ஞாயிறு, 16 அக்டோபர், 2016

உடல்நலம் தரும் சூரிய நமஸ்காரம்

சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும். நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
உடல் பொலிவடையும்:
சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில்
அறியலாம்.
தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது. சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.
சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும். சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம்.
அறையிலும் செய்யலாம். காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.www.danvantarinadi.com.

புதன், 12 அக்டோபர், 2016

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!



தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

www.danvantarinadi.com

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம்.
வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.
அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.
இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.
இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.
மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார்.
இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது.

ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம் போன்ற இறக்குமதி விழாவை கொண்டாடும் போது நம் பாரம்பரிய பண்டிகையை மிகச்சிறப்புடன் கொண்டாடுவோம். தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர் யவரும் இலர். தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது சமண சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தற்போது மாற்று சமயத்தினரும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை எடுக்கின்றனர் பட்டாசு வெடிக்கின்றனர். நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.



தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்: கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.
தீபாவளி பண்டிகையின் வரலாறு தீபாவளிப் பண்டிகையின் வரலாறு தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.
தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.
தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.
தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்ததங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர்.

இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை.
முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர்.
அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது. தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை.
தீபாவளி , ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும்ஓர் இந்து பண்டிகையாகும் . இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் . தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக
கருதுவதில்லை . இருப்பினும் மலேசியா , சிங்கையில் வாழும் தமிழர்கள்தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர் .
பெயர்க் காரணம்
‘ தீபம் ‘ என்றால் ஒளி , விளக்கு .’ ஆவளி ‘ என்றால் வரிசை . வரிசையாய்
விளக்கேற்றி , இருள் நீக்கி , ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும் . தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம் . ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது . அகங்காரம் , பொறாமை , தலைக்கணம்
போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும் . ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும் .

தோற்ற மரபு
இந்துக்களின் தீபாவளி
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை , புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர் .
இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது  பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
புராணக் கதைகளின் படி
நரகாசுரனின் நிஜப்பெயர்: நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஸ்கந்தபுராணத்தின் படி , சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.
தீபாவளியின் பெருமை: 
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது.
உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.
சீக்கியர்களின் தீபாவளி
1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .
சமணர்களின் தீமாவளி
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.
கொண்டாடும் முறை
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர் . இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை ) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.
வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன் என்றால் நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.
சகோதரிகளுக்கு பரிசு: 
தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான்.
தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் .
அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் .
பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் .
தீபாவளி இலேகியம் ( செரிமானத்திற்கு உகந்தது ) அருந்துவதும் மரபு .
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு
காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில்
பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக
கருதப்படுவதேயாகும் .
அந்த நீராடலைத்தான் ” கங்கா ஸ்நானம் ஆச்சா ” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் ” கங்கா தேவி ” வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் , சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

புதன், 5 அக்டோபர், 2016

நியாய தராசில் - ராவணன்

 உலக அரங்கில் பேசப்படும் இயக்குனர் மணிரத்னம் இயக்கதில் 'ராவணன்'. தமிழ் ரசிகர்களை முழுக்க முழுக்க ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கும் படம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இருக்க முடியாது. இது படம் பார்த்த அனைவருக்கும் தெளிவாவே  விளங்கியிருக்கும். அப்படி என்ன ஏமாற்றம்? தமிழுக்கு நியாயம் செய்வதை விட இந்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் மணி.  இது இராமாயணம் அல்ல, ராவணன் என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் புனைபெயர் என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார் இயக்குனர்.

வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். வீரா, ஊர் மக்களைப் பொருத்த அளவில் அவன் காவல் தெய்வம். சட்டத்தின் பார்வையில் தீவிரவாதி. அதனால் அதிரடிப்படை அவனைத் தேடி வருகிறது. ஆனால் வீரா தீவிரவாதி என்று சொல்லப்படுவதற்கு ஒரு நியாயமான காரணம் கூட திரையில் காட்சியாக வரவில்லை. டி.ஜி.பி தேவின் மனைவியை (மனைவி ராகினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன்) வீரா கடத்தி சென்ற பிறகே வீரா குற்றவாளியாக கருதப்படுகிறான். அந்தக் குற்றத்திற்காகத் தான் சட சடவென குண்டுகள் தெரிக்க வீராவை சுட்டுத் தள்ளுகிறார் தேவ். அப்படியானால் வீரா முதலில் தேடப்பட்டு வருவதற்கான காரணம்???


படத்தில் காட்டப்படும் மலைப் பகுதிகள் திருநெல்வேலியை சார்ந்தவை என சொல்லப்படுகிறது. ஆனால், அம்மக்கள் எதை சார்ந்தவர்கள், அவர்கள் கலாச்சாரம், அவர்கள் வாழ்க்கை முறை எதுவுமே படத்தில் காட்சியாக காட்டப்படவில்லை. அவர்கள்  பிரச்சனை தான் என்ன? வீராவை எதற்காக அவர்கள் நம்புகிறார்கள், எதுவுமே படத்தில் இல்லை. 

              

வீராவின் தங்கை வெண்ணிலாவாக ப்ரியாமணி. ஃப்லாஷ் பேக்கில் வரும் ப்ரியாமணிக்கு அரண்மனையில் திருமணம்  நடக்கிறது. என்னடா இது? சரி அதை விடுங்கள், திருமணத்தின் போது வீட்டுக்குள் அரவாணிகளின் ஆட்டம். தமிழ் நாட்டில் இப்படி ஒரு திருமணமா? இது போன்ற காட்சிகளில் மிகவும் தெளிவாகவே புரிகிறது... தமிழ் ராவணன் இந்தி ராவணின் போட்டோ காப்பி என்று! 

வீராவாக வரும் ராவணன், தான் ஒரு ’எச்சக்கை’ என்று தானே சொல்கிறான். தன்னைத் தானே அவன் அப்படி இகழக் காரணம்? காவல் தெய்வமாக கருதப்படும் வீரா ’எச்சக்கையா’? அதுவும் அதை அவன் வாயாலேயே சொல்வதா?  இராமாயணத்தில் இராவணன் தன்னைத் தானே இகழ்ந்துகொண்டதாக எதுவும் இல்லையே.  ஒரு காட்சியில் உடைந்துபோன கடவுள் சிலை காண்பிக்கப்படுகிறது. அந்தக் கடவுளிடம் சென்று காப்பாற்றும்படி கேட்கிறாள் ராகினி. அப்போது தன் கணவனைப் பற்றி வீராவிடம் சொல்லும் ராகினி. தன் கணவன் ஒரு கடவுள் மாதிரி என்று சொல்ல, உடனே வீரா மிகவும் ஆக்ரோஷமான குரலில், கடவுளா? நான் பிசாசு, அனைத்தையும் விடப் பெரியவன் என்று கத்துகிறான்.அப்படியானல் கடவுளை எதிர்க்கிறவனா இராவணன்.  அப்படியானால் இராவணன் சிவபெருமான் பக்தன் என்பதும் அவன் பல  பூஜைகளை ஆதரித்தவன் என்பதும் மணிரத்தினதிற்கு தெரியாமல் போனதா?? 

இப்படிப் பல கேள்விகள் இருந்தாலும், இவை அனைத்தும் சினிமாவிற்கான சமரசங்கள் என்று எடுத்துக் கொள்வோம். டெக்னிகல் விஷயத்திற்கு வருவோம். இராவணன் படத்தைப் பொருத்த அளவில் பல ’செட்டு’கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ’செட்டு’தான் என்று பார்க்கும் ரசிகனுக்கு நன்றாகவே தெரியும். இதுவே படத்தின் முதல் பலவீனம். படத்தில் இயல்பு தொலைந்து, வண்ணம் பூசப்பட்ட அட்டை சுவருகளாய் காணப்படுகிறது.

                 

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சத்தமாகவோ, மௌனமாகவோ எதையோ ஒன்றை செய்துகொண்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். விக்ரம் மலைமேல் இருந்து சரிந்து விழும்போது துவங்கும் ’உசுரே போகுது’ பாடல்...  மெய் சிலிர்க்குது. ஆனால், ’காட்டு சிரிக்கி’  போன்ற பாடல்கள் வீணடிக்கப்படிருப்பதே இங்கு வேதனை. அதில் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! கூடவே வைரமுத்துவின் வரிகளும் ஓரம் கட்டப்பட்டுவிட்டன. 

சுஹாசினி மணிரத்னத்தின் வசனங்கள், சில காட்சிகளில் சாதாரண தமிழில் இருக்கிறது, அடுத்தக் காட்சியில் வட்டார வழக்காக மாறிவிடுகிறது. சில வசனங்கள் புரிந்தாலும் அது எதற்காக வருகிறது என்பது புரியவில்லை.

படத்தின் காட்சிக் கோர்ப்புகள் கத்தரி போட்ட கதர் துணி மாதிரி சிதறிக்கிடந்தன. பிரபு, ப்ரியாமணி, கார்த்திக், ஏன் விக்ரம்,  ஐஸ்வர்யா ராய் அனைவரின் கதாப்பாத்திர படைப்பிலும் ஒரு அழுத்தமான பதிவு இல்லாமல் போனது என்பதே உண்மை. இந்த நடிகர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதே இதில் இன்னொரு உண்மை. ராவணன் படத்தின் மூலம் விக்ரமிற்கு  கிடைத்த ஒரே பலன் இந்திக்கு ஒரு எண்ட்ரி மட்டுமே.  ஆனால், இவை அனைத்தையும் சரிசெய்யும் வகையில் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் கேமரா வித்தைகள். கேமரா வித்தைகளுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

இராவணன் இறக்கும் போது வரும் பாடல் இது, நான் வருவேன்... மீண்டும் வருவேன்... உனை நான் தொடர்வேன், உயிரால் தொடுவேன்... இதற்கான அர்தத்தை மணி அடுத்த படத்தில் சொல்வாரோ!

விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா? : மறைக்கப்பட்ட உண்மை!

இது ஒரு புதிய தொடர் பதிவு : “அறிந்ததும் மறந்ததும்” என்ற தலைப்பில் நாம் அறிந்த அறிவியல் விஞ்ஞானத்தையும் அதை சார்ந்த நம்ப முடியாத ஆனால் உண்மையாக இருக்க கூடியதுமான விடையங்களைப்பற்றி பேச உள்ளேன்/ளோம். ஏற்கனவே ஏலியன்ஸ், லெமூரியா பதிவுகளில் இவ் விடையங்களை தொட்டிருந்தேன். ஆனால் இங்கு தெளிவாக பேசலாம். இப் பேச்சு “நம் அறிவில்” பற்றி பலர் சிந்திக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். :)
விமானம்,
அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம்.
பறவை வாணில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியக்க செய்தனர்.
இது இருக்கட்டும் அனைவரும் அறிந்த தகவல் தான், ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர். நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் (Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர் 31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்துள்ளார். ஆனால் அவரிடம் புகைப்பட ஆதாரங்கள் இருக்கவில்லை. மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டினார், ஆனால் தரையிறக்கும் போது விமத்திற்குள்ளானதில் விமானம் முற்றாக சேதமடைந்தது. மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டனர்/ இது பலரும் அறியாத ஒரு வரலாற்றுதகவல்.
ஆனால், நாம் இங்கு பார்க்க நினைப்பது அது அல்ல…
நம் இராமாயணத்தில் விமானங்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இராவணன் பயண்படுத்திய புட்பக/புஷ்பக விமானத்தை கருதலாம். மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறக்கும் சாதனம் அப்போதே பயன்பாட்டில் இருந்துள்ளதிற்கு இது ஒரு உதாரணம். ஆனால், சான்றுகள் / படிவுகள் என்று பார்த்தால் இந்த உதாரணத்தின் பெறுமதி இன்றைய திகதி வரைக்கும் பூச்சியம் தான். அதனால், நாம் இராமாயணத்தை கொண்டு விமான தொழில் நுட்பத்தை பற்றி விவாதிப்பது பொருத்தமற்ற ஒன்று. ஆனால், விவாதிப்பதற்கு எகிப்து இருக்கிறது!
எகிப்து சுமார் 10000 – 5000 ஆண்டுகளுக்கு முட்பட்ட ஒரு ராச்சியத்தின் எச்சங்களை கொண்டு இன்றும் உலகின் தொழில் நுட்பத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு மர்ம பூமி என்று சொல்லலாம்.
எகிப்திய பிரமிட்டுக்கள் அதன் அமானுட தொழில் நுட்பத்திற்காக இன்றுவரை ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அப்படி எகிப்தை ஆராய்ந்த போது அச்சு அசலாக இன்றைய விமானத்தை ஒத்த பல உருவங்கள் / பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ( இங்கு இருக்கும் படங்களில் நீங்கள் காண்பது எகிப்திய அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட உருவங்களையே.)

இந்த உருவங்கள் நிச்சயமாக உங்களிடையே பல கேள்விகளை உருவாக்கும். விமானத்தை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் கண்டுபிடித்து கொண்டாடினோம். ஆனால், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனரே அது எப்படி? அந்த அளவிற்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருந்தால் பிற்காலத்தில் அது ஏன் அழிந்தது? என்ற பல கேள்விகள் எழும்.

சிலர் நினைக்கலாம், பெரிய அளவில் விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை வெறும் உருவ பொம்மைகள் தானே, அது அவர்களின் கற்பனை உருவங்களாகவும் இருக்கலாம் என்று.
ஆனால், அந்த சின்ன உருவங்களை கவணமாக பார்த்தோமானால் மேலும் வியப்பு காத்திருக்கிறது. ஆம், அதன் செட்டைகள் மற்றும் பின்புற அமைப்பு என்பன இன்றைய விமான அமைப்பை 100% ஒத்துள்ளது. ( காற்றில் விமானம் தளம்பாது பயணிக்க உதவும் பின் புற அமைப்பைக்கூட அந்த பொம்மையில் வடித்துள்ளார்கள். ஏன்? எப்படி? )
இதுவும் திருப்தியான சான்றாக இல்லை என்பவர்கள்… கீழுள்ள புகைப்படங்களை பாருங்கள். இவை பூமியின் பல்வேறு இடங்களில் மலை முகடுகள் தரைகளை மட்டமாக்கி உருவாக்கப்பட்ட பண்டைய விமான ஓடுதளங்கள்!
நாம் நவீன விமானத்திற்கான ஓடு தளங்களை எப்படி உருவாக்கியுள்ளோமோ, அதே போல் உண்மையை சொன்னால் எம்மை விட ஒரு படி மேலே மிகப்பிரமாண்டமான முறையில் அவர்கள் இந்த ஓடு தளங்களை உருவாக்கியுள்ளார்கள்.
இன்றைய இந்த “அறிந்ததும் மறந்ததும்” தகவல் இதோடு நிக்கட்டும்.
இதற்கும் “எம் அறிவியல்” இற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நிச்சயம் நீங்கள் “லெமூரியா” பதிவை வாசிக்க வேண்டும். அப்போது தான் எகிப்து உருவாகியது எப்படி? அதற்கு மூலகாரணம் யார் என்பதை அறிந்து வியப்பீர்கள். :)
மீண்டும் அடுத்த வாரம் இதன் தொடர்ச்சி உடனும்  வேறு ஒரு தெரியாத தகவலுடனும் சந்திப்போம்!
உங்கள் விவாத கருத்துக்கள் நிச்சயம் இந்த ஆக்கத்தை செம்மையாக்கும். :) நான் விட்ட பிழைகளை திருத்தி வாசிப்போருக்கு சிறந்த தகவலை வளங்கும். :)
“விமான சாஸ்திர” இதைப்பற்றி தகவல் தெரிந்தோர் பகிர்ந்துகொள்ளவும் நன்றி

தமிழர்களின் வர்மக்கலை ஒரு அதிசயம்

புலம்பெயர்ந்த தமிழர்களின் மொழியும் கலாசாரமும்

பிரான்சில் வசிக்கும் ஆராய்ச்சியாளர் ஏ.முருகையன் – புலம்பெயர்ந்த தமிழ்த் தொழிலாளர்களின் மொழி், கலாசாரம், வாழ்க்கை பற்றி பேசியதின் எழுத்து வடிவம் இது.www.danvantarinadi.com.
TamilPopulation-World
(Significant population centers of Tamils.
80,000,000 – 100,000,000)
”19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சி நடந்தது. அதனால் தோட்டத் தொழிலாளிகளின் தேவை ஏற்பட்டது. தோட்ட முதலாளிகள் இந்தியாவிலோ, சீனாவிலோ குறைந்த செலவில் தொழிலாளிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி தீவு, மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, மர்த்தினி, தென் ஆப்பிரிக்கா மற்றும் உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தார்கள். இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம்தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பலாம் என்ற சட்டத்தை உருவாக்கினார்கள். ஆங்கில, பிரெஞ்சு பகுதிகளுக்கும் தோட்டத் தொழிலாளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்தும் அப்படிதான் புலம்பெயர்ந்தார்கள்.
15 ஆண்டுகாலமாக பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர் வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து வருகிறேன். பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர்களின் மொழி, பண்பாடு பற்றி அறிய, தமிழர் வாழும் மற்ற நாடுகளில் எப்படி இருந்தது என்றும் அறிய வேண்டும்.
இந்தியாவிலிருந்து 2 வித சூழ்நிலையுள்ள நாடுகளுக்குப் பிரிகிறார்கள். தூரம் இதில் முக்கிய விஷயம். இந்தியா – சிங்கப்பூர், இந்தியா – மர்த்தினி… இந்த தூர வித்தியாசத்தைக் கவனியுங்கள். தூரம் குறைவு என்பதால் சிங்கப்பூர், இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டோடு தொடர்புகொள்ள வாய்ப்பு அதிகம். இதனால் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் பண்பாடு ஏறத்தாழ சமமாயிருக்கும். தூரம் அதிகரிக்கும்போது தமிழ்மொழி, தமிழ் பண்பாடு ஆகியவை குறைகிறது.
ரீயூனியன் தீவு மொரிஷியஸ் அருகில் உள்ளதால், அதன் தாக்கம் உண்டு. இந்திய, தமிழ் பண்பாடு வளர்ச்சி, தமிழர் வாழும் மற்ற பிரெஞ்சு பகுதிகளில் இந்த அளவு இருக்காது. அரசியல் ரீதியில் ரெயினியன், மத்தினி போன்றவற்றில் ஒரே நிலைதான்.
சென்றடைந்த நாடுகளின் மொழிக்கொள்கை அடுத்த காரணம். மொரிஷியஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பன்மொழிக் கொள்கை உண்டு. பிரெஞ்சு பகுதியில் பன்மொழிக் கொள்கை இல்லை. புலம் பெயர்ந்த மக்கள்தொகையைப் பொறுத்தும் இது மாறுபடும். மலேசியாவில் தமிழர் அளவு 10%, தென் ஆப்பிரிக்காவில் 2% (விழுக்காடு குறைவு என்றாலும்கூட, அங்கு 3 லட்சம் தமிழர்கள்), சிங்கப்பூரில் 7%, மொரிஷியசில் 8%, பிஜித்தீவுகளில் 5%, மர்த்தினியில் 5-6 % (அதாவது 13000 தமிழர்கள்), ரீயூனியனில் 33% தமிழர்கள்.
மக்கள் தொகையில் தமிழர் அளவு சிங்கப்பூரை விட அதிகமாக இருந்தாலும், ரீயூனியன் பிரான்சை சார்ந்தது. கடந்த 5, 6 ஆண்டுகளாக இந்தப் பகுதி இந்திய அரசாங்கத்தோடு தொடர்பில் இருக்கிறது.
இலங்கையின் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று. சிங்கப்பூரின் 4 ஆட்சிமொழிகளில் தமிழும் உண்டு. மலேசியாவில் ஆட்சிமொழியாக இல்லாவிட்டாலும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பராம்பரியமாகக் கற்றுத் தரப்படும் மொழியாக இருக்கிறது தமிழ். மொரிஷியசிலுள்ள 5 இந்திய மொழிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் உண்டு.தென் ஆப்பிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோர் தமிழ் மொழியை தக்க வைக்க காரணிகளை உருவாக்கியுள்ளனர். பயன்பாடு இல்லாத மொழியை தக்க வைக்க முடியாது. சிங்கப்பூரில் பயன்பாடு, அரசியல் அங்கீகாரம் இருந்தாலும்கூட, தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலமே படிக்கிறார்கள். அங்கே வீட்டுமொழியாகத்தான் தமிழ் இடம்பிடித்திருக்கிறது.
OLYMPUS DIGITAL CAMERA
A Malbar temple in Réunion.
தமிழர் என எப்படி அடையாளம் காணப்படுகிறது? இவை எல்லாம் சிறு தீவுகள். இருந்தாலும் ‘நான் இந்தியன்’, ‘நான் சீனாக்காரன்’ என்ற உணர்வு அவரவர்க்கு இருக்கிறது. இந்தியாவில் ஜாதி உணர்வு, ஊர்காரன் போன்ற பாகுபாடு இருப்பதுபோலதான்… பலநாட்டு மக்கள் வாழும் பகுதியிலும் இது உண்டு. உடை மூலம் அடையாளம் காணமுடியும். தீபாவளி போன்ற பண்டிகைகளில் பெண்கள் புடவை, பொட்டு அணிந்து காணப்படுவார்கள். இங்குள்ள ஆண்களுக்கு அப்படி அடையாளம் இல்லை. மதச்சடங்கு, வீட்டுச் சடங்கு செய்யக்கூடிய இடங்களில்தான் தமிழ்ப் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. மாரியம்மன் வழிபாடு, சடங்குகளில், பண்பாட்டுச் செயல்பாடுகளில் தமிழ் உள்ளது. இதை மதம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. பண்பாட்டுக் காரணியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், சட்டப்படி அவர்கள் கத்தோலிக்கர்கள்தான். ஞாயிறு அன்று சர்ச்சுக்குப் போவார்கள். உடல்நிலை சரியில்லை, குழந்தை வேண்டுதல் போன்ற காரணங்கள் இருந்தால் மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்வார்கள்.
தமிழ்நாட்டில் உள்ளதைப் போல, இங்குள்ள மாரியம்மன் கோயில் கோபுரத்தோடு இருக்காது. ஒரு கொட்டகைதான்… மேலே தகரக்கூரை இருக்கும். கல்லுக்கு புடவைகட்டி, பொட்டு வைத்து மாரியம்மனாக வழிபடுவார்கள். வெள்ளை வேட்டி கட்டி காத்தவராயனாக வணங்குவார்கள். நிச்சயமாக பண்பாடு சார்ந்ததுதான் இது. இங்கு கொண்டாடப்படும் விழாக்கள் எல்லாம் கலாசாரம் சம்பந்தப்பட்டவையே.
ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வித பழக்கம். ரீயூனியனில் ஆண்டுக்கு 6-7 முறை தீமிதி விழா நடத்துவார்கள். மொரிஷியசில் காவடி எடுப்பார்கள்… மாசி மகம் கொண்டாடுவார்கள். மர்த்தினியில் தீமிதி இல்லை… கரகம் உண்டு. ஆடுபலி, கோழிபலி… எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம்.
’பலியிட்டு வழங்குதல்’ பற்றி மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. காரணம் சான்ஸ்கிரிட்டிஷேன் என்கிற சமஸ்கிருதமயமாக்கல் இந்தப் பகுதிகளில் திணிக்கப்படுவதுதான். அவர்கள் பலிகொடுப்பதை மிருகத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். ரீயூனியனில் பலி கொடுத்து வணங்குவதற்கு தனி கோயில், தனி இடம் ஏற்பட்டுவிட்டது. சிவன், விஷ்ணு கடவுளர்கள் அடங்கிய கோயில்களும் உண்டு.
800px-Ganesh_Paris_2004_DSC08471
Celebrations of Ganesh by the Sri Lankan Tamilcommunity in ParisFrance
இந்த மக்களுக்கு தமிழ் மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த வாய்ப்பில்லை. எல்லாவற்றுக்கும் பிரெஞ்சுதான் தேவைப்படுகிறது. விழாக்காலங்களில் பாட்டு பாடவும், ‘சாமி வந்தவர்கள்’ மற்றவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் தமிழ்தான் தேவை.
ரீயூனியனில் கோயிலில் பாடப்படும் தமிழ் பாடல்களுக்கு பொருள் புரியும். மர்த்தினியில் என்னவென்று விளங்காமலே பாடுவார்கள். சூடம் ஏற்றும்போதும் கூட பாட்டு உண்டு. மாரியம்மனுக்கு தாலாட்டுப் பாட்டும் உண்டு. பிரெஞ்சு பகுதிகளில் தெருக்கூத்து நிக்கிய நிகழ்வாக இருக்கிறது. விழாக்காலங்களில் தெருக்கூத்து பார்ப்பார்கள். லவகுசங்கன், நல்ல தங்காள், ராஜா தேசிங்கு கியவை கூத்தாக நடத்தப்படும்.
இந்தியாவில் அச்சுத்தொழில் வளர்ச்சிப்பெற்ற காலகட்டத்தில் 1930, 40-களில் வெளியிடப்பட்ட சிறு புத்தகங்கள் எடுத்துப் போயிருக்கிறார்கள். இன்னும் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். அவற்றிலுள்ள கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு தெருக்கூத்து போலவேதான் இங்கும் நடத்தப்படுகிறது. கட்டியக்காரன், மத்தளக்காரன், ஆர்மோனியக் காரன் எல்லாம் உண்டு. திரை கட்டி, முதலில் கட்டியக்காரன் வந்து கதை சொல்கிறான். விநாயகர் வேசத்தில் ஒருவர் துதிக்கை மாட்டி வருவார். விநாயகர் பூஜை நடக்கும். உடுப்பு, வேடம் உள்பட எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவேதான். இந்தக் கலைஞர்கள் நினைவில் உள்ளதை திரும்பத் திரும்ப செய்து வருகிறார்கள். வாய்வழியாக அடுத்த தலைமுறைக்குச் செலுத்தப்படுகிறது இந்தக்கலை.
கிரேயோல் மொழி தாக்கமும் இதில் உண்டு. சபையில் உள்ளவர்களுக்கு விளங்குவதற்காக கிரேயோல் மொழியில் விளக்கம் தருகிறார்கள். கட்டியக்காரர்கள் நாடுநடப்புகளை நையாண்டி செய்யும் பகுதி தமிழ்நாட்டில் நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது. இங்கே இன்னும் பழைய முறையே இருக்கிறது. பெரும்பாலும் மர்த்தினியில் லவகுசங்கா கூத்தும், ரீயூனியனில் மகாபாரதம், ராமாயணமும், மொரிஷியசில் ராஜா தேசிங்கு, நல்லதங்காள் கதைகளும் கூத்தாக நிகழ்கின்றன.
ஒரே சமூக சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள் என்பதால் இந்தக் கதைகள் அவர்களுக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கும் புரியும். கான் சாகிப் கதை கூட கூத்தாக நடத்தப்படுகிறது. இப்போது கூத்து நடத்துவது குறைந்து வருகிறது.
Tamil_girls
கிரேயோல் மொழிக்கும் பராம்பரிய வரலாறு உண்டு. தோட்ட முதலாளி பேசும் மொழி தொழிலாளிக்குப் புரியாதில்லையா? புரிதலுக்காக இந்திய, ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலப்பு மொழி – கிரேயோல் மொழியாக உருவானதுதான் கிரேயோல். பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சுதான். இலக்கணம் எளிமையாக இருக்கும். ‘நான் காப்பி முடிச்சேன்’ என்றால் ‘குடிச்சேன்’ என்றுதான் பொருள். இதில் இப்போது அகராதி கூட வெளிவந்துள்ளது. பாரதியார் கவிதைகள் கிரெயோல் மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் பிரெஞ்சு பேசுவதுபோலதான் கிரேயோல் மொழியும் ஆனால் எளிதில் விளங்கும்.செஷல்ஸ் நாட்டில் கிரேயோல் பயிற்று மொழியாக உள்ளது. பிரெஞ்சிலும் பாட மொழியாக உள்ளது. இதில் இலக்கியமும் உண்டு. மகாபாரதம், ராமாயணம் ஆகியவை கூட கிரேயோல் மொழியில் உண்டு.
மாரியம்மன் வழிபாட்டு முறை… இங்கு கிராம பூசாரி போலதான்… ஈடுபாடுள்ள யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம். சொந்த ஆர்வத்தில் பெரியவர்கள் செய்வதைப் பார்த்து சிஷ்யனைப் போல கற்றுக்கொள்கிறார்கள்… பூசாரி ஆகிறார்கள். மாரியம்மன் கோயில் பூசாரிக்கு அந்தஸ்து உண்டு. மதிப்பும் கவுரவமும் அதிகம். தோட்டத் தொழிலாளி, ஆசிரியர், டிரைவர், மருத்துவ உதவியாளர், எலெக்ட்ரிஷியன் போன்றவர்கள் கூட, ஒய்வு நேரத்தில் பூசாரியாகத் தொண்டு செய்கிறார்கள். யாரும் முழு நேர பூசாரி கிடையாது.
ஏதாவது பிரச்னை என பூசாரியிடம் போனால், ‘கவலைப்படாதே. மாரியம்மனுக்கு விழா எடுப்போம்’ என்று சொல்வார். அதற்கு ஏற்பாடு செய்வார். இந்தியத் தொடர்பு அதிகம் உள்ள மொரிஷியஸ், ரீயூனியன் தீவுகளில் பூசாரி திருமணப் பொருத்தம், ஜாதகம், பஞ்சாங்கம் பார்ப்பதும் உண்டு.
நன்றிக்கடன் கொடுக்க விரும்புபவர் 40 நாள் விரதம் இருக்கவேண்டும். கோடை காலத்தில் விழா. ஜுன் முதல் செப்டம்பரில் பூசாரியும் விரதம் இருப்பார். மது மாது மாமிசம் கிடையாது. தீட்டு இருந்தால் தெய்வம் தண்டிக்கும் என்பது நம்பிக்கை. முன்பெல்லாம் 3 ஆடுகளை பலி கொடுப்பதே வழக்கம். இப்போது நிறைய பணம் இருப்பதால் 20, 30 ஆடுகள் கூட பலி கொடுக்கிறார்கள்.
மர்த்தினியில் இறந்த சடங்குகள், கருமாதி, மாரியம்மனுக்கு நன்றிக்கடன் விழா ஆகியவை தமிழ் மரபுப்படி நடந்து வருகிறது. இப்போது முடிஎடுத்தல் குறைந்து வருகிறது. பெண்கள் வயதுக்கு வந்தவுடன் விழா எடுப்பது சில இடங்களில் உண்டு.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இங்கேயும் உண்டு. தேதி, நட்சத்திரப்படி பெயர் வைப்பது ஒரு உதாரணம். 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெயர்கள் அதிகம். இப்போது நட்சத்திரத்துக்கு உகந்த எழுத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ளது.
மொரிஷியசில் 72% இந்தியர்கள்… 8% தமிழர்கள். ஆகவே அரசாங்கம் இந்தியர்கள் கையில். பொருளாதாரம் வெள்ளைக்கார தோட்ட முதலாளிகள் கையில். தமிழர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு. சொந்த உழைப்பினாலும், ஆங்கிலேயேரிடம் இருந்த செல்வாக்கினாலும் நன்கு வளர்ந்தார்கள். படிப்பு, வேலை, சொத்து சேர்ப்பது என எல்லா விஷயத்திலும் தமிழர்கள் முன்னேற்றம் அடைந்தார்கள். தோட்டத் தொழிலாளிகளாக இருந்து, பிறகு தோட்டங்களையும் வாங்கினார்கள்.
மொரிஷியசில் முதன்முதலாக பயிற்றுவிக்கப்பட்ட இந்திய மொழி – தமிழ். அச்சேறிய முதல் இந்திய மொழியும் இதுதான். வக்கீல், அக்கவுண்டண்ட் போன்ற ஒயிட் காலர் ஜாப்களில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். மொரிஷியசில் வேலைவாய்ப்பு குறைவு என்பதால், படித்தவர்கள் அங்கிருந்து புலம் பெயர்கிறார்கள்.
அரசியல், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபட்டவர்கள் என்பதால் தமிழர்களுக்கு நல்ல அங்கீகாரம் உண்டு. ரூபாய் நோட்டுகளில் இரண்டாவது இடத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் மொழி எந்தக் காரணமும் இல்லாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால், 1998-ல் கலவரம் ஏற்பட்டது. மந்திரி சபையிலிருந்த 2, 3 தமிழர்கள் ராஜினாமா மிரட்டல் விடுத்தனர். ரூபாய் நோட்டில் மீண்டும் இரண்டாவது இடம் பிடித்தது தமிழ். பிரச்னைக்குரிய ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டன.
ஒவ்வொரு மொரிஷியனும் முன்னோர் மொழியை படிக்க வாய்ப்புண்டு. பெயரைப் பார்த்தே ‘தமிழ் படி’ என்று சொல்வார்கள். 5 இந்திய மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன். பத்திரிகைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இப்போது அவை குறைந்துள்ளன. ஒளி என்ற பெயரில் கோயில் கட்டமைப்பின் மாதப் பத்திரிகை வெளிவருகிறது.
மொரிஷியசில் சுதந்திரத்துக்கு முன்பிருந்ததோடு ஒப்பிடும்போது, மொழிப்பற்று இப்போது குறைவே. தமிழ்க்கோயில்கள் 300 இருக்கின்றன. இந்திய மூஸ்லிம்களும் இருக்கிறார்கள். 1. வட இந்திய இந்துகள், 2. வட இந்திய மூஸ்லிம்கள் 3. தென் இந்திய தமிழர்கள் என 3 விதமாக மொரிஷியசுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களைப் பிரிக்கலாம். மொரிஷியசில் ‘இந்து’ என்றால் வட இந்தியர்கள். தென் இந்திய இந்துகள் தமிழர் என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழ் மதம் என்ற பிரிவே உருவாகிவிட்டது. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் மதம் என்ற கருத்து தாக்கம் இங்கே உள்ளது.
மொரிஷியஸ் தமிழர்கள் எழுதிய புத்தகங்கள் சென்னையிலும், தஞ்சாவூரிலும் அச்சிடப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1964-65 களில் இங்கு வெளிவந்த பத்திரிகைகளில் காமராஜர், அண்ணாதுரை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன,
இங்குள்ள தமிழ் கோயில்களுக்குக் கொடி உண்டு. அதில் கறுப்பு-சிவப்பு கொடி உண்டு. இதை தமிழ் கொடியாக கருதுகிறார்கள். உதயசூரியன், கறுப்பு-சிவப்பு, அண்ணாதுரை ஆகியவை தமிழ் அடையாளங்களாகக் கருதப்பட்டு இங்கே வளர்க்கப்படுகின்றன. உதயசூரியன் ஒற்றுமை சங்கம் என்ற அமைப்பு இருக்கும். உதயசூரியன் ஃபுட்பால் கிளப் என்றால் தமிழர்கள் நடத்துகிற தமிழர்களுக்கான விளையாட்டு அமைப்பு. இதற்கு எல்லாம் கட்சி அரசியல், ஜாதி, மத அடையாளங்கள் கிடையாது. இரும்புக்கதவுகளில் கூட இரண்டு மலைகளுக்கு மத்தியில் சூரியன் வருவதுபோல வரையப்பட்டிருக்கும்.
நீண்டகாலமாக மர்த்தினிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இப்போது இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஓம்… இது இந்தியர்களுக்குச் சொந்தமான விஷயம். ஆனால், வடமொழி ஓம்தான் மர்த்தினி காரர்களுக்குத் தெரியும். வடமொழி ஒம் எழுத்தையே தமிழ் என நினைக்கிறார்கள். அவர்கள் இந்தியமயமாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியா என்றால் தமிழ்… தமிழ்தான் இந்தியா என்று நினைக்கிறார்கள். வித்தியாசம் புரிவதில்லை.
‘மாரியம்மன் விழா கொடூரமாக இருக்கிறது, காட்டுமிராண்டித்தனமாக உள்ளது’ என்று கூறி வேதங்களைக் கோண்டுவந்து சமஸ்கிருத மயமாக்குகிறார்கள். இந்தியாவில் தன் சமூகம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக சிறுசிறு சாதிகள் சமஸ்கிருதத்தை விரும்பிப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பகுதிகளில் விருப்பமில்லாதவர்களுக்கும் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. இதனால் தமிழ் அழியும் சூழ்நிலை ஏற்படுகிறது.
‘தமிழ் விழா, தமிழ் பண்பாடு என்பது சாத்தானின் விஷயம். செய்யக்கூடாது. மீறிச்செய்தால் கிறிஸ்துவக் கோயிலுக்கு வரக்கூடாது’ என்று முன்பு கிறிஸ்தவ பாதிரிகள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மாரியம்மன் கோவில் போவார்களே… அதைத் தடுக்கவே இப்படி ஒரு மிரட்டல்.
இப்போது பிராமணிய அடிப்படையில்தான் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் வேறு சிலர். இதனால் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் பட்ச பண்பாட்டிலேயே இருக்க வைக்கப்படுகிறார்கள்.
‘ஆடு பலி கொடு’ என்று கடவுள் கேட்டாரா… அல்லது ‘கொடுக்காதே’ என்று சொன்னரா? இல்லையே. சமஸ்கிகிருதம்தான் கேட்டாரா? இல்லையே. ஏற்கனவே தாழ்வுமனப்பான்மையோடு இருக்கிறவர்களை இன்னும் சின்னாபின்னமாக்கும் முயற்சி இது. ஆகவே, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்களால் முடிந்த அளவு, தெரிந்த முறையில் செய்யுங்கள் என்பேன் நான்.
மர்த்தினியில் இருப்பவர்கள் பிரெஞ்சு, மொரிஷியஸ் காரர்களே… ஆனாலும், இந்திய பண்பாடு அடிமட்டத்தில் இருக்கிறது. அவர்கள் இந்தியத்தன்மை இழக்காமல், தமிழ் தன்மையோடு இருக்கவே விரும்புகிறார்கள். படித்தவர்களாக, சமுதாயத்தில் மேல்நிலை அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.
‘முன்னோர் அளித்தவை முக்கியம். அதை இழந்துவிடக்கூடாது’ என்கிறவர்களும் இருக்கிறார்கள். ‘முன்னோர் அளித்தது காட்டுமிராண்டித்தனம்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் ஏற்கனவே பிரிந்துபோயிருப்பவர்களை இன்னும் பிரிக்கும்விதத்தில் நடந்துகொள்வதா? அல்லது பிரிந்து போயிருக்கலாம்… ஆனால் சமுதாய முன்னேற்றம் அடைய வேண்டுமே என்பது ஒரு கேள்வி. சிந்தியுங்கள்!”

கொரிய மொழியும் தமிழ்ச் செம்மொழியும்

செம்மொழி மாநாட்டு கருத்தரங்கு வளாகத்திற்கு (கொடீசியா) அருகில் ஊடகம் என்றொரு
பெரிய தற்காலிக அலுவலகம் அமைத்திருந்தனர். அங்கு ஊடகத்தினருக்கு எல்லா
வசதிகளும் அளித்திருந்தனர். ஒரு தொலைக்காட்சி நிருபர் என்னை அங்கு
வரச்சொல்லியிருந்தார். வேளியே போக பயம்! ஏனெனில் வளாகத்தில் இருக்கும் வரை
நமக்கு கட்டுரையாளர் என்ற மதிப்பு. வெளியே உள்ள ஜனத்திரளுள் காணாமல்
போய்விட்டால், கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகிவிடுவோம். அதுமட்டுமல்ல, நான்

திரண்டு இருக்கும் ஜனத்திரள் (படம் நன்றி: மதன் கார்க்கி)
முன்பு சொன்னது போல் ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்ல பாதுகாப்பு வளையத்துள்
செல்ல வேண்டும். ஏதோ லடாக், காஷ்மீர் பகுதியில் சஞ்சாரிப்பது போன்ற அச்ச
உணர்வைத்தரும் அனுபவம். வழி தெரியாமல் தொலைந்து போனால் 7 கி.மீ வளைவிற்குள்
எவ்வகை தனியார் போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. எனவே ஆட்டோ, டாக்சி என்று
ஏதும் எடுத்துக் கொண்டு ஓடமுடியாது. கட்டுரையாளர்களை கட்டுக்குள்
வைத்திருக்கும் உபாயமா? இல்லை 21ம் நூற்றாண்டு தமிழகத்தில் இனிமேல் கூட்டங்கள்
இப்படித்தான் நடத்தப்படும் என்பதற்கான அறிவிப்பா? என்று தெரியவில்லை.
ஆயினும், நான் ஊடக வளாகம் நோக்கிப் போனேன். போனது நல்லதாய் போய்விட்டது. எனது
பழைய நண்பர் ஜுங் நம் கிம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பாக அது அமைந்துவிட்டது!
உண்மையில் போன வேலையை விட்டு அவருடன் பேசிக்கழித்து திரும்பி விட்டேன் என்றால்
பாருங்கள். திரு.கிம் தம் பேட்டியில் சொல்லியிருப்பதுபோல் இரண்டு தமிழர்கள்
பேசும் மொழியைப் பார்த்து, ‘அட! இது நம் கொரியன் போல் உள்ளதே?’ என்று ஆர்வம்
மிக அவர் தமிழ் படித்திருக்கிறார். என்னைப் பார்த்ததும் ‘தாங்கள் கண்ணன்தானே?’
என்றார் (இதுவும் ஒரு பிசிராந்தையார் நட்புவகை என்று காண்க). தூரக்கிழக்கின்
பிரதிநிதித்துவம் இல்லாத குறையை அவர் போக்கியது போல் உணர்ந்தேன்.
சோழர்கள் கொரியாவை தமது தூரக்கிழக்கு முகாமாக வைத்திருந்தனர் என்று இவர்
நம்புகிறார். அதற்கான சாத்தியங்கள் உண்டெனினும் நாம் நிரூபிக்க வேண்டும்.
கொரியாவில் ‘சொல்லா’ (சோழா) என்றொரு மாவட்டம் உள்ளது. பௌத்தம் தேசிய மதமாக 19ம்
நூற்றாண்டுவரை இருந்திருக்கிறது. தமிழகத்துறவி போதிதர்மர் (தாருமா) இங்கு மிக
சிறப்பாக வழிபடப்படுகிறார். இவர்கள் மொழி தமிழ் நெடுங்கணக்கை ஒத்திருக்கிறது.
க்யோன்ஜு எனும் அருங்காட்சியகத்திற்கு சென்றால் ‘அது தமிழக காட்சியகமா? இல்லைக்
கொரியக் காட்சியகமா?’ என்று சந்தேகம் வரும் அளவிற்கு நமது தெய்வச்சிலைகள்
இருக்கின்றன (கருடன், ஹனுமன், இந்திரன்), தொல்லியல் பொருள்கள் உள்ளன. இங்குள்ள
பெண்கள் கற்பைப் பேணுகின்றனர். தாய், தந்தையரை ‘அம்மா, அப்பா’
என்றழைக்கின்றனர். காசு கொடுக்கும் போது வலது கையால் மரியாதையுடன்
கொடுக்கின்றனர். பெரியோரை மதிக்கின்றனர் (பஸ்ஸில் பெரியோருக்கு இடமளிக்கும்
சிறுவர்களை இங்குதான் பார்க்கமுடியும்). எல்லாவற்றிற்கும் மேலாக கொரிய
ஆய்வகங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் இந்திய ரத்த பந்தத்தைக் காட்டுவனவாக உள்ளன.
தமிழர்கள் ஹவாய் தீவுவரை சென்றுள்ளதற்கான சான்றுகள் இருப்பதாக என் அமெரிக்க
நண்பன் சொன்னான். 14ம் நூற்றாண்டு நாகபட்டிணம் வியாபாரிகள் நியூசிலாந்து
சென்றுள்ளதை அங்குள்ள ஒரு மணிக்கூண்டு செப்புகிறது. எனவே கொரியா சோழர்களின்
கிழக்கு முகாமா? (அவுட்போஸ்ட்) என்று இங்குள்ள சரித்திர நிபுணர்கள்தான்
மேல்கொண்டு கண்டு சொல்ல வேண்டும்.

எனவே எனது கட்டுரையில் இதை ஹைலைட் (ஒளிபாய்ச்சுதல்) செய்ய தீர்மானித்தேன்.
காரணம், சும்மா தமிழர்களின் ஈகோவை உசுப்பிவிடுவதல்ல. இந்த உறவை புதுப்பிப்பதால்
தமிழகத்திற்கு மிகப்பெரிய பொருளாதார ஆதாயம் உள்ளது. ஒரு உறவும் இல்லாத நாடுகளே
sister cities என்று இரண்டு நகரங்களை பிணைக்கும் போது இயேசு பிறப்பதற்கு முன்பே
இந்தியாவுடன் பட்டுப்பாதையில் தொடர்பிலிருந்த நம் சொந்த உறவை ஏன்
விட்டுக்கொடுக்க வேண்டும்? சிங்கப்பூரில் இருக்கும் தென்னாசிய ஆய்வு மையம்
ஒருமுறை ‘கொரியாவில் இந்தியர்கள்’ என்று கட்டுரை வாசிக்க அழைத்த போதுதான் நான்
பல விவரங்கள் தெரிந்து கொண்டேன். உதாரணமாக இந்தியாவில் முதலீடு செய்யும்
மிகப்பெரிய நாடாக கொரியா நிற்கிறது. இது சாதாரண விஷயமல்ல. 200 ஆண்டுகள் நம்மை
ஆண்ட இங்கிலாந்து நம்மை நம்புவதில்லை. அமெரிக்கா பாகிஸ்தானை நண்பன் என்று
சொல்லுமே தவிர உலகின் மிகப்பெரிய குடியரசான இந்தியாவை சேர்த்துக் கொள்ளாது.
நிலமை இப்படி இருக்கும் ஊர், பேர் தெரியாத கொரியா, திடீரென வளர்ச்சியுற்று
இந்தியாவின் அரசியலை நம்பி முதலீடு செய்கிறது என்றால் அது வெறும் வியாபார
உந்துதல் மட்டுமல்ல (business risk) நமக்குள்ள உறவை அவர்கள் நம்புகிறார்கள்.
எப்படி ஒரு முஸ்லிம் மெக்காவை நோக்கி தொழுகிறானோ அது போல் ஒரு பௌத்தன் புத்தன்
பிறந்த பூமியான இந்தியாவை நோக்கித் தொழுகிறான். அவர்கள் நம்மை
மதிக்கிறார்கள். ஆனால் நாம் இன்னும் முழு ஈடுபாடுடன் அந்த சகோதரர்களை வாரி
அணைக்கவில்லை.  அது ஏன்? என்றுதான் நான் கேள்வி எழுப்பினேன். நல்ல வேளையாக கிம்
வந்து சேர்ந்தது ரெட்டை நாயனக்கச்சேரி போல் ஆகிவிட்டது. (அவரது பேட்டியை
வாசிக்க). மேலும் மத்திய அரசு சமீப காலங்களில் கிழக்கு நோக்குக! எனும் அரசியல்
கோஷத்தை முன் வைத்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரும் பொருளாதார வல்லரசான
கொரியாவுடன் நட்புக் கொள்வதால் தமிழகத்திற்குத்தான் லாபம்.
நான் முன்பு சுட்டியபடி, கொரியாவில் ஒரு பிரபலமான சீரியல்
ஓடிக்கொண்டிருக்கிறது. அது சுரோ மன்னன் என்பதாகும். இவன் ஒரு இந்திய இளவரசியை
மணந்து 10 குழந்தைகள் பெற்றதாகவும். அவர்களின் நேரடி வாரிசுகள்தான் இன்று
பிரபலமாக இருக்கும் ஹியோ, கிம்ஹே வம்சாவளியினர் என்று சொல்கிறது ஐதீகம். அந்த
இளவரசி யார்? எங்கிருந்து வந்தாள்? இது தமிழர்களால் ஆராயப்பட வேண்டிய முக்கிய
தலைப்பு. ஏனெனில் வழக்கம் போல் வடபுலத்தார் இதிலும் முந்திக்கொண்டு ஒரு
சரித்திரம் எழுதிவிட்டனர். அதாவது இந்த அரசி அயோத்யா எனும் நகரிலிருந்து
வந்ததாக அச்சரித்திரம் கூறுகிறது. அதுவொரு சீனக்குறிப்பிலிருந்து
எடுக்கப்பட்டிருக்கிறது. அச்சொல்லின் வேர் கவனமாக ஆராயப்பட வேண்டும் என்பதில்
கிம்மும், நானும் உடன்படுகிறோம். காரணம், அவ்வரசி கொரியா வந்த போது மீன்
சின்னத்தைத் தாங்கி வருகிறாள். அயோத்தியாவில் ஏது மீன் சின்னம்? அது பாண்டிய
முத்திரை அல்லவோ? பாண்டியர்கள்தானே சங்க காலத்தில் பட்டுப்பாதையின் நாயகர்கள்?
பாண்டிய மன்னர்களுக்கு மெய்காப்போனாக யவனர்கள் இருந்ததை சரித்திரம்
செப்புகிறதே. விஜய நகரப் பேரரசின் காலத்தில் வந்த யுவான்வுவாங் போன்ற சீன
யாத்திரீகர்கள் தென்னகத்தின் பெருமையை எழுதி வைக்கவில்லையா?
கொரிய சரித்திர ஆவணங்களெல்லாம் பழைய சீனமொழியில் இருக்கின்றன. கொரியர்களுக்கே
தம் சரித்திரமறிய சீனம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை. கொரிய, இந்தியப்பயணக்
குறிப்புகளெல்லாம் சீனத்தில் உள்ளன. நாம் சீனம் கற்று அதை ஆய்விற்கு உட்படுத்த
வேண்டும். அதைச் செம்மொழி நிதி செயல்படுத்த வேண்டும். சேஜோன் அரசன் (1418-1450)
கொரிய எழுத்தைக் கண்டு பிடித்து உருவாக்கியது ஒரு ரகசியமாகவே இன்றும் உள்ளது.
அவன் ஒரு மொழியியல் வல்லுநன். 18முறை சீனா பயணப்பட்டிருக்கிறான், அம்மொழியின்
நுணுக்கங்கள் அறிய. ஆனால் பாமரனும் புரிந்து கொள்ளும் எளிய ஒலி, வரி வடிவமொன்றை
கொரிய மொழிக்கு (ஹங்குல்) கொடுக்க வரும் போது அவன் தமிழ் மொழியை முன்னுதாரணமாக
எடுக்கிறான். ஏன்? அவன் சபையில் தமிழக புத்த பிட்சுக்கள் இருந்திருக்க
வேண்டும். அவர்களுடன் கலந்தாலோசித்து இருக்க வேண்டும். ஆனால் இவ்வரிவடிவ
உருவாக்கத்தை அவன் மிக ரகசியமாகச் செய்திருப்பதாக சரித்திர ஆசிரியர்கள்
சொல்கிறார்கள். அதனால், தமிழ் நெடுங்கணக்கிற்கும், ஹங்குல் வரிவடிவத்திற்குமான
சான்றுகளை உடனே எடுக்க முடியவில்லை. ஏன் அதை அவ்வளவு ரகசியமாகச் செய்தான்?
யூகம் 1. சங்ககாலத் தமிழ் அரசர்களில் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். சிலர்
புலவரை எழுத வைத்து தன் பெயரைப் போட்டுக்கொள்வதுமுண்டு. அதுபோல் இவ்வரிவடிவ
உருவாக்கத்தின் புகழ் அனைத்தும் அரசனையே சாரும் என்பதற்காகச் செய்திருக்கலாம்,
ஆனால்,
யூகம் 2. சீனக் கொரிய அரசுகள் ஆவணப்படுத்துவதில் மிகத்தேர்ச்சி பெற்றவர்கள்.
ஆவண ஆசிரியன் சுதந்திரமானவன் என்று சரித்திரம் சொல்கிறது. அரசர்கள் விட்ட
பிழைகள் கூட அங்கு பதிவாகியுள்ளன. எனவே அரசர்களே இந்த ஆவணக்காரனுக்கு பயந்து
நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, இந்த அரசன் அப்படிச் செய்திருக்க
வாய்ப்பில்லை.
யூகம் 3. கொரியா சீனம் எனும் பேரரசை அண்டி வாழ்ந்த நாடு. அப்போது சீன மொழியே
தேசிய மொழி. இந்த அரசனோ பாமரர்கள் மேல் இரக்கப்பட்டு ஒரு மொழியாக்கத்தில் ஈடு
படுகிறான். அது பேரரசிற்கு உவப்பான செயலாக இருந்திருக்காது. அதுவொரு புரட்சி
என்றே கருதப்பட்டிருக்கும். மொழிச்சுதந்திரம் என்பது ஏற்புடையதாக
இருந்திருக்காது. எனவே சேஜோன் இதை மிக ரகசியமாகச் செய்திருக்க வேண்டும். ஒரு
வரி வடிவம் கொடுத்து விட்டு அதற்கு அரசன் கொடுத்த பெயர் ‘யோன்மியோன்’ அதாவது
vulgar script என்பது. கொச்சை வடிவம் என்று அவனே சொல்லிவிடுவதால் பேரரசுகள்
அதைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். மேலும் இந்த வரிவடிவம் அரசு அதிகாரம்
பெற்றது 20 நூற்றாண்டில்தான். அதுவரை பத்திரிக்கைகள் கூட சீன மொழியிலேயே நடை
பெற்று வந்தன. ஆனால் இந்த ஹங்குல் தேசிய உருவாக்கத்திற்கு காரணியாக
இருந்திருக்கிறது. தங்கள் மொழி, தங்கள் வரிவடிவம் எனும் ஒரு சுதந்திரப்
பிரகடணம் புரிய உதவியிருக்கிறது. இந்த அரசன் வாந்த காலத்தில் இவ்வளவு புகழ்
பெற்றிருப்பானோ என்னவோ? இன்று அவன் புகழ் கொடி கட்டிப்பறக்கிறது! இந்த அரசன்

வாழ்ந்த 15ம் நூற்றாண்டில் தமிழகத்தை யார் ஆண்டார்கள்? எங்கெங்கு
பயணப்பட்டார்கள்? பௌத்தம் அப்போதும் வலுவுடன் இருந்ததா?
ஹங்குல் மொழி வரிவடிவம் உலகின் மிக அறிவியல் தன்மையுள்ள வரி வடிவம் என்று
ஐக்கியநாடுகள் சபை சொல்கிறது! அதன் மூலம் தமிழ் என்றால் செம்மொழியான
தமிழுக்குப் பெருமை சேர்க்காதா?
எனவேதான் செம்மொழி மாநாட்டில் கொரியத்தமிழ் உறவு பற்றி சிலாகித்துப் பேசினேன்.
ஆனால் டாக்டர் செல்வகுமார் ஒரேயடியாக எந்த சம்பந்தமும் கிடையாது என்று அங்கு
பலரின் எரிச்சலைக் கிளப்பினார் (சபையைப் பார்த்து எழுந்த முடிவு. எனக்கு
எக்கோபமும் வரவில்லை). நான் என் கட்டுரை முற்றும் முடிவுமான ஒரு சேதியைத்
தருவதாகச் சொல்லவில்லை. இத்தொடர்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஆய்வு
பொருள் என்றுதான் சொன்னேன். அதை வலியுறுத்தவே இச்சேதியை பல்கலைக் கழகங்களுக்கு
எடுத்துச் சென்றேன்.

தமிழுக்கும் கொரியாவிற்குமுள்ள உறவு பற்றி அவர்களை விட நாம்தான் கவலைப்பட
வேண்டும். அதற்கு காரணமிருக்கிறது. கொரியா 50களில்தான் சுதந்திரமடைகிறது.
இந்தியா போல் ஏழ்மையும், வறுமையும் பீடித்திருந்த காலம். ஆயினும் நம் குருதேவ்
டாகூர் கொரியா போய் இப்படிப் பாடுகிறார்:
In the golden age of Asia
Korea was one of its lamp-bearess
and that lamp is waiting to be
lighted once again for the
illumination of the East
என்ன தீர்க்கதரிசனம்!!
ஆனாலும், ஹான் நதி அற்புதம் (the miracle of Han River) அவ்வளவு எளிதாக
நடந்துவிடவில்லை. அதற்காக மிகக்கடுமையாக உழைத்தார்கள். தேசிய உணர்வை
எவ்வகையிலேனும் ஊட்டினர். அதில் இந்த ஹங்குல் மொழி ஒன்று. அதுவொரு தேசியப்பீடு.
இப்போது போய் நாம் இம்மொழியை செஜோன் தமிழ் மொழியிலிருந்து எடுத்தான் என்று
சொன்னால் அது உவப்பளிக்காது. நானும் சில சரித்திர ஆய்வாளர்களிடம் முயன்று
பார்த்தேன். யாருக்கும் அதில் ஆர்வமில்லை. எனவே நாம்தான் முயன்று மொழியியல்
ஆய்வு செய்ய வேண்டும்.
கொரிய-தமிழ் ஒற்றுமை என் கண்ணில் மட்டும் படவில்லை, ஒரு கிறிஸ்தவ
பாதிரியாருக்கும் பட்டிருக்கிறது.
Hulbert, H.B.
A Comparative Grammar of the Korean Language and the Dravidian Family of
Languages,
Seoul, 1906
இந்தப் புத்தகம் எந்த நூலகத்தில் கிடைத்தாலும் நண்பர்கள் சேதி சொல்லவும். இதை
நாம் ஆவணப்படுத்த வேண்டும்.
தமிழகக்கல்வி நிலையங்களில் கொரிய மொழி சொல்லித்தர வேண்டும். இன்னும் பிரெஞ்ச்,
ஜெர்மன் என்று இருந்தால் எப்படி? இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு. நம்
மாணவர்கள் சீனம், கொரியன், யப்பானியம் பேச வேண்டும். அப்போதுதான் விட்டுப்போன
உறவுகள் வலுப்படும்.
மிக அதிசயமாக கொரிய மொழியில் தமிழில் இருக்கும் சிக்கலெல்லாம் இருக்கின்றன 😉
அம்மொழியில் Coffee என்று சொல்ல முடியாது. தமிழில் சொல்வது போல் ‘நல்ல காப்பி’
ஒண்ணு போடப்பா! என்றுதான் சொல்லணும். ஏனென்றால் அங்கு f ஒலி கிடையாது. “Waqf
Board” என்பதை நிச்சயமாக கொரியன் மொழியில் எழுத முடியாது நாம் எழுதுவது போல்,
‘வக்போர்டு’ என்றுதான் எழுத வேண்டும். அதே போல் ‘ghazals’ என்பதை தமிழில்
உள்ளது போல் ’கசல்’ என்றுதான் எழுத வேண்டும். அப்படியெனில் ‘ஜ’ ஒலி இல்லையா
என்றால், உண்டு! தமிழில் செய்வது போல், ‘ராசா’ என்று எழுதிவிட்டு, ‘ராஜா’
என்றும் கூப்பிடலாம். ஏனெனில், தமிழில் உள்ளது போல் ‘ஜ’ விற்கு தனி எழுத்து
கிடையாது. ’புஷ்பம்’ என்று கொரிய மொழியில் எழுத முடியாது. எங்கள் பள்ளி
வாத்தியார் சொல்வது போல், ‘புட்பம்’ என்றும் சொல்லலாம், ”தம்பி சொல்வது” போலும்
சொல்லலாம்! என்று இருக்கும் (எங்க வாத்தியாருக்கு ‘ஷ்’ வராது . ’க’ Gha
பிரச்சனை அங்கும் இருக்கிறது. Pusan என்றும் எழுதலாம் Busan என்றும்
எழுதலாம், ஏனெனில் கொரிய மொழியில் வித்தியாசமில்லை. Sweta என்பதைத் தமிழில்
எழுதுவது போல் ‘சுவேத்தா’ என்றுதான் எழுத வேண்டியிருக்கும் (ஸ்வேதா என்றில்லை.
ஏனெனில் தமிழில் இல்லாதது போல் அங்கும் ‘ஸ்’ ஒலிக்குறிப்பு இல்லை).
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சேஜோன் ‘சித்தம்’ எழுத்துமுறையைக்
கைகொண்டு ’ஹங்குல்’ வரிவடிவம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்தப்
பழமையான முறையில் நான் மேற்சொன்ன ஒலிகளுக்கெல்லாம் வரிவடிவங்கள் உள்ளன. கொரிய
ஹங்குலில் இல்லை. இன்னும் சுவாரசியமாக பண்டைய தமிழக முறையில் உள்ளது போல்
கூட்டு எழுத்து ஹங்குலில் இருக்கிறது. என் தந்தை கூட கூட்டு எழுத்து எழுதுவார்.
கொரிய மொழியில் அது முடியும்!
சித்தம் எழுத்து என்பது பௌத்த நூற் பயன்பாட்டில் இருக்கலாம். இங்கு ஓம் என்பதை
சித்த எழுத்தில்தான் எழுதுகிறார்கள். ஆனால் சேஜோன் யோசித்தது, பாமரனும்
பயன்படுத்தும் ஒரு எளிய மொழி வரி வடிவம். ஏனெனில் இம்மொழி சீனம் போன்ற ஒலி மொழி
அல்ல (tonal language). தமிழ் போல் உள்ள மொழி. தமிழில் ’மேகம்’ என்று
எழுதுவிட்டு மேஹம் என்போம். இங்கும் அது முடியும் (not the exact word but the
possibility). தமிழில் உள்ளது போல் ‘பேச்சு மொழி’ எழுத்து மொழியிலிருந்து
வெகுவாக மாறுபடும். ஆனால் எழுதும் போது செந்தரமாக்கப் பட்ட முறையில்தான் எழுத
வேண்டும். ‘எங்கடா மேஞ்சிட்டு வரே?’ என்று கேட்டால் ‘கூரை மேஞ்சுட்டு வரேன்’
என்பது போல் கொரிய மொழியில் பேசமுடியும். சொல் பிறழ்ச்சி என்பது இங்கும்
அனுமதிக்கப்படுகிறது.
இதையெல்லாம் அந்த ஹூபெல்ட்டு பாதிரியார் பார்த்துவிட்டுத்தான் மொழி ஒற்றுமை
இருக்கு என்று சொன்னாரா? என்று எனக்குத்தெரியாது. ஆனால் அவர் கண்ணிலும் இந்த
மொழி ஒற்றுமை பட்டிருக்கிறது.
ஆனால் பாதிரியார் பார்த்திருக்க முடியாத ஒரு விஷயம் சேஜோன் மன்னன் தமிழ் கணக்கு
முறையையும் எழுத்தில் சேர்த்ததுதான். நெடுங்கணக்கு என்பதை அட்சரசுத்தமாகக்
கையாண்டு இருக்கிறான். எப்படி என்கிறீர்களா?  0 + 1 என்னும் போது 0
மதிப்பில்லை. ஆனால் ஒன்றுக்குப்பிறகு அதே பூஜ்யம் (சுழி) வரும் போது பத்து
எனும் 10 மடங்கு கூடுதல் மதிப்பு வந்து விடுகிறது. அது போல் கொரியன்
உயிர்/உயிர்மெய்யெழுத்திற்கு முன்னால் 0 வரும் போது அதற்கென ஒலி கிடையாது
(மதிப்புக் கிடையாது அதாவது அ என்று எழுதும் போது 아 வரும் 0 மதிப்பில்லை).
ஆனால் இதே 0 ஒரு உயிர்மெய்யிற்குப் பின் வந்தால் ‘ங்’ எனும் ஒலி பெருகிறது.
உதாரணமாக சேசோங் என்பதில் 세청 ’சோ’விற்குக் கீழே (இரண்டாவது எழுத்து) 0 வரும்
போது ஒலி பெறுகிறது எனவே சொங் அல்லது சோங் (குறில், நெடில் பற்றியெல்லாம் ஆராய
வேண்டியுள்ளது!).
எனவே என் யூகம் என்னவெனில் 15ம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த தமிழோடு ஒரு புத்த
பிட்சு அங்கு போயிருக்க வேண்டும். சேஜோன் அரச சபையில்
மொழி ஆக்கத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அப்போது தமிழ் வரிவடிவங்களுக்கு ஒத்த
வடிவங்களை ஹங்குலில் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். கீழே உள்ள தமிழ் வரி வடிவப்
பரிணாமத்தைப் பார்த்தால் 15ம் நூற்றாண்டில் இப்போதுள்ள எழுத்துமுறை நடைமுறைக்கு
வந்துவிட்டது என்பது தெரியும்.


இப்போது கீழேயுள்ள படங்களைப் பாருங்கள் (இவை முன்பு மின் தமிழில் வந்தவைதான்).
வரிவடிவ, நெடுங்கணக்கு ஒற்றுமை தெளிவாகும்.

முதல் எழுத்து, உயிர் எழுத்து. மேலே தமிழ், கீழே கொரியன்.

உயிர் மெய் உருவாகும் விதம்.

கூட்டு எழுத்துமுறை காண்க. முன்பு ‘க்கி’ என்பதைக் கூட்டாக தமிழில்
எழுதமுடியும்.

நமது ‘ல’ எழுத்து அப்படியே கொரிய ஹங்குலில் இருப்பது ஆச்சர்யம் இல்லையா?
இப்படியெல்லாம் நான் எழுதும் போது உடனே தமிழர்கள் நான் என்னமோ கொரிய மொழி
தமிழிலிருந்து வந்தது என்று சொல்ல வருகிறேன் என்று அவசரப்பட்டு முடிவிற்கு
வருகின்றனர். எனவே மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இரண்டு
மொழிகளுக்கும் ஒற்றுமை இருக்கிறது. நான் பேசுகின்ற விஷயத்தைப் பற்றி Stephen
A.Tyler எனும் மொழியியல் அறிஞர் (Tulane University) தனது ’Dravidian and
Uralian: The lexical evidence’ எனும் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு
பதிவிடுகிறார், “In conjuction with the present materials and with
Collinder’s materials for the relation between Uralic and Altaic can
probably be taken as further evidence for a ‘super family’ consisting of
Dravidian, Uralian and Altaic. As an item of historical interest, Uralic and
Altaic are precisely the language groups Caldwell called ‘Scythian’. In view
of the probable inclusion of Korean in the Altaic family, it is also
interesting to note that Hulbert attempted to demonstrate a relationship
between Dravidian and Korean!
ஆக, செம்மொழி மாநாட்டிற்கு உகந்த தலைப்பாக அல்லவோ இந்த ஆய்வு அமைகிறது.
வாய்ப்பை நாம் நழுவ விடலாமா?
அப்படியே அச்சாக தமிழ் என்றால் பிரச்சனை இல்லையே! மருவிட்ட மலையாளமே
நமக்குப் புரியவில்லை. மொழியிலார் பேசுவது புரோட்டா திராவிட மொழிக்
குடும்பம் பற்றி. உரால் மலையில் நம் முன்னோர்கள், மங்கோலிய மொழியினருடன்
வாழ்ந்த காலம். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்? கொரிய மொழி மங்கோலிய
மொழியிலிருந்து பிரிகிறது, நிறைய சீன மொழி வளத்தை எடுத்துக் கொண்டு
வளர்கிறது.
தமிழ் மொழிக்கான தொடர்பு பல வழிகளில் அங்கு போய் சேர்கிறது.
1. ஒத்த ஒரு தாய் மொழியிலிருந்து இரண்டும் கிளைத்திருக்கலாம் (ரொம்பப் பழைய கதை)
2. சங்கால வணிகத்தில் பட்டுப்பாதை வழியாக மொழிப்பரிமாற்றம்
நடந்திருக்கலாம் (சரித்திர காலம்)
3. பௌத்தம் அங்கு தழைத்தோங்கிய காலத்தில் நமது போதிதர்மர் அங்கு சென்று
பௌத்தமும் தமிழும் அளித்திருக்கலாம் (7 AD முன்)
4. 15ம் நூற்றாண்டில் சேஜோன் ஆண்ட காலத்தில் தமிழ் மீண்டும் வரிவடிவ
ஆக்கத்தில் பங்கு கொண்டிருக்கலாம்.
> இது சீன படிவமாக இருப்பதால். சீன மொழியில் எவ்வாறான பலுப்பல் ஏற்படுகின்றது என்பதையும் பார்க்க வேண்டுமோ??!!
தேவை இல்லை. இவள் நேரடியாக இந்தியாவிலிருந்து கொரியா வருகிறாள். வரும்
போது சில கற்களைக் கொண்டு வருகிறாள். அது அருங்காட்சியகத்தில் உள்ளதாம்.
அந்தக் கல் தமிழகக் கல்லா என்று ஆராய வேண்டும். அவள் மீன் சின்னத்துடன்
வருகிறாள். பாண்டிய இளவரசியாக இருக்கலாம்.
நம் மாணவர்கள் மானியம் பெற்று கொரியமும் (ஹங்குல்), சீனமும் கற்று கொரியா வந்து
ஒவ்வொற்றுமைகளைக் கண்டு ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்தும் செய்யலாம்.
ஆனால், மிக முக்கியமான ஒரு தரவு கொரியாவில் உள்ளது. அது சீனத்தில் எழுத்தப்பட்ட
ஒரு குறிப்பு. அது ஹியோ என்ற இந்திய அரசி (அது என்ன பெயர் என்று கண்டு பிடிக்க
வேண்டும்), கொரியா வந்து சுரோ மன்னனை மணந்து கொரிய சந்ததியினரை உருவாக்கினாள்
என்கிறது. அவள் ‘அயோத்’ எனும் இடத்திலிருந்து வந்தாள் என்கிறது. வட இந்திய
சரித்திரவியலர் உடனே அது ‘அயோத்யா’ என்று தீர்மானம் செய்து அங்கு இந்த அரசிக்கு
நினைவாலயமே கட்டிவிட்டனர். முதலில் கொரிய பலுப்பலில், ‘ஹியோ’ என்னும் பெயர்
இந்திய பலுப்பலில் எதைக்குறிக்கும் என்று கண்டு பிடிக்க வேண்டும். தமிழ்
பெயர்கள் கர்நாடகா, ஆந்திரா போகும் போதே பலுப்பலில் மாறுபடுவதைக் காண்கிறோம்.
கொரியா எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளது என்று யோசிக்க வேண்டும்! ஹியோ
என்னும் பெயர் தமிழ் பெயரின் மரூவுவாக இருந்தால், ‘அயோத்’ என்பது எந்த ஊர்
என்று கண்டு சொல்ல வேண்டும். மூலபாடத்தை படிக்க முடிந்தால்தான் மேற்கொண்டு
நகரமுடியும். அயோத்தியில் கோயில் கட்டியவர்களெல்லாம் ஆங்கில மொழி பெயர்ப்பை
வைத்துக் கொண்டு முடிவிற்கு வந்திருக்கின்றனர். நாமாவது மூலத்திலிருந்து
ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
இதுவே என் வேண்டுகோள். இதை மாணவர்களிடம், ஆய்வாளர்களிடம் சொல்லத்தான் நான்
புதுவை சென்றேன். எனது விரிவான இப்பேச்சு ‘தமிழ் இணையம் 2010’ கருத்தரங்கில்
முரசொலி மாறன் அரங்கில் அமைந்துவிட்டது. எத்தனை தமிழ் அறிஞர்கள் கேட்டிருப்பர்
என்று தெரியாது. சில தமிழாசிரியர்கள் சபையில் உடனே ஆர்வம் காட்டினர் (நன்றி).
இதன் விழியம் (வீடியோ) இதுவரை கிடைக்கவில்லை. எனவே நானே புதுவை செல்லும் ஒரு
வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன் (வீட்டில் ஒரே திட்டு ’வந்து உருப்படியாக
வீட்டில் இருந்தானா, வந்த கதை போன கதை சொல்வானா? என்றால் காலில் சக்கரத்தைக்
கட்டிக்கொண்டு அலைகிறானே’ என்று). என் திட்டத்தைச் சொன்ன பத்தவது நிமிடத்தில்
என் பேச்சை புதுவைப் பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழ் புலத்தில்
ஏற்பாடு செய்துவிட்டார் (நன்றி). அங்கு மாணவர்கள் மிக ஆர்வமாகக் கேட்டது எனக்கு
மகிழ்ச்சி. பலர் தமிழ் மரபு அறக்கட்டளை தரவுகளை தங்கள் ஆய்விற்கு
பயன்படுத்துவதாகச் சொன்னது மட்டில்லா மகிழ்வைத் தந்தது.