்ர் எப்படி அமர்கிறார்?
கண்ணன்: அர்ச்சுனா! எப்படி ஆமை தனது நான்கு கால்களையும் கழுத்தையும் வாலையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடக்கிறதோ,அதே  போல கர்மயோகியான ஸ்திதபிரக்ஞர்” தம் ஜம்புலன்களையும் மனத்தையும் பெளதீக விஷயங்களிலிருந்து விலக்கி ,தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.
அர்ச்சுனன்: ஜம்புலன்களையும் ஒடுக்கி ஒருமுகப்படுத்துதலுக்கு நேரிய அடையாளம் எது?
கண்ணன்: ஜம்புலன்களையும் தம் இலக்கான விஷயங்களிலிருந்து ( அநுபவங்களிலிருந்து) ஒதுக்கி வைக்கும் தேகாபிமனியான மனிதனிடமிருந்து அந்த விஷயங்கள் விலகிவிடுகின்றன.ஆனால் சுவை உணர்வு கொண்ட போகரஸபத்தி ( சுவை உணர்வு) விலகுவதில்லை.ஆனால் பரமாத்மாவை அடையும் சித்த புருஷனின் சுகபோக புத்தி கூட விலகிவிடுகிறது.
அர்ச்சுனன்: ரஸபுத்தி எனப்படும் சுவையை நாடும் அறிவு இருப்பதால் என்ன கேடு?
கண்ணன்: ரஸபுத்தி இருப்பதால் விஷய சாதனங்களில் பற்றுக் கொண்ட மனிதன் எவ்வளவுதான் விவேக ஞானம் உள்ளவனாக இருந்தாலும்,குழப்பம் விளைவிக்கும் புலன்கள் அவனது மனத்தை வலுக் கட்டாயமாக விஸய அநுபவங்களில் ( உலகியல் இன்பத்தில்) ஈடுபட இழுத்துச் செல்லுகின்றன.
அர்ச்சுனன்ரஸபுத்தியை விலக்குவதற்கு என்ன செய்யவேண்டும்?
கண்ணன்: கர்மயோகி சாதகர் எல்லாப் புலன்களையும் அடக்கித் தம் வசத்தில் இருத்தி பரமாத்மாவாகிய என்னை தியானித்து சரணடைய வேண்டும்.என் மீது நம்பிக்கை வைத்து,வேறு சிந்தனை கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு தம் புலன்களை அடக்கி வசப்படுத்தியவரின் புத்திநிலை பெற்று விளங்கும்.
அர்ச்சுனன்: பரமாத்மாவே! உங்களைச் சணடையாமல் இருந்தால் என்ன ஆகும்?
கண்ணன்: என்னை சரணடையாமல் இருந்தால் புலன்கள் விரும்பும் விஷய அநுபவங்களில் சிந்தனை செல்லும். மனிதனுக்கு அவைகளில் ஈடுபாடு ஏற்படும் .அவைகளை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும்.
அர்ச்சுனன்ஆசை ஏற்பட்டபின் என்ன ஆகும்?
கண்ணன்: ஆசை வளரும். ஆசை நிறைவேறத் தடையோ தடங்கலோ ஏற்படும்போது வெறுப்பு மிகுந்த கோபம் ஏற்படும் பிறகு மதிமயக்கம்,மூடத்தனமெல்லாம் வளரும்.
அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகும்?
கண்ணன்: நல்ல சிந்தனை ,மனப்பக்குவம்,பகுத்தறியும் விவேகம் எல்லாம் விலகிவிடும்.பழைய பரிபக்குவ நினைவே இல்லாமல் போகும்.இதன்னல் புத்தி சக்தி குலையும் தொடர்ந்து மனிதன் அழிவைத்தான் எட்டுவான்.
அர்ச்சுனன்: ஸ்தித பிரக்ஞரின் நிலையை உணர்த்தினீர்கள் கேசவா! அவர் எப்பட்ய் நடந்து கொள்வார் என்பதைச் சொல்லுங்கள்?
கண்ணன்: தம்பி! நிலைபெற்ற பிரக்ஞையுள்ள சாதகரின்நடவடிக்கை செயல் வடிவில் இராது.கருத்து வெளிப்பாடாக இருக்கும். புலனடக்கம்,மனவடக்கம் கொண்டசாதனையாளர் அவர்,விருப்பு -வெறுப்புகளைக் கடந்தவர்.தம் வசமுள்ள புலன்கள் மூலம் உலகியல் அனுபவங்களில் ஈடுபட்டிருந்தாலும்உள்மனத்தின் திருப்தியுடன் வாழ்கிறார்.
அர்ச்சுனன்: உள்மனம் எனும் அந்தக்கரணத்தின் திருப்தியைப் பெற்றபின் என்ன ஆகும்?
கண்ணன்: அத்தகைய திருப்தி கொண்ட மனிதரின் எல்லாத் துயர்களும் நசித்து விடுகின்றன.அந்த சாதகரின் சமபுத்தி விரைவிலேயே பரமாத்மாவோடு நிலையாக இணைந்து விடுகிறது.
அர்ச்சுனன்: எவருக்கு புத்தி நிலைபெறுவதில்லை?
கண்ணன்: எந்த மனிதனின் மனமும் இந்திரியங்களும் அடங்கி இருக்கவில்லையோ .அவனிடம் நிலைபெற்றிருக்கும் சம புத்தி ஈராது.அவனுக்குத் தன் கடமை உனர்வில் பிடிப்பு இராது.கடமையில் திட்மான ஈடுபடு இல்லையேல் ,அமைதி கிட்டாது.அமைதியை இழந்த மனிதனுக்கு மகிழ்ச்சி ஏது?
அர்ச்சுனன்உலகியல் உழல்பவனிடம் புலன்கள் அடங்கி இராது.ஆனால் சாதகராக இருப்பவருக்கும் நிலையான் சமபுத்தி ஏற்படாமல் போவதற்கு என்ன காரணம்?
கண்ணன்: காரண்ம் புலனடக்கமும் மனவடக்கமும் இணைந்து வசப்பட்டு இராததுதான். நீரில் செல்லும் ஓடத்தை காற்று தன் திசையில் இழுத்துச் செல்வதைப் போலே ,சாதகரின் புலன்கள் தம் விஷயங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஏதாவது ஒரு புலன் சஞ்சலமான் மனத்துடன் இணைந்து விட்டால் போதும்.அந்த மனமே சாதகரின் புத்தியைக்குலைத்துவிடும்.சமநிலைகெட்டுவிடும்.
அர்ச்சுனன்: பின் எவருக்கு த்தான் புத்தி நிலைபெறுகிறது?
கண்ணன்: வீரத்திருமகனே! ஜம்புலன்களும் எவருக்கு முழுவதும் கட்டுபப்ட்டு இருக்கின்றனவோஎவருடைய உள்ளம் பெளதீக விஷய அநுபவங்களில் பற்றுதலின்றி இருக்கிறதோஅத்தகைய சாதகரின் பிரக்ஞை( பகுத்தறிவு) ஒரே குறிக்கோளில் நிலைபெற்று இருக்கிறது.
அர்ச்சுனன்: எவருக்கும் புலனடக்கம் இல்லையோ அத்தைகைய சாமானிய மனிதருக்கும்புலனடக்கம் உள்ள சாதகருக்கும் உள்ள வெளிப்படையான வித்தியாசம் என்ன?
கண்ணன்: புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமனிய மனிதர் பரமாத்தாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாமல் மதிமயங்கி மோக நித்திரையில் ஆழ்ந்திருப்பார்.அக்காலம் அவர்களுக்கு இருள் சூழ்ந்த இரவு ,அத்தகைய இராக்காலத்தில் அடக்கம் மிக்க ஞானிகள் விழித்திருப்பார்.பரமத்ம தத்துவதத்தில் இலயிருத்திருப்பார்கள். சாமானிய மனிதர்கள் விழிப்புணர்வுடன் சுகபோகங்களை அநுபவித்தும் பொருள் சம்பாத்தித்தும் பொழுது போக்கும் காலத்தில்ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் மூழ்கியிருப்பார்கள்,இதைதான்,சாமானியயர்கள் மதிமயங்கி உறங்கும் இரவு ஞானிகளுக்குப் பகல் என்றும் சாமனியர்கள் அமைதி காணும் இரவு என்றும் சொல்வார்கள்.
அர்ச்சுனன்: அப்படியானால் அடக்கம் உள்ள சாதகர்களுக்கு எதிரில் பெளதீக சுகபோகப் பொருள்கள் வருவதில்லையா?
கண்ணன்: வருவதுன்டு இதனால் அடக்கமுள்ள சாதகர் சஞ்சலம் அடைவதில்லை.எப்படிக் கம்பீரமான் கடல் தம்மிடம் வந்து சங்கமிக்கும் நதிகளால் எந்த மாற்றத்தையும் பெறுவதில்லையோ,அதே போலத்தான் அடக்கமுடையோர் எதிரில் உலகியல் சுகபோகப் பொருள்கள் எதிர்ப்படுகின்றன.இதனால் அவர்களூடைய மனம் பேதலிப்பதில்லை.இத்தகைய மாமனிதர்கள் தான் பரமாத்ம தத்துவமான பரம சாந்தியைப் பெறுகிறார்கள்.போக விசயங்களில் ஈடுபாடு கொண்ட சம்சாரிகளுக்கு இந்தப் பேரமைதி கிட்டாது.
அர்ச்சுனன்: ஆசாபாசம் உள்ள சம்சாரிகளுக்கு ( சாந்தி) எப்படிக் கிட்டும்?
கண்ணன்: சுகபோகங்களில் ஏற்படும் ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விட்டால் அமைதி பெறலாம்.எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விடுவதோடு தான் தனது எனும் செருக்ககையும் துறந்து வாழ்கிறனோ,அவனுக்கு சாந்தி கிடைக்கும்.
அர்ச்சுனன்: புருஷோத்மரே!செருக்கைத் துறந்த சாதகரின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?
கண்ணன்: செருகொழிந்த சாதகரின் நிலைப்பாடு பிரும்பத்தில் ஈடுபட்டிருக்கும் பார்த்தா! இதைத்தான் பிரும்ம நிலை என்பர்.இந்நிலையை எட்டியதும் அந்த சாதக மனிதர் எக்காலத்திலும் மோக பாசத்தில் சிக்கமாட்டார்.தம் இறுதிக் காலத்திலும் பிரும்ம நிலையில் இருப்பவர்.நிர்வாண பிரும்மம் எனும் பரம சாந்தி நிலையில் முக்தி பெறுகிறார்.

புதன், 21 டிசம்பர், 2016

ருத்ரன் - சிவன் (சிவம், நடராஜா) - மஹேச்வரன்

த்ரிமூர்த்திகள், அவர்களுக்கும் ஆதாரமான பரப்ரஹ்மம் என்று குருவைக் கொண்டாடும் விஷயமாகக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாமென்று ஆரம்பித்தேன். முதல் மூர்த்தியான ப்ரஹ்மா விஷயத்தின் அலசல் நீண்டு விட்டது.
த்ரிமூர்த்திகளை முதலில் சொல்லியிருக்கிறது. குரூர் - ப்ரஹ்மா, குரூர் - விஷ்ணு, குரூர் தோவோ மஹேச்வர:
ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்ரர் என்று சொல்வார்கள். ப்ரஹ்ம - விஷ்ணு - சிவன் என்பதில்லை. சிவபக்தர்கள் சிவன் மும்மூர்த்திகளில் ஸம்ஹார மூர்த்தியாக இருப்பவன் அல்ல என்பார்கள். சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்றுதான் ருத்ரன் என்பார்கள். சிவன்தான் பரமாத்மா. ஸரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆண்பாலில் சிவன் என்று சொல்லாமல் அஃறிணையாக சிவம் என்றே சொல்வார்கள். அந்த சிவம்தான் ஸகல க்ருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள். ஸகல க்ருதயமும் அடங்கிப்போன சாந்தமும் அதுதான். அதிலிருந்தே லோக வ்யவஹாரார்த்தம் ஸ்ருஷ்டி - vFF - ஸம்ஹார க்ருதயங்களைச் செய்யும் ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்ரர் தோன்றுவது. சைவத்தில் - சாகத்திலும்தான் - இந்த மூன்றோடு இன்னும் இரண்டு க்ருதயங்கள். பஞ்ச க்ருதயம் என்பதாக. திரோதானம் அல்லது திரோபவம் என்பது ஒன்று. அதுதான் மாயை. லோகத்தை எதிலிருந்து எப்படி உண்டாக்கினான்?அதுதான் புரியவே மாட்டேனென்கிறது. ஏதோ ஒரு மாயா சக்தியினால் இப்படி எல்லாவற்றையும் செப்பிடு வித்தை காட்டுகிறான். அதுதான் திரோதானம். மும்மூர்த்திகளின் கார்யங்களுக்கும் அடிப்படையானது அதுதான். பஞ்ச க்ருதயத்தில் பாக்கியிருப்பது 'அநுக்ரஹம்'எப்படியோ ஜீவனுக்கு கர்மா என்ற ஒன்று ஏற்பட்டபின் அதை அநுபவித்தால்தானே தீர்க்கமுடியும்?அதற்கு 1. சரீரம், 2. அதன் புறக்காரணம் மட்டுமின்றி அகக் காரணம் (மனஸ், புத்தி முதலியவை) 3. இவற்றை வைத்துக்கொண்டு வினையை அறுவடை செய்கிற களமாக உள்ள இந்த ஜகத் என்பது. 4. அறுவடையை அநுபவிப்பது என்பது தேவையாயிருக்கின்றது. (முறையே) தநு, கரணம், புவநம், போகம் என் ¢று சொல்லும் இந்த நாலையும் பரமாத்மா கொடுப்பதுதான் அநுக்ரஹம். இது சின்ன அநுக்ரஹம். பெரிய அநுக்ரஹம், கடைசீயில் இதெல்லாவற்றிலிருந்தும், அதாவது தாரோதானத்தினால் உண்டான மாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷபதத்தைத் தருவதுதான். நடராஜாவின் குஞ்சிதபாதம் அந்தப் பதத்தைத்தன் தருகிறது. திருவடி என்று அதற்கு ஏற்றம்.
நடராஜாவின் நாட்டியத்திற்கு பஞ்சக்ருத்ய பரமானந்தத் தாண்டவம் என்று பெயர். ஒரு கையில் அவர் பிடித்துக் கொண்டிருக்கிற டமருகத்தின் சப்தத்தினால்தான் ஸ்ருஷ்டி உண்டாகிறது. அபயஹஸ்தத்தினால் 'ஸ்திதி'என்ற பரிபாலனம் செய்கிறார். இன்னொரு கையிலிருக்கும் அக்னியால் ஸம்ஹாரம் பண்ணுகிறார். முஸலகனின் மேலே ஊன்றியிருக்கிற அவருடைய வஸ்து பாதத்தால் திரோதான க்ருத்யத்தை நடத்துகிறார். முடிவாக, குஞ்சித பாதம் என்ற இடது திருவடையைத் தூக்கிக் காட்டி, இதைப் பிடித்துக் கொண்டால் அதுதான் மோக்ஷ£நுக்ரஹம் எனறு தெரிவிக்கிறார்.
நடராஜா சிவம் என்ற பரமாத்மாவாக, ஸகல கார்ய காரண மூலமாக இருப்பவர். அவரிடமிருந்து ஒவ்வொரு கார்யத்திற்கு ஒவ்வொரு மூர் ¢த்தி வருகிறார். இப்படி வரும்போது ஸ்ருஷ்டி - vFF - ஸம்ஹாரத்திற்கு ப்ரஹ்ம - விஷ்ணு ருத்திரர்கள் இருப்பதுபோல திரோபவ, அநுக்ரஹ கர்த்தாக்களையும் இரண்டு மூர்த்திகள் இருக்கவேண்டுமல்லவா?திரோபவ கர்த்தாவுக்குத்தான் ஈச்வரன் என்று பெயர்.
நடைமுறையிலும், இதர சஸ்திரங்களிலும் ஈச்வரன் என்பதற்கு என்ன அர்த்தம் கொடுத்தாலும், சைவ சாஸ்திரப்படி ஈச்வரன் என்றால் திரபாவம் என்கிற மாயையைச் செய்யும் மூர்த்தி என்றே அர்த்தம். வெறுமே ஈச்வரன் என்று சொல்லாமல் மஹேச்வரன் என்பார்கள். அநுக்ரஹ கர்த்தாவுக்கு ஸதாசிவன் என்று பேர்.
சுருங்கச்சொன்னால், சைவ சாஸ்திரப்படி, சிவம் என்ற பரமாத்ம வஸ்து ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்ர - மஹேச்வர - ஸதாசிவர்களைக் கொண்டு ஸ்ருஷ்டி - vFF - ஸம்ஹார - திரோதான - அநுக்ரஹங்கள் என்ற பஞ்ச க்ருத்யங் ¢களைச் செய்கிறது. சாக்தத்தில் சிவத்துக்குப் ¢ பதில் சக்தியைப் பஞ்சக்ருத்ய பராயணா என்று சொல்லியிருக்கிறது.
ருத்ரன் ஸம்ஹார கர்த்தா. (குருர் ப்ரஹ்மா) ச்லோகத்திலோ "மஹேச்வர;" என்று சொல்லியிருக்கிறது. "குரூர் - தேவோ - மஹேச்வர:"ஆனாலும் இங்கே மஹேச்வரன் என்பதைத் தீரோதாரனகர்த்தா என் ¢று அர்த்தம் பண்ணிக் கொள்ளாமல் ஸம்ஹாரகர்த்தா என்று அர்த்தம் பண்ணிக் கொள்வதுதான் பொருத்தம். முதலில் ப்ரம்மா, விஷ்ணு என்று ச்ருஷ்டி, ஸ்த்தி கர்த்தாகளைச் சொன்னதால் அடுத்து ஸம்ஹார கர்த்தாவைச் சொல்வதுதானே பொருத்தம்?சைவ சாஸ்திரப்படி நுணுக்கமாகப் போகாமல் ஸாதாரணமாகச் சிவம், சிவன், ஈச்வரன், மஹேச்வரன், ருத்ரன் என்ற எல்லாவற்றையும் ஒருவனுக்கே பேராகச் சொல்வதுபோலவே இங்கேயும் சொல்லியிருக்கிறதென்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

சனி, 17 டிசம்பர், 2016

இரண்டாவது அத்தியாயம் – ஸாங்க்ய யோகம்

1.ஸஞ்ஜயன் கூறுகிறார் – “அவ்விதம் இரக்கம் நிறைந்து நீர் நிரம்பிக் கலங்கிய கண்களுடன் சோகத்தோடு கூடிய அந்த அர்ஜுனனிடம் பகவான் மதுசூதனன் இவ்வாறு கூறினார்.”

2. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “அர்ஜுனா! தகாத சமயத்தில் இந்த மோகம் எந்தக் காரணத்தினால் உன்னை வந்தடைந்தது ? ஏனெனில், இது சான்றோரால் கடைப்பிடிக்கப் படாதது; சுவர்க்கத்தை அளிக்காதது; மேலும் புகழையும் தரவல்லதன்று.

3. அர்ஜுனா! அலியின் தன்மையை அடையாதே; உனக்கு இது பொருத்தமானதன்று. பரந்தபா! (எதிரிகளை வாட்டுபவனே!) இழிந்த உள்ளத்தின் தளர்ச்சியை விடுத்துப் போருக்காக எழுந்து நில்.”

4. அர்ஜுனன் கூறுகிறார் – “மதுசூதனா! நான் போர்க்களத்தில் எவ்வாறு அம்புகளினால் பாட்டனார் பீஷ்மரையும், ஆசார்யர் துரோணரையும் எதிர்த்துப் போரிடுவேன்? ஏனெனில், பகைவர்களை அழிப்பவனே! அவர்கள் இருவருமே பூஜிக்கத்தக்கவர்கள்.

5. மேன்மை பொருந்திய ஆசார்யர்களைக் கொல்வதைவிட, இவ்வுலகில் பிச்சையெடுப்பதால் கிடைக்கும் அன்னத்தை உண்பதுகூட மேன்மையைத் தரும். ஏனெனில், ஆசார்யர்களைக் கொன்றாலும் இவ்வுலகில் இரத்தம் கலந்த செல்வம், காம்ய வஸ்துக்கள் – இவற்றின் வடிவிலுள்ள போகங்களைத்தான் அனுபவிக்கப் போகிறேன்.

6. போரிடுவதா, வேண்டாமா என்ற இவ்விரண்டில் நமக்கு எது சிறந்தது? அல்லது நாம் அவர்களை வெற்றி கொள்வோமா? அல்லது நம்மை அவர்கள் வென்றுவிடுவார்களா? இதையும் அறியோம். எவர்களைக் கொன்று நாம் வாழக் கூட விரும்பவில்லையோ, நம்மவர்களான அந்தத் திருதராஷ்டிர குமாரர்களே நம் முன்னே நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.

7. கோழைத்தனத்தினால் சீரழிந்த ஸ்வபாவம் கொண்டவனும், தர்ம விஷயத்தில் குழம்பிய மனதுடையவனும் ஆன நான் உங்களிடம் கேட்பதென்னவென்றால், எந்தச் சாதனை உறுதியாக மேன்மை பயக்கக்கூடுமோ, அதை எனக்குக் கூறுங்கள். நான் உங்களுடைய சீடன். ஆகவே, உங்களைச் சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள்.

8.ஏனெனில், பூவுலகில் எதிரிகளற்ற தனதானியங்கள் நிறைந்த ராஜ்யத்தையும், தேவர்களுக்கு அதிபதியாக இருப்பதையும் அடைந்தாலும் கூட, எது என்னுடைய புலன்களை வாடவைக்கின்ற சோகத்தைப் போக்கடிக்குமோ, அதை நான் காணவில்லை.”

9. ஸஞ்ஜயன் கூறுகிறார் – அரசே! உறக்கத்தை வென்ற அர்ஜுனன் அந்தர்யாமியான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் இவ்வாறு கூறிவிட்டுப் பின் ஸ்ரீகோவிந்தனிடம் ‘போர் புரிய மாட்டேன்’ என்று தெளிவாகக் கூறி மௌனமாகிவிட்டார்.

10. பரதகுலத்தோன்றலே! திருதராஷ்டிரரே! அந்தர்யாமியான ஸ்ரீகிருஷ்ணன் இரண்டு படைகளுக்கும் நடுவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் சிரித்தார்போல இந்த வார்த்தைகளைக் கூறினார்.

11. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “நீ துக்கப்படத்தகாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய். மேலும், பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய். ஆனால், உயிர் போனவர்களுக்காகவும், உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை.

12. இவ்விதம் நான் எப்பொழுதும் இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை; நீயும் இருந்ததில்லை; இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை; இனி மேலும் நாம் இருக்கப் போவதுமில்லை என்பதும் இல்லை.

13. எப்படி ஜீவாத்மாவுக்கு இந்த உடலில் இளமையும் வாலிபப்பருவமும் முதுமையிம் வருகின்றனவோ, அப்படியே வேறு உடலும் வந்து சேர்கிறது. அவ்விஷயத்தில் தீர புருஷன் கலங்குவதில்லை.

14. குந்தியின் மைந்தனே! தட்பவெப்பம் மற்றும் சுகதுக்கங்களைக் கொடுக்கக்கூடிய புலன்களுடன் போக விஷயங்களின் சேர்க்கை உண்டாகி அழிபவை; அநித்தியமானவை. ஆகவே, பாரதா! நீ அவற்றைப் பொறுத்துக்கொள்.

15. ஏனெனில், புருஷர்களிற் சிறந்தவனே! சுகதுக்கங்களைச் சமமாக ஏற்கின்ற எந்த தீரனான மனிதனை, புலன்கள் மற்றும் போக விஷயங்களின் சேர்க்கை கலங்க வைப்பதில்லையோ, அவன் மோட்சத்திற்குத் தகுதி பெறுகிறான்.

16. இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை. மேலும், உண்மையாக இருப்பதற்கு இல்லாமை என்பதும் இல்லை. இந்த இரண்டின் தத்துவமும் தத்துவ ஞானிகளால் கண்டறியப்பட்டது.

17. அழிவற்றதுதான் என்று அதை அறிந்துகொள். எதனால் காணப்படும் பொருட்கள் அனைத்தும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அழிவற்றதற்கு அழிவை உண்டாக்குவதற்கு எவரும் ஆற்றல் பெற்றவரல்லர்.

18. அழிவற்ற, விளக்க முடியாத, நித்தியமான ஜீவாத்மாவினுடைய இந்த அனைத்து உடல்களும் அழியக்கூடியவைகளாகக் கூறப்பட்டுள்ளன. ஆகவே, பரதகுலத்தோன்றலே! அர்ஜுனா! நீ போர் புரிவாயாக

19. எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைக் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ, அந்த இருவருமே (உண்மையை) அறியாதவர்கள். ஏனெனில், இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை.

20.இந்த ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை; அன்றியும் இறப்பதும் இல்லை. அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏற்படக்கூடியது என்பதும் இல்லை. ஏனெனில் இந்த ஆத்மா பிறப்பற்றவன்; நித்தியமானவன்; எக்காலத்திலும் உள்ளவன்; பழைமையானவன். உடல் கொல்லப்படும்போதும் இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.

21. பிருதையின்(குந்தியின்) மைந்தனே, அர்ஜுனா! எந்த மனிதன் இந்த ஆத்மாவை அழிவற்றவன்; நித்தியமானவன்; பிறப்பற்றவன்; மாறுதலற்றவனென்று அறிகிறானோ அவன் எவ்வாறு யாரைக் கொல்லச் செய்கிறான்? எப்படி யாரைக் கொல்கிறான்?

22.எப்படி மனிதன் நைந்துபோன பழைய துணிகளை நீத்துவிட்டு, வேறு புதிய துணிகளை எடுத்துக் கொள்கிறானோ, அவ்வாறே ஜீவாத்மா நைந்துபோன பழைய உடல்களை நீத்துவிட்டு, வேறு புதிய உடல்களை அடைகிறான்.

23.இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை; இவனை நெருப்பு எரிப்பதில்லை; இவனைத் தண்ணீர் நனைப்பதில்லை; மேலும், காற்று உலரவைப்பதில்லை.

24.இந்த ஆத்மா வெட்டுப்பட முடியாதவன்; எரிக்கப்பட முடியாதவன்; நனைக்கப்பட முடியாதவன்; மேலும் சந்தேகமின்றி உலர்த்தப்பட முடியாதவன்; மற்றும் இந்த ஆத்மா நித்தியமானவன்; எங்கும் நிறைந்தவன்; இயக்கமற்றவன்; ஸ்திரமாக இருப்பவன்; சாசுவதமானவன்.

25. இந்த ஆத்மா புலன்களுக்குப் புலப்படாதவன்; மனத்தால் சிந்திக்க முடியாதவன்; மேலும், மாறுதல் இல்லாதவன் என்று கூறப்படுகிறது. ஆகையால், அர்ஜுனா! இந்த ஆத்மாவை மேலே கூறியவாறு அறிந்துகொண்டு, நீ வருத்தப்படுவது உசிதமில்லை.

26. ஆயினும், இந்த ஆத்மாவை எப்பொழுதும் பிறந்து கொண்டே இருப்பவன்; அவ்வாறே எப்பொழுதும் இறந்து கொண்டே இருப்பவன் என்று நீ கருதினாலும் கூட, நீண்ட கைகளை உடையோனே! நீ இவ்வாறு வருத்தப்படுவது நன்றன்று.

27.ஏனெனில், (இதன்படி) பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயமானது; இறந்தவனுக்கும் பிறப்பு நிச்சயம். ஆகவே தவிப்பதற்கான உபாயமே இல்லாத இந்த விஷயத்தில் நீ துயரப் படுவது தக்கதன்று.

28. அர்ஜுனா! எல்லா உயிரினங்களும் பிறப்பிற்குமுன் தென்படாதனவாக இருந்தன. மேலும், இறப்பதற்குப் பின்னும் தென்படாமலே போகக்கூடியன. நடுவில் மட்டுமே தென்படுகின்றன. பிறகு இந்நிலையில் ஏன் வருத்தப்பட வேண்டும்?

29. யாரோ ஒரு மஹாபுருஷர்தான் இந்த ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கிறான். மேலும், அவ்வாறே வேறு ஒரு மஹாபுருஷன்தான் இந்தத் தத்துவத்தை ஆச்சரியமாக வர்ணிக்கிறான். மற்றும் வேறொரு தகுதி பெற்றவன்தான் ஆத்மாவை ஆச்சரியமாகக் கேட்கிறான். மேலும், யாராவது ஒருவன் அப்படிக் கேட்டாலும் ஆத்மாவை அறியவே மாட்டான்.

30. அர்ஜுனா! இந்த ஆத்மா எல்லோருடைய உடலிலும் எப்பொழுதும் கொல்லப்பட முடியாதவன். ஆகவே, எல்லா உயிரினங்களுக்காகவும் நீ வருந்துவது தகுந்ததன்று.

31.அவ்வாறே தன்னுடைய தர்மம் என்று பார்த்தாலும் நீ பயப்படக்கூடாது. ஏனெனில், க்ஷத்திரியனுக்குத் தர்ம சம்மதமான போரைக் காட்டிலும் வேறு ஒரு மேன்மை தரும் கடமை கிடையாது.

32.பார்த்தா! தானாகவே நேர்ந்திருக்கிறதும் திறந்து வைக்கப்படுள்ளதுமான சுவர்க்கவாயில் வடிவான இத்தகைய யுத்தத்தை பாக்கியமுடைய க்ஷத்திரியர்கள்தான் அடைகிறார்கள்.

33. ஆகவே, இந்தத் தர்மத்தோடு கூடிய யுத்தத்தை நீ செய்யவில்லையானால், அப்போது ஸ்வதர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை அடைவாய்.

34. மேலும், அனைவரும் உன்னுடைய நீண்ட காலம் இருக்கக் கூடிய இகழ்ச்சியைப் பற்றிக்கூடப் பேசுவார்கள். மேலும், கௌரவம் உடையவனுக்கு இகழ்ச்சி மரணத்தைக் காட்டிலும் அதிக துன்பத்தைக் கொடுக்கக் கூடியது.

35. மேலும், எவர்களுடைய பார்வையில் நீ முன்னர் மிகவும் பெருமை பெற்றவனாக இருந்து விட்டு, இப்பொழுது தாழ்வை அடைவாயோ, அந்த மகாரதிகள் உன்னை பயத்தினால் பின்வாங்கியவனாக நினைப்பார்கள்.

36.உன்னுடைய எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்தித்துப் பலவிதமான கூறத்தகாத வார்த்தைகளையும் கூறுவார்கள். அதைவிட அதிகத் துயரம் கொடுக்கக் கூடியது வேறு என்ன இருக்கும்?

37. கொல்லப்பட்டாலோ சுவர்க்கத்தை அடைவாய்; வெற்றி பெற்றாலோ புவியை அனுபவிப்பாய்.ஆகையினால், அர்ஜுனா! நீ யுத்தத்தின் பொருட்டு உறுதியாக நிச்சயித்துக் கொண்டு எழுந்திரு.

38.வெற்றி-தோல்வியையும், லாப-நஷ்டங்களையும், சுக-துக்கங்களையும், சமமாகக் கருதி, அதற்குப்பின் யுத்தத்திற்குத் தயாராவாயாக. இவ்விதம் யுத்தம் செய்வதால் நீ பாபத்தை அடையமாட்டாய்.

39.பார்த்தா! இந்த புத்தி உனக்கு ஞானயோக விஷயத்தில் கூறப்பட்டது. இனி, இதனைக் கர்மயோக விஷயத்தில் கேள். அந்த புத்தியோடு கூடியவனாக ஆகி கர்மபந்தத்தை முழுமையாக விலக்கி விடுவாய்; அதாவது, முற்றிலும் அழித்துவிடுவாய்.

40. இந்தக் கர்மயோகத்தின் ஆரம்பம், அதாவது விதை அழிவது என்பது இல்லை; நேரெதிரான விளைவும் இல்லை. இந்தக் கர்மயோகம் என்கிற தர்மத்தைச் சிறிதளவு கைக்கொள்வதும் கூட பெரியதான பிறப்பு, இறப்பு என்ற பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.

41.அர்ஜுனா! இந்தக் கர்மயோகத்தில் தீர்மானமான புத்தி ஒன்றுதான் இருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்திலும் நிச்சய புத்தி இல்லாத, விவேகமற்ற, பயனில் ஆசையுள்ள மனிதர்களுடைய புத்திகள் நிச்சயமாகப் பலநோக்கங்களுடையனவாகவும் முடிவற்றவையாகவும் இருக்கின்றன.

42.43.44. அர்ஜுனா! போகங்களில் மூழ்கியவர்களும், சுவர்க்கமே மேலானது என்று நினைப்பவர்களும் கர்மங்களின் பயன்களைப் புகழ்ந்துரைக்கும் வேதவாக்கியங்களிலேயே பிரியம் வைத்து வேறொன்றும் இல்லை என்று வாதம் செய்கின்ற அறிவிலிகள், கர்மங்களின் பயனான பிறவியை அளிக்கின்ற போகங்கள் மற்றும் செல்வங்கள் பெறுவதற்குரிய பல வகையான கர்மங்களைக் கூறுகின்ற மலர்போலக் கவர்ச்சியுள்ள எந்தப் பேச்சை எடுத்துப் பேசுகிறார்களோ, அந்தப் பேச்சினால் மனம் அபகரிக்கப்பட்டு போகத்திலும் செல்வத்திலும் மிகுந்த பற்றுள்ளவர்களுக்குப் பரமாத்மாவிடம் நிச்சயமான கருத்துள்ள புத்தி நிலைபெற்று இருப்பதில்லை.

43.அர்ஜுனா! மேலே கூறியபடி வேதங்கள் முக்குணங்களின் செயல்களான போகங்களையும், அவற்றின் சாதனை முறைகளையும் பற்றிக் கூறுபவை. ஆகவே, நீ அந்த போகங்களிலும் அவற்றின் சாதனங்களிலும் பற்று கொள்ளாதவனாக, மகிழ்ச்சி-துயரம் முதலிய இரட்டைகளுக்கு ஆட்படாதவனாக, நித்தியப் பொருளான பரமாத்மாவிடம் நிலைபெற்று யோகக்ஷேமத்தை – பொருள் சேர்ப்பது, காப்பது என்பதை – விரும்பாதவனாகத் தனக்கு வசப்பட்ட மனம் உடையவனாக ஆகக்கடவாய்.

44.எல்லாப் புறங்களிலும் நிறைந்த நீர்நிலையை அடைந்தபிறகு, சிறிய நீர்நிலையினால் மனிதனுக்கு எவ்வளவு பயன் இருக்கிறதோ, பிரம்மத்தைத் தத்துவரீதியாக அறிந்த பிராமணனுக்கு அனைத்து வேதங்களினாலும் அவ்வளவு பயன்தான் கிடைக்கும். (பெரிய நீர்நிலையை அடைந்தவனுக்குக் கிணறு, குளம் போன்ற சிறிய நீர்நிலைகள் தேவையற்றுப் போவதுபோல் பிரம்மானந்தத்தைப் பெற்ற பிறகு, ஆனந்தத்தைப் பெறுவதற்காக வேதங்கள் தேவைப்படுவதில்லை.)

45. உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பயன்களில் ஒருக்காலும் உரிமையில்லை. ஆகவே, நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே. மேலும், உனக்குக் கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது.

46. அர்ஜுனா! பற்றினைத் துறந்து மேலும் கைகூடுவது, கைகூடாமலிருப்பது என்பதில் சமநோக்கு உடையவனாக இருந்து, யோகத்தில் நிலைபெற்றுச் செய்யவேண்டிய கர்மங்களைச் செய். சமபாவனைதான் யோகம் என்று கூறப்படுகிறது.

47. இந்தச் சமபாவனையான புத்தியோகத்தைக் காட்டிலும் பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. ஆகவே, அர்ஜுனா! சமபுத்தியில் தஞ்சம் அடைவாய். ஏனெனில், பலனுக்குத் தம்மைக் காரணமாக்கிக் கொள்கிறவர்கள் இரக்கத்துக்கு உரியவர்கள்.

48. சமபுத்தியுடையவன், புண்ணியம், பாவம் என்ற இரண்டையும் இவ்வுலகிலேயே விட்டு விடுகிறான். அதாவது, அவற்றில் இருந்து விடுபடுகிறான். இதனால், நீ சமத்துவ யோகத்தில் ஈடுபட்டிரு. இந்தச் சமத்துவரூப யோகம்தான் கடமையை ஆற்றுவதில் திறமையாகும். கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.

49. ஏனெனில் சமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்தினால் உண்டாகும் பயனைத் தியாகம் செய்து, பிறப்பு என்ற பந்தத்தில் இருந்து விடுபட்டு, மாறுதல்கள் அற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.

50.எப்பொழுது உன்னுடைய புத்தி மோகம் என்ற சேற்றை முற்றிலுமாகக் கடந்து விடுகிறதோ, அப்பொழுது நீ கேட்டது பற்றியும், கேட்கப்படுகிறவை பற்றியும், இவ்வுலக-பரலோகங்களில் ஏற்படும் அனைத்துப் போகங்களில் இருந்தும் வைராக்கியத்தை அடைவாய்.

51. பற்பல வசனங்களைக் கேட்டுச் சஞ்சலமாகியுள்ள உன்னுடைய புத்தி, எப்பொழுது பரமாத்மாவிடம் அசையாமல் மேலும் திடமாக நிலைபெறுகிறதோ, அப்பொழுது யோகத்தை அடைவாய் – நீ பரமாத்மாவிடம் நிரந்தரமாக ஒன்றிவிடுவாய்.”

52. அர்ஜுனன் கேட்கிறார் – “கேசவா! சமாதியில் நிலைபெற்றுப் பரமாத்மாவை அடைந்த ஸ்திரபுத்தி உள்ளவனின் இலக்கணம் என்ன? இந்த ஸ்திரபுத்தியுள்ள புருஷன் எப்படிப் பேசுவான்? எப்படி உட்காருவான்? மேலும் எப்படி நடப்பான்?”

53.ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ அர்ஜுனா! எப்பொழுது இந்த மனிதன் மனத்திலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ, மேலும் ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆன்ந்தமாக இருக்கிறானோ, அப்பொழுது அவன் ஸ்திதப்ரக்ஞன் என்று கூறப்படுகிறான்.

54. துன்பங்கள் நேர்கையில் எவனுடைய மனம் கலங்குவது இல்லையோ, சுகங்களை அடையும்போது அவற்றில் சிறிதுகூட ஆசை கொள்வதில்லையோ, எவனுக்கு விருப்பு, பயம், கோபம் ஆகிய இவை முற்றும் அற்றுப்போயினவோ,அத்தகைய முனிவன் ஸ்திதப்ரக்ஞன் என்று குறப்படுகிறான்.

55. எவன் ஒருவன் அனைத்திலும் பாசம் வைக்காமல் அந்தந்த நல்ல அல்லது கெட்ட பொருளை அடைந்து மகிழ்வதுமில்லையோ வெறுப்பதுமில்லையோ, அவனுடைய புத்தி ஸ்திரமானது.

56. ஆமை, எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது உறுப்புக்களை உள்ளிழுத்துக் கொள்வது போல, எப்போது இந்த மனிதன் புலன் நுகர்ப் பொருட்களில் இருந்து புலன்களை முற்றிலும் இழுத்துக் கொள்கிறானோ, அப்போது அவனுடைய புத்தி ஸ்திரமானது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

57. புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன்நுகர் பொருட்கள் மட்டுமே விலகுகின்றன. ஆனால், அவற்றில் தங்கியுள்ள பற்று விலகுவதில்லை. இந்த ஸ்திரப்ரக்ஞனுக்கோ பரமாத்மாவைத் தரிசித்தப் பிறகு, அப்பற்றும் விலகிவிடுகிறது.

58. அர்ஜுனா! பற்று அழியாததால் கலக்குபவையான புலன்கள் முயற்சியுள்ள புத்திசாலியான மனிதனின் மனத்தைக்கூட பலவந்தமாக இழுத்துச் சென்று விடுகின்றன.

59. அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒருமுகப் படுத்திய சித்தமுடையவன் என்னையே பரமகதியாகக் கொண்டு தியானத்தில் அமரவேண்டும். ஏனெனில், எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்ரனவோ, அவனுடைய புத்தி ஸ்திரமாகிறது.

60. புலன்நுகர்ப் பொருட்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கிற மனிதனுக்கு, அவ்விஷயங்களில் பற்று ஏற்படுகிறது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகிறது; ஆசையிலிருந்து (ஆசைக்கு இடையூறு வருவதனால்) கோபம் உண்டாகிறது.

61. கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படும்; அறிவின்மையால் நினைவு தடுமாற்றம் உண்டாகிறது; நினைவு தடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தின் அழிவு உண்டாகிறது; விவேகம் அழிவதனால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகிறான்.

62. ஆனால், தன்வசப்பட்ட மனதுடைய சாதகன் விருப்பு-வெறுப்புகளின்றித் தன்னால் வசப்படுத்தப்பட்ட புலன்கள் மூலம் போக விஷயங்களில் சஞ்சரித்துக் கொண்டு உள்ளத் தெளிவை அடைகிறான்.

63. உள்ளத்தெளிவு ஏற்பட்டுவிட்டால், இவனுடைய எல்லா துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். தெளிவடைந்த மனமுள்ள கர்மயோகியின் புத்தி விரைவிலேயே எல்லா விஷயங்களில் இருந்தும் விலகிப் பரமாத்மா ஒன்றிலேயே நன்கு ஸ்திரமாகி விடுகிரது.

64. மனத்தையும், புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு நிச்சயமான புத்தி இருக்காது. உறுதியான புத்தியற்றவனுக்கு மனத்தில் பாவனையும் தோன்றாது. அவ்வாறே, பாவனையற்றவனுக்கு அமைதியும் கிடைக்காது. அமைதியற்றவனுக்குச் சுகம் ஏது?

65. ஏனெனில், நீரில் போய்க் கொண்டிருக்கும் ஓடத்தைக் காற்று அடித்துக் கொண்டு போவது போல, போகங்களில் சஞ்சரிக்கின்ற புலன்களில் எந்த ஒரு புலனுடன் மனம் ஒட்டியிருக்கிறதோ, அந்த ஒரே புலன் மனம் வசப்படாத மனிதனின் புத்தியைக் கவர்ந்து செல்கிறது.

66. ஆகையால், நீண்ட புஜங்கள் உடையவனே! (அர்ஜுனா!) எந்த மனிதனுடைய புலன்கள் புலன்களுக்குரிய போகப்பொருட்களில் இருந்து எல்லாவிதங்களிலும் மீட்கப்பட்டு விட்டனவோ, அவனுடைய புத்தி ஸ்திரமானது.

67. அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவு போல இருக்கிறதோ, அந்த நித்தியமான, ஞான வடிவான பரமானந்தத்தை அடைவதில் ஸ்திதப்ரக்ஞனான யோகி விழித்திருக்கிறான். மேலும், எதில் அழியும் தன்மையுடைய உலகியல் இன்பங்களை அடைவதில் அனைத்து உயிரினங்களும் விழித்திருக்கின்றனவோ, பரமாத்மாவின் தத்துவத்தை உணர்கின்ற முனிவருக்கு அது இரவுபோல ஆகிவிடுகிறது.

68. எவ்விதம் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நீர் நிறைந்தும் அசைவில்லாமல் இருக்கும் கடலில் பல ஆறுகள் அதைக் கலங்கச் செய்யாமலே கலந்து விடுகின்றனவோ, அதேபோல ஸ்திதப்ரக்ஞனான மனிதனை அனைத்து போகங்களும் எவ்வித மாறுதலும் உண்டுபண்ணாமலேயே வந்து அடைகின்றன. அவனே மேலான அமைதியை அடைகிறான். போகங்களை விரும்புபவன் அமைதியை அடைவதில்லை.

69. எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவனாக, அகங்காரமற்றவனாக, சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக சஞ்சரிக்கிறானோ, அவனே அமைதியை அடைகிறான். அதாவது, அவனே சாந்தியைப் பெறுகிறான்.

70. அர்ஜுனா! இதுதான் பிரம்மத்தை அடைந்தவனின் நிலை. இதை அடைந்தபின் யோகி ஒருபோதும் மோகமடைவதில்லை. மேலும் உயிர் பிரியும் நேரத்திலும் இந்த பிரம்மநிலையிலேயே நிலைபெற்றுப் பிரம்மானந்தத்தை அடைகிறான்.”

//-- இதுவரை “ஸாங்க்ய யோகம்” என்ற இரண்டாவது அத்தியாயம்--//